யாழினி
தன் அடிவயிற்றில் வலியை உணர்ந்தவளின் தூக்கம் களைந்தது. முகச்சுழிப்புடன் முழித்தவள், குளியலறைக்குள் நுழைந்தாள். குளியலறையில் இருந்து வெளியே வந்தவள் தன் உடமைகளில் ஏதோ தேட, அது இல்லை என்று உணர்ந்தவள், பதட்டமானாள். ( எங்க போச்சுன்னு தெரியலயே! எனக்கு எடுத்து வச்ச ஞாபகம் இருக்கே! இப்போ என்ன பண்றது? ) இன்னொறு முறை அவள் தேட, தான் தேடுகின்ற பொருள் இல்லை என்று உணர்ந்தாள். ( சரியான லூசுதான்டி நீ! எத எத மறக்கனும்னு ஒரு வெவஸ்த இல்ல? இப்ப என்ன பண்றது!) அறையின் குறுக்கும் நெடுக்கும் நகர்ந்தவள் வேறு வழியின்றி ஒரு முடிவுக்கு வந்தாள்.
கௌதம்
தன்னை யாரோ எழுப்ப முயற்ச்சிப்பதை உணர்ந்தவனின் காதுகளில் யாழினியின் குரல் ஒலிக்க, கண் திறந்தவனின் கண்களில் யாழினியின் பதட்டமான முகம் தென்பட்டது. "என்னாச்சு யாழினி! ஏன் பதட்டமா இருக்க? " என்று அக்கறை தொனித்த குரலில் கேட்டான். பதில் கூற யாழினி தயங்க, அவளது தயக்கம் அவனை குழப்ப, இன்னொறு முறை தன் கேள்வியை கேட்டான். "கௌதம்... நீங்க தப்பா நினைக்கலேனா எனக்கு ஒரு ஹுல்ப் பண்ணமுடியுமா? " என்று தயக்கிய குரலில் கேட்க, " உன்னைய நான் ஏன் தப்பா நினைக்க போறேன்? என்ன ஹுல்ப் பண்ணனும்னு சொல்லு யாழினி. " என்று அவன் கேட்க, தன்னை தானே சமாதானம் செய்து கொள்ளவதுப்போல் ஒரு பெருமூச்சி விட்டவள், " எனக்கு நப்கின் வாங்கி தர முடியுமா பிளிஸ். நான் எடுத்து வைக்க மறந்திட்டேன். " என்று அவள் கெஞ்சும் குரலில் கேட்க, கௌதம் குழப்பமாக யாழினியிடம், "என்ன வேணும்னு கேட்ட யாழினி? என் காதுல சரியா விலலனு நினைக்கிறேன்." என்று அவன் நிதானிக்க, யாழினி, "சனிட்டரி நாப்கின். " என்று முடித்தாள்.
காலை என்பதால் சூப்பர் மார்க்கெட் அனைத்தும் பூட்டி இருக்க ஃபார்மஸியை தேடினான். காரில் இருந்து இறங்கியவன் தயங்கியவன், மறுபடியும் காரில் அமர்ந்தவன், குழப்பத்தில், ஸியரிங்கில் தலை சாய்தான். என்ன செய்வது என்று பெருமூச்சி விட்டான். ( இதுல என்ன இருக்கு கௌதம்! கமான் மேன் அப் கௌதம். ஷீ இஸ் சஃபரிங், திஸ் இஸ் தி லீஸ்ட் யு கேன் டூ. போ, நாப்கீன்னு கேளு, அவுங்க தர போறாங்க. தாட்ஸ் இட்.) ஒரு பெருமூச்சி விட்டவன், காரில் இருந்து இறங்கி, பார்மஸிக்குள் சென்றான். அங்கு இருந்த பெண்ணிடம், " சிஸ்டர்! நாப்கின் தாங்க. " என்று கேட்க, அவர் கொடுத்ததை வாங்கியவன் பெருமூச்சோடு காரை நோக்கி நடந்தான்.
YOU ARE READING
காதல் காற்று வீசும் நேரம்
ChickLit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.