அதிர்ச்சி

4.3K 158 21
                                    

வீட்டில் நடந்தவற்றை சுந்தராமனிடம் கூறினாள் பத்மா. அதை கேட்ட சுந்தரராமன் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தார். அவரை வியப்பூடன் பார்த்த பத்மா "நான் என்ன காமெடியா சொல்லிட்டு இருக்கேன் நல்ல வேலை மாப்பிள்ளை அதை சீரியசாக எடுக்கல." என்று ஒரு குற்றப் பார்வையை யாழினியின் மீது வீசினாள். அதற்கு யாழினி, "பாருங்கப்பா அம்மா இப்பெல்லம் எதுக்கெடுத்தாளும் என்னைய திட்றாங்க." என்று நாய்குட்டிபோல் தன் முகத்தை வைத்துக் கொண்டாள். அந்தபார்வையை கண்ட தந்தையோ, "ஆமா, நீ ஏன் என் பொண்ண திட்டுற? அவா என்ன பண்ணிட்ட? தெரியாம தண்ணீ ஊத்திட்டா அவ்வளவுதானே. அதுக்கெல்லாம் என் பொண்ண திட்டாத." என்று கூறினார். "அவா மேல தப்பு இல்ல எல்லாம் நீங்க கொடுத்து வச்சிருக்கிற செல்லம் தான். என் பொண்ணு, என் பொண்ணுனு செல்லம் கொடுத்தே அவளை கெடுத்து வச்சிருக்கீங்க! இரண்டுபேரும் என்னமும் பண்ணுங்க. " என்று அவர் அங்கிருந்து நகர்ந்தார். யாழினி தன் தன் தந்தை அணைத்து " ஐ லவ் யு அப்பா! " என்று அவர் தோலில் சாய்ந்தாள்.
🌟🌟🌟

ஞாயிறு காலை என்பதால், மெதுவாக துயில் எழுந்தாள் யாழினி. சோம்பலை முறித்தவள், செல்போனை எடுத்தாள். சிறிது நிமிடம் கழித்து தன் குளியல் அறைக்குள் நுழைந்தாள். குளித்துவிட்டு, அன்னையை தேடி சென்றாள். ஹாலில் காஃபி அருந்தி கொண்டிருந்த அன்னையை பார்த்தவள், "குட் மார்னிங் அம்மா! " என்று புன்னைகையுடன் கூரினாள். சோபாவில் அமர்ந்து செய்திதாளை புரட்ட ஆரம்பித்தாள். அவள் அருகில் அமர்ந்திருந்த அன்னை காஃபி டம்ளாருடன் எழ யாழினி , "அம்மா கொடு நான் சிங்ல வச்சிட்டு வாரேன்." என்று அதை வாங்கி சமையல் அறையை நோக்கி நடந்தாள்.

திரும்பி வந்தவளிடம் பத்மா, "யாழினி! என்னமா தல துவட்டிருக்க பாரு முடில இருந்து இன்னும் தண்ணீ சொட்டுது. போ! போய் டவல் எடுத்துட்டு வா நான் துவட்டி விடுறேன்." என்று அக்கறையுடன் கூற அவளும் துண்டை எடுத்து வந்தாள்.அவளுக்கு தலை துவட்டிக் கொண்டிருந்தாள் பத்மா, அப்போது "ம்! கல்யாண பொண்ணுக்கு இன்னும் அம்மாதான் தலை துவட்டனுமா? " என்ற கேள்வி வந்தபுறம் இருவரும் பார்த்தனர். "அக்கா! "என்று தன் அக்காவை அணைத்துக்கொண்டாள் யாழினி. அவளது காலை யாரோ அனைத்திருக்கும் உணர்வில் கீழே பார்த்தாள் யாழினி, "டேய்! தேஜ்! கண்ணா எப்படி இருக்க என்று அவனை தூக்கிக் கொண்டாள். "வா! நக்ஷத்திரா எப்படி இருக்க? மாப்பிள்ளை வரலையா? " என்று பத்மா கேட்க, "இல்லமா அவுங்க வேலை விஷயமா பெங்களூர் போய்ருக்காங்க." என்று பதில் அளித்தாள் நக்ஷத்திரா. "சரி போய் குளிச்சிட்டு ஃப்ரெஸ் ஆகிட்டு வா! "என்று அவளை அனுப்பினாள் பத்மா.

காதல்  காற்று வீசும் நேரம்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon