அன்பு மகள்

6.6K 219 13
                                    

தோளில் ஒரு பையும் கையில் ஒரு பெட்டியுமாய் ரக்ஷன் நின்று கொண்டிருந்தான்.

"டேய் ரக்ஷா! "என்று யாழினி கூற, "என்னடா! தீடீர்னு, நாளைக்கு தானே வர்றதா சொன்ன? "என்று வினாவினாள் பத்மா .
"ஹாஸ்டலில் இருந்து விரட்டி விட்டிருபாங்க! "என்று யாழினி சிரித்துக்கொண்டே கூற, "அப்படியெல்லாம் இல்லமா, சர்பரைஸ்சா இருக்கட்டுமேனுதான் வந்தேன் " என்றான்.

ரக்ஷன், சென்னையில் பி.இ. பைனல் இயர் பயில்கிறான், யாழினியின் தம்பி.

"சரி அதையெல்லாம் விடுங்க, ஏதோ கண்டிஷன்னு சொல்லிட்டு இருதீங்களே, என்ன கண்டிஷன்? " என்று வினாவினான்.
உடனே அனைவரின் தலையும் யாழினியின் பக்கம் திரும்பியது.முதலில் தயங்கிய யாழினி பின்பு "நான் என்ன சொல்ல வந்தேன்னா, அது.............நான் சேலையெல்லாம் கட்டிட்டு பொம்ம மாதிரியெல்லாம் நிற்க மாட்டேன்." "அப்ப வேற என்ன செய்வ? "என்று குழம்ப, "நல்ல கேட்டுகோங்க! நான் இந்த படத்துல வர்ற மாதிரி சேலைகட்டிகிட்டு, பூ வச்சிகிட்டு காபி யோட வந்தெல்லாம் நிற்கமாட்டேன்." என்று கூற, பத்மாவின் முகத்தில் குழப்ப ரேகை அப்பட்டமா தெரிந்தது."வேணும்னா கோவிலுக்கு போவோம், அங்கேயே அவர்களை பார்த்துவிட்டு போக சொல்லுங்கள்" என்று முடித்தாள் .

அவளது முடிவை மாற்ற ஆண்டவனாலும் முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். திருமணமே வேண்டாம் என்று கூறியவள் இதுவரை வந்ததே பெரிய விஷயம் என்று கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு ரக்ஷனுக்கு உணவு பரிமாரினாள் பத்மா .

பின் ரக்ஷனும் யாழினியும் தங்கள் அறைக்குள் புகுந்தனர்.கதவை தாளிட்டுவிட்டு படுக்கையை சரிசெய்து கொண்டிருந்தாள் யாழினி. அப்போது ரக்ஷன் "ஏன்கா? நீ இப்படி இருக்க எப்ப பாரு எனக்கு கல்யாணம் வேண்டாம்! வேண்டாம்னு? உனக்கு என்ன குறை கேட்கிறேன்? கல்யாணம் பண்ணிக்கோ அக்கா. லைஃப் சூப்பரா இருக்கும் " என்று கூறிவிட்டு புன்னகைத்தான்.
யாழினி "ஐயா எப்போதிலிருந்து லைஃபப் பத்தியெல்லாம்பேச ஆரம்பிச்சாரு? சரியில்லையே! ஏதாவது விஷேசமா?" என்று குறும்பாக கேட்டாள். இதை கேட்ட ரக்ஷன் யாழினியை முறைத்தான்.
அதை கண்ட யாழினி "சரி! சரி! டென்ஷன் ஆகாத சும்மாதான் கேட்டேன் " என்றாள் .
"அப்பறம் எக்ஸாம் எல்லாம் எப்படி எழுதின? " என கேட்டாள். "ம்! ம்! சூப்பரா எழுதினேன் " என புன்னகைத்தான்.
அவனை கண் இமைக்காமல் பார்த்தவள் "என்னுடைய தம்பி ரொம்ப அழகா இருக்கானே! " என்றாள்.
உடனே ரக்ஷன் "என்னுடைய அக்கா மட்டும் எப்படி இருக்காளாம்? " என்று கேட்டுவிட்டு யாழினியின் கன்னத்தை கிள்ளினான்.
"ஆ! வலிக்குதுடா!" என்றாள் .
"ஓ! பாப்பாவுக்கு வலிச்சிட்டா " என்று கிண்டலடித்தான். சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் உறங்கி போனார்கள்.

தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு, தன் அறைக்கு நகர்ந்தாள் பத்மா, கட்டிலில் சுந்தர ராமன் அமர்ந்து எதையோ, யோசித்து கொண்டு இருந்தார். அறைக்குள் சென்ற பத்மா தன் கணவரிடம் "இந்த பொண்ண என்னதான் பண்றது? " எனக் கூற, அவர் "ஏன் அவ என்ன பண்ணுனா? " என வினாவினார்.
"பின்ன என்னங்க எப்பப்பாரு நான் கல்யாணம் பண்ண மாட்டேன்! , பொண்ணு பார்க்க யாரும் வர கூடாது! இப்படியே சொல்லிட்டு இருந்தா என்ன அர்த்தம்?"என்றாள் பத்மா.
உடனே சுந்தர ராமன் "ஏன் அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு? எந்த ஆணும் மாப்பிள்ளை பார்க்க போகும் போது, அவன் பட்டு வேட்டி சட்டையெல்லாம் போட்டுட்டு வந்து பொம்ம மாதிரி நிற்கிறது கிடையாது. அப்போ பொண்ணு மட்டும் ஏன் நிற்கனும்? " என்றார்.
உடனே பத்மா "அவள சொல்லி குற்றம் இல்ல... உங்க வளர்ப்பு இல்ல அப்படிதான் இருப்பா! " என்று சலித்து கொண்டாள்.
சிரித்து கொண்டே சுந்தர ராமன், "ஒரு உண்மைய சொல்லவா பத்மா, யாழினி நல்ல படிக்கும்போது, இப்போ நல்ல வேலையில இருக்கும் போது எல்லாம் அவள நினைச்சு சந்தோஷமா இருக்கும். ஆனா இன்னைக்கு பெருமையா இருக்கு! "என்றார்.
இதை கேட்ட பத்மா புன்னகைத்துவிட்டு "சரி அவங்கள நாளைக்கு கோவிலுக்கு வர சொல்லனுமே! " என்றாள்.
"அதை நாளைக்கு காலைல சொல்லிக்கலாம், இப்போ நிம்மதியா தூங்கு. " என்றார். இருவரும் உறங்க சென்றார்கள்.

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

Editing credit to Srinidhisweety

If u enjoyed the update plssssssssssss vote and comment☺☺☺☺
It means a lot to me .
Thank u for reading.
BYE⭐⭐⭐⭐⭐

காதல்  காற்று வீசும் நேரம்Where stories live. Discover now