கௌதம்
"நீங்க இல்லாம எனக்கு போர் அடிக்கும் கௌதம்." என்று சிறுபிள்ளைப் போல் யாழினி சினுங்க, கௌதம், "நான் என்ன பண்றது யாழினி! ப்ராஜெடோட டேட் முடியபோகுது." என்று கூறியபடியே காலை உணவை உண்டான். "யாழினி, நான் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வரேன். சரியா?" என்று அவன் சினுங்குகிறவளை சமாதானப்படுத்தினான். "இல்ல! நீங்க சும்மாதான் சொல்றீங்கனு எனக்குத் தெரியும். ரொம்ப ஸ்டெர்ஸ்ப் புஃல்லா இருக்கா கௌதம்." என்று கவலை தொனித்த குரலில் வினாவினாள். அவளது சுருங்கிய முகத்தைப் பார்த்தவன், "அப்படியெல்லாம் இல்ல யாழினி. எப்பவுமே நடக்கறது தான். சன்டே வொர்க்குக்கு போறதெல்லாம் பழகிருச்சு யாழினி. இந்த வாரம் மட்டும்தானே, நீ இத நெனச்சுக்கிட்டு இருக்காத. உன்னோட லீவ என்ஞாய் பண்ணு." என்று அவன் புன்னகையோடு கூறினான்.
தன் உடமைகளை எடுத்தவன், தன் வாகன சாவியை எடுத்துக் கொண்டு பணிக்குச் செல்ல தயார் ஆனான். அவன் செல்ல பைக்கில் அமர, அவனிடம் ஓடி வந்த யாழினி, "கௌதம்! லன்ச்ச மறந்திட்டுப் போறீங்க." என்று அவனிடம் வந்துக்கொடுத்தவள்,"பைக்கிலையா போறீங்க கௌதம்?" என்று கேட்க. தலையை ஆன்டினான் கௌதம். "ஓகே. பாய்!" என்று அவள் புன்னகையோடு கை அசைக்க, அவளை தன் அருகில் இழுத்து, நெற்றியில் இதழ் பதித்து, அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், அவளது எண்ணக்குதிரை ஓட ஆரம்பிக்கும் முன் தன் வாகனத்தில் வெளியே விரைந்தான்.தன் இதழை தொட்டவன், உதட்டில் புன்னகையோடு அலுவலகம் விரைந்தான்.
பால்கனியில் நின்று மழையை ரசித்துக் கொண்டிருந்தவளை, காலிங் பெல் ஓசை அழைக்க, கதவை திறக்க சென்றாள். கதவை திறந்தவள், "கௌதம்! ஏன் இப்பிடி நனைச்சிருக்கீங்க?" என்று அதிர்ச்சியாக கேட்டவளிடம், "பாத்தா எப்படி தெரியுது? மழைல நனைச்சிட்டே வந்தேன் யாழினி." என்று பதில் கூறியவனைப் பார்த்து, "நின்னு வந்துருக்கலாம்ல கௌதம்?" அக்கறையாக கேட்டவளிடம், "மழை நிக்கிற மாதிரி எனக்கு தோணல. அதான் வந்திட்டேன்."என்று கூறியவன் வீட்டிற்க்குள் நுழைந்து கதவை முடினான். தன் அறை நோக்கி அவன் நடக்க, அவனது கையை பிடித்து நிறுத்தியவள், "நானே டிரெஸ் எடுத்துட்டு வரேன். நீங்க வீடு புஃல்லா ஈரம் ஆக்கிருவீங்க." என்று கூறியவள் அவர்களது அறை நோக்கிச் சென்றாள்.
BINABASA MO ANG
காதல் காற்று வீசும் நேரம்
ChickLit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.