யாழினி
அவள் பரப்பரப்பாக பணிக்கு கிளம்பி கொண்டிருந்தாள். பணிக்கு கிளம்பி, அறையைவிட்டு வெளியே வந்தவன், பதட்டத்தோடு மதிய உணவை தயார்படுத்திக் கொண்டிருந்தவளைப் பார்த்தான் "யாழினி நீ போய் வேலைக்கு கிளம்பு. நான் லஞ் பேக் பண்றேன்." என்று அவள் கைகளிலிருந்து கரண்டியை வாங்க கை நீட்ட, யாழினி, "இல்ல கௌதம். பரவாயில்ல, நான் பண்ணிருவேன்." என்று மறுக்க, "யாழினி! குளிச்ச தல கூட அப்படியே இருக்கு உனக்கு. போ, போய் முதல்ல தலைல்ல உள்ள துண்ட அவுத்துட்டு, தலைய துவட்டு, நான் இத ரெடி பண்றேன்." என்று அவள் கைகளில் இருந்து கரண்டியை பறித்தவன், டிஃபன் பாக்ஸை தேட, யாழினி சமையலறை விட்டு கிளம்ப சென்றாள்.
கிளம்பி வெளியே வந்தவளைப் பார்த்து கௌதம், "வா! யாழினி சாப்பிடலாம்." என்று டைனிங் டேபிளின் இருத்தவன் அவளை அமர கூறினான். இருவருக்கும் காலை உணவை தட்டில் வைத்தவன், ஒரு தட்டை யாழினியிடம் கொடுத்துவிட்டு, அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து தானும் உணவு உண்டான். "யாழினி. வரும்போதும் நானே உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்." என்று கூற யாழினியும், "ஓகே." என்று புன்கைத்தாள்.
அவளை அவளது அலுவலகம் முன் இறக்கிவிட்டவன், "பாய்." என்று புன்னகையோடு கை அசைத்தவன் தன் அலுவலகம் நோக்கி காரை செலுத்தினான்.
கௌதம்
தன் அலுவலகம் உள்ளே சென்றவனை பார்த்த கார்த்திக், "டேய் வாடா, புது மாப்பிள எப்படி இருக்க?" என்று புன்னகையோடு வரவேற்றான். "ம்.. நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க?" என்று கேட்க, "நான் இருக்குறது இருக்கட்டும் ஹனிமூன் போகலயா மச்சான்?" என்று கேட்க, (இவன் வேற! நான் இன்னும் அவுட்டிங்கே போகல இதுல ஹனிமூன் வேற.) "இல்லட மச்சான்! உன்ன மாதிரி அடி எல்லாம் என்னால வாங்க முடியாது." என்று அவன் வேண்டுமென்றே கார்த்திக்கை சீண்டினான். அவன் கூறியதை கேட்டவன், "இப்போ நான் என்ன கேட்டேன், நீ என்ன சொல்ற? ஹனிமூன் போகலயானு கேட்டது தப்பா? அதுக்கு என்னோட இமேஜ ஏன்டா டமேஜ் பண்ற? " என்று கேட்க, "நான் நடகாததையா சொல்றேன்? அடி வாங்கின தானே அப்புறம் என்ன? " என்று கௌதம் வேண்டுமென்றே வெறுப்பேத்த, "டேய் பூஜா வேணும்னே ஒன்னும் அரையல. பின்னால இருந்து கட்டிபிடிச்சதுனால யாரோ நினைச்சு முகத்த பாக்காம அரைஞ்சிட்டா." என்று கார்த்திக் ஒத்துக்கொள்ள மறுக்க, " கேட் ஆப் இந்தியா முன்னாடி நின்னுகிட்டு இப்படி பண்ணேணா இப்படிதான் அர விழும்." என்று கௌதம் மேலும் விவரிக்க வாய் திறக்க, கைகளால் அவனை வணங்கிய கார்த்திக், "தெரியாம கேட்டுடேன்டா! நீ ஹனிமூன் போ, இல்ல போகாம இரு" என்றவன் முடிக்க, கௌதமிடம் அனைவரும் வாழ்த்துக் கூற அவனைச் சுற்றித் திரண்டனர்.
YOU ARE READING
காதல் காற்று வீசும் நேரம்
ChickLit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.