கண்களில் தூக்கத்துடன் காரைவிட்டு இறங்கியவள், கௌதமை பின் தொடர்ந்தாள், கௌதம் அவர்களது பைகளை எடுக்க, யாழினியும் அவனுக்கு உதவி செய்ய எண்ணி அவளது உடமைகளை எடுக்க, அவளது கைகளில் இருந்து அதை வாங்கியவன், " நான் எடுத்துட்டு வாரேன். " என்று கூற, யாழினி, " பாரவாயில்ல கௌதம் . நான் எடுத்துட்டு வாரேன். " என்று தூக்கம் தொனித்த குரலில் கூற, " யாழினி... நான் எடுத்துட்டு வாரேன். நோ ப்ராப்ளம்! " என்று மறுத்தான். மனம் வாதாட கூறினாலும் உடலும் கண்களும் தூக்கத்தை தேட, கௌதமை பின் தொடர்ந்தாள்.
"கௌதம்! செமயா தூக்கம் வருது. பெட் ரூம் எங்க இருக்கு? " என்று வீட்டுற்குள் நுழைந்தவள், கண்களை கசக்கினாள். " ம்! வா. " என்று தன் அறையை நோக்கி யாழினியை அழைத்துச் சென்றான். "குட் நையிட். " என்று கூறியவள் மெத்தையில் சரிந்தாள்.
கௌதம்
மெத்தையில் குழந்தைப் போல தூங்கி கொண்டிருந்தவளைப் பார்த்தவன் புன்னகைத்தவாறு அவள் அருகில் சென்றான். அவள் முகத்தில் விளையாடிக் கொண்டிருந்த கூந்தலை அகற்றியவன், அவள் நெற்றியில் இதழ் பதித்தான். அவள் உடல் அசைய திகைத்தவன், அவள் கண் விழிக்காமல் இருக்க, பிடித்திருந்த மூச்சை விட்டான். விளக்குகளை அணைத்துவிட்டு மெத்தையின் மறுபுறத்தில் படுத்தான். யாழினியை பார்த்துக் கொண்டிருந்த கண்களை தூக்கம் வந்தடைய கண் உறங்கினான்.
யாழினி
முழிப்புத்தட்ட, கண் விழித்தவள், தான் எங்கிருக்கிறோம் என்று திகைத்தாள். பின் நேற்றையை நிகழ்வுகள் நினைவுக்கு வர நிம்மதி அடைந்தாள். கட்டிலை விட்டு இறங்கியவள், ஒற்றை கையை பின்னந்தலையில் வைத்தவாறு படுத்திருந்த கௌதமை பார்த்துப் புன்னகைத்வாறு குளியலறைக்குள் நுழைந்தாள். குளித்துவிட்டு வெளியில் வந்தவள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்ப மனமில்லாமல் அந்த அறைவிட்டு வெளியே சென்றாள். ஒவ்வொறு அறையையும் சுற்றியவள், என்ன செய்வதென்று தெரியாமல் கொதமின் அறைக்கே சென்றாள். அங்கே அவளுக்கு ஒரு கதவு தென்பட ஓசையின்றி அதை திறந்தாள். திறந்தவளின் கண் முன் சிறு செடிகளுடன்கூடிய பால்கனியை காண புன்னகையுடன் அங்கு நின்று வானத்தைப் பார்த்தாள்.
ESTÁS LEYENDO
காதல் காற்று வீசும் நேரம்
Chick-Lit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.