நான்கு நாட்கள், ஜெயலஷ்மியின் அன்பில்லும், கௌசல்யாவின் கேலிபேச்சுகளிலும் கடந்துவிட, யாழினியும், கௌதமும் சென்னை செல்ல ஆயத்தமானார்கள். "யாழினி உடம்ப பாத்துக்கோ. எதுக்குனாலும் எப்போனாலும் எனக்கு கால் பண்ண யோசிக்காத. சரியாடா? " என்று ஜெயலஷ்மி கேட்க, யாழினியும் தலையாட்டினாள். "பாத்து பத்திரமா போய்ட்டு வா! " என்று யாழினியை அணைத்தவள், கௌதமிடம், "என்னோட மருமகள பத்திரமா பாத்துக்கோடா. " என்று கௌதமிடம், கூற "தங்களது ஆணைபடியே! " என்று குறும்பாக வணங்கினான். மாதவன் கௌதமிடம், " போன உடனே ஃபோன் பண்ணுடா! " என்று வழி அனுப்ப, இருவரும் விடை பெற்றுக்கொண்டனர்.
இருவரும் பயணத்தைத் தொடர, யாழினி கௌதமிடம், "அத்தை, மாமா கௌசல்யாலாம் வந்த நல்லா இருந்திருக்கும்! " என்று சலித்துக் கொள்ள, கௌதம், "ம்! அடுத்த வாரம் வர்ரதா சொல்லிருக்காகல பாப்போம்." என்று கூற, யாழினி, "சே! கௌசல்யாவோட எக்ஸாம்ஸ் அடுத்த வாரம் இருந்திருக்களாம். " என்று பெருமூச்சிவிட்டாள். வெளியே பார்த்துக் கொண்டுவந்தவளின் கண்கள் சொருக, நிறுக்கையில் தலை சாய்த்தாள். நிறுக்கையில் சாய்ந்திருந்த தலை சிறிது நேரத்தில், கௌதமின் தோளில் சாய, இதழ் விரித்தவாறு, காரை செலுத்தினான்.
யாழினி
"யாழினி! எழுந்திரு!" என்ற குரல் கேட்டு கண் விழித்தாள். "வா! யாழினி." என்று கௌதம் அவள் பக்க கதவை திறந்து அவள் பக்கம் நின்றான். "அதுகுள்ள சென்னை வந்துட்டோமா? " என கேட்க, கௌதம், இல்லை என்று தலை ஆட்டினான். "அப்போ எங்க இருக்கோம்? " என்று அவள் கண்களைக் கசக்க, கௌதம், கார் கதவை விரிய திறந்தான். காரை விட்டு இரங்கியவள், கண் விரித்தாள், கண்கள் விரிய கௌதமை பார்த்தாள். கௌதம் புன்னகைத்துவிட்டு "இங்கேயே நிக்க போரியா? இல்ல உள்ள போற ஐடியா இருக்கா? "
என்று புன்னகையோடு கேட்டான்.கௌதம்
"இங்கேயே நிக்க போரியா? இல்ல உள்ள போற ஐடியா இருக்கா? "
என்று புன்னகையோடு கேட்க, யாழினி அவனை அணைத்துக் கொண்டாள். இதை எதிர்பார்க்காத கௌதம் உறைந்தான். முகம் சூடேர புன்னகைத்தவன், அவளை அணைக்கும்முன், அவனிடம் இருந்து தன்னைப் பிரித்தெடுத்தவள், "சாரி! கொஞ்சம் எக்ஸ்ஸய்ட் ஆகிட்டேன்." என்று சிவந்த கன்னத்துடன் தலை குனிய, கௌதம், புன்னகையுடன், "உள்ள போவோமா? " என்று கேட்க, தலை ஆட்டியவள், அவனுடன் சென்றாள்.
YOU ARE READING
காதல் காற்று வீசும் நேரம்
ChickLit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.