கௌதம்

5.8K 209 14
                                    

ஏனோ அந்த கண்கள் சிந்தையிலேயே நின்றது.அங்கு அத்தனை பேர் இருந்தும், யாருக்கும் அதை செய்ய தோணவில்லை, ஏன் அவனுக்கும்தான்.

அன்று மாலை, அவன் மாலுக்கு சென்றிருந்தான். காரைப் பார்க் செய்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணைப் பார்த்தான், அவள் ஒரு வித பயத்துடன் எதிரிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து வந்துக்  கொண்டிருந்தாள். அவளுக்கென காத்திருப்பது போல் நான்கு பேர் கொண்ட இளவட்ட கூட்டம் காத்திருந்தது. அந்த பெண்ணிடம் ஏதோ தகராறு செய்ய போகிறார்கள் என அப்பட்டமாய் தெரிந்தது. அங்கு சுற்றி இருப்பவர்களுள் சிலர் ஆர்வமாகவும், சிலர் செய்வதறியாமலும், இன்னும் சிலர் வேடிக்கையாகவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.அந்த இடத்தை கடக்கவிருந்த பெண்ணைத் தடுப்பதற்காக கையை நீட்டினான், அந்த இளவட்ட கூட்டத்தில் உள்ள ஒருவன்.

அப்போது, எதிர் திசையில் இருந்து ஒரு பெண் ஓடிவந்தாள், ஓடிவந்தவள், தவித்து கொண்டிருந்த அந்த பெண்ணிடம், சென்று "ஏ!!!  ஹாய் எப்படி இருக்க?  என்னப்பா இப்படி  மெலிஞ்சிட்ட,  என்னையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறாயா?  இல்ல மறந்துட்டியா? சரி, மாலினி எப்படி இருக்கா? ",  என வினவிக்கொண்டே அவள் அந்த தயங்கிய பெண்ணை அவனுடைய கார் வரை அழைத்து வந்தாள்,  அதன்பிறகு திரும்பி பார்தாள், அதற்குள் இளவட்ட கூட்டம் ஏதோ பேசிவிட்டுக் கலைந்து சென்றது.

அவர்கள் இல்லை என்றவுடன், அவன் காரின் அருகில் நின்றாள். அவள் ஏதோ கூற வாய் திறக்கும் முன், அந்த தயங்கிய பெண், "அக்கா!  ஒரு நிமிஷம் ,  நீங்க யாருனு எனக்கு தெரியல! அப்பறம் மாலினினு எனக்கு யாரையும் தெரியாது! " என்று குழப்பத்துடன் கூறினாள். "எனக்கும்தான் " என்றாள் அந்தப் பெண். "என்ன? "  என்று குழம்பினாள் அந்த தயக்கமுடைய பெண்.

"ஆமா! நான் ஸ்கூட்டிய பார்க் பண்ணிட்டு இருந்தேன். அப்போ  உன்ன தற்செயலா பார்த்தேன், ஏதோ சரியில்லனு தோணுச்சு. அப்பதான் ஆப்போசிட்ல அந்த பசங்கள பார்த்தேன். நீ அவங்கள பார்த்துதான் பயப்படுற மாதிரி எனக்கு தோணுச்சு. அதான் உன்னைய தெரிந்த மாதிரியே உன்கிட்ட பேசிட்டு, அவங்கள தாண்டி உன்ன கூட்டிட்டு வந்தேன், அவ்வளவுதான்.", என்றாள்  சாதாரணமாக.

குரல் கரகரக்க, "தேங்ஸ்கா! " என்றாள் அந்த தயங்கிய பெண்.
அதற்கு "தேங்க்ஸ் எல்லாம்  எனக்கு வேண்டாம். முடிந்தால் போல்டா அவங்கள பேஸ் பண்ண கத்துக்கோ.எல்லா நேரமும் யாராவது உதவுவாங்கனு சொல்ல முடியாது. ஓகேவா? Bye." என்று புன்னகைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள், அந்தப் பெண்.

அவள் சென்ற சிறிது நேரத்திற்கு பிறகும், அவனது உதட்டில் புன்னகை ஒட்டி கொண்டிருந்தது. "டேய்!  கௌதம் " என்ற சத்தம்  கேட்டு திடுக்கிட்டு திரும்பினான், அவன்.

அங்கு அவனுடைய தங்கை கௌசல்யா நின்று கொண்டிருந்தாள். "நீ என்னைய பார்க்க வந்தியா இல்ல, இப்படி தனியா சிரிக்க வந்தியா? " என்று கோபமாக கேட்டாள்.
"இல்லடி! இன்னைக்கு உனக்கு டிரஸ் வாங்க மாலுக்கு போனேன்ல, அப்போ ..............................."  என்று தொடங்கி தான் கண்டதையும் கேட்டதையும் தங்கையிடம் கூறினான். அதற்கு கௌசல்யா "இதுக்கும் நீ சிரிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்? " என வினாவினாள்.
"இல்ல... இப்படி யோசிச்சுப் பாரு, அந்த இடத்தில நீ இருந்திருந்தேனா, ஒன்னு அந்த இடத்த விட்டு நகர்ந்திருப்ப, இல்லைனா அங்க நின்னு வேடிக்கை பார்த்திருப்ப, அப்படியும் இல்லேனா அந்த பெண்ணோட அவங்க பிரச்சனை பண்ணும் போது தடுத்திருப்ப. ஆனா அந்த பொண்ணு, அந்த பிரச்சனை வர்றதுக்கு முன்னாடியே அதை தீர்த்துட்டா,அதான்." என்று அவன் முடிந்தான்.

அதன் பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். இரவு நேர உணவுக்கு தாய் ஜெயலெஷ்மி  அழைத்தவுடன், இருவரும் உணவு அருந்த சென்றனர். ஏற்கனவே மேசை முன் தந்தை மாதவன் அமர்திருந்தார். மூவரும் சாப்பிட, லெஷ்மி பரிமாரினாள்.

ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

                Thank u 4 reading☺

If u enjoyed the update plsssssss vote and comment about the update. It means a lot 2 me ☺☺☺☺

                        Bye⭐⭐⭐

காதல்  காற்று வீசும் நேரம்Where stories live. Discover now