ஐஸ் க்ரீம்

5.4K 164 68
                                    

கௌதம்

சினுங்கள் சத்தம் கேட்க, உறக்கம் கலைந்தவன், கண்களை திறந்தான். கண்களை வெளிச்சம் பறிக்க, கண்களை சிம்மிட்டியவாறு எழுந்து அமர்ந்தான். கையில் புத்தகத்தை வைந்திருந்தவாறு படுத்திருந்த யாழினியை பார்ந்தவன், அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிய பதறியவன், "யாழினி! என்னாச்சு ஏன் அழுற?" என்று பதற்றத்தோடு கேட்க, அவள் கைகளில் இருந்த புத்தகத்தை மூடியவள், ஒன்றுமில்ல என்பதுப்போல் தலையை ஆட்டினாள். கண்ணீர் நிக்காமல் வடிய, பதறியவன் அவளை அணைத்து, "என்னாச்சு யாழினி? அம்மா அப்பா நியாபகம் வந்திருச்சா?" என்று அவளது தலையை கோதியவாறு கேட்க, அவனது மார்பில் புதைந்தவள், இல்லை என்று தலை அசைத்தாள்.

சிறிது நேரத்தில் அமைதி ஆனவள், நிமிர்ந்து அமர்ந்தாள். "யாழினி.... என்னாச்சு ஏன் அழுத?" என்று சிறு குழந்தையிடம் கேட்பதுப் போல் அவளிடம் கேட்க, "ப்ளேக் எவ்ளோ அரோகண்டா இருக்கான். பாவம் இல்லையா வெனசா. பக்கி... எப்ப பாரு அவள அழ வைச்சிட்டே இருக்கான். நான் அவா இடத்துல இருந்திருந்தேனா... நல்லா ஒரு அரை கொடுத்திருப்பேன்......" என்று அவள் பொறிய, அவன் புறியாமல் குழம்ப, அவள் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்தவனுக்கு புரிய, "சீரியஸ்லி யாழினி! இந்த புக்க படிச்சிட்டா இப்படி அழுத?" என்று அவன் அதிர்ந்து கேட்க, அப்போது தான் தன் நிலை அறிந்தவளின், கண்ணம் சூடேர, கைகளால் முகத்தை மறைத்தவள், "ஓ மை.... திஸ் இஸ் எம்பரைஸ்சஸிங்...." தலையை ஆட்டியவாறு கூற, அவளை பார்த்து சிரித்தவாறு தலை ஆட்டினான். "ப்ளிஸ்.... கௌதம்! சிரிக்காதீங்க. ரொம்ப எம்பரைஸ்ஸிங்கா இருக்கு." என கூற, அவளது முகத்திலிருந்து கைகளை பிரித்தெடுத்தவன், "பின்ன என்ன யாழினி, யாராவது நடுராத்திரி உட்கார்ந்து புக்குல்ல இருக்குற கேரக்டருக்காக அழுவாங்களா? நான் ஒரு நிமிஷம் பயந்திட்டேன்." என்று அவன் கூற, "இல்ல கௌதம். என்னைய பொருத்ததவரைக்கும் இந்த கேரக்டரெல்லாம் எங்கயோ வாழ்ந்துட்டு இருக்காங்க." என்று அவள் கூற, ( ம்கூம்! எங்கயோ இருக்கிறவனோட ப்பீலிங்ஸ் புரியும், பக்கத்துல உட்காதிருக்கிறவனோடது தெல்லாம் தெரியாது. ரொம்ப கஷ்டம் தான் கௌதம்.) அவள் கையில் இருந்த புத்தகத்தை வாங்கி கட்டிலுக்கு அருகே இருக்கும் மேசையின் மீது வைத்தவன், "சரி. போதும் யாழினி. வா! வந்து தூங்கு." என்று அவன் கூற, யாழினி சிறுகுழந்தைப் போல் கௌதமையும் புத்தகத்தையும் மாற்றி மாற்றி பார்க்க, அவளை பார்த்த கௌதம், "யாழினி. நீ எப்படி பாத்தாலும் புக்க தர மாட்டேன். டைம்ம பாரு. ரொம்ப லேட் ஆயிட்டு. தூங்கு யாழினி." என்று அவன் மெத்தையை தட்டினான். "ஆனா, நாளைக்கு சன்டேய் தான கௌதம். இன்னும் கொஞ்சம் வாசிக்கிறேனே. எனக்கு தூக்கம் வேற வரல......" என்று அவள் சிறுகுழந்தைப் போல் உதட்டை குவிக்க, "ம்கூம்.... ரொம்ப லேட் ஆயிட்டு யாழினி. கண்ண மூடி படு தூக்கம் தன்னால வரும்." என்று கூற, அவன் இசைய வாய்ப்பில்லை என்று உணர்ந்தவள், மெத்தையில் கண் மூடி சரிந்தாள். அவளை இமைக்காமல் பார்த்தவன், அவள் சில நிமிடங்களில் உறங்கி போக, (உனக்கு தூக்கம் வரல, இத நான் நம்பனும்.) அவள் நெற்றியில் இதழ் பதித்தவன், புன்னகையோடு எழுந்து விளக்கை அனைத்தவன், மெத்தையில் சரிந்தான்.

காதல்  காற்று வீசும் நேரம்Where stories live. Discover now