கௌதம்
ஜாகிங் சென்றுவிட்டு வந்தவன், கையில் கோப்பையுடன் சோஃபாவில் அமர்ந்துருந்த கௌசல்யாவை பார்த்து, "குட் மார்னிங். " என்று புன்னகையுடன் கூற, அவளும் புன்னகையுடன், "குட் மார்னிங். காஃபி? " என்று கையில் இருந்த கோப்பையை நீட்டி கேட்க, வேண்டாம் என்று தலை அசைத்தவன்,
"ஃப்ரஸ் ஆயிட்டு வரேன் என்று தன் அறையை நோக்கி மாடிக்கு சென்றான்.அறைக்குள் சென்றவனை யாழினியின் தும்பல் வரவேற்றது. தன்னுடைய பையில் ஏதோ தேடிவிட்டு, பெருமூச்சு விட்டு திரும்பியவளின் முகம் சோர்ந்து இருந்தது. " யாழினி! ஆர் யு ஓகே? " என்று கௌதம் கேட்க, "யா! அய்யம் ஃபைன். " என்று சோர்வான குரலில் கூறியவள், மீண்டும் தும்பினாள். ஏதோ சொல்ல வந்தவனை கௌசல்யாவின் குரல் முந்திக் கொண்டது, " அண்ணா! நீ சீக்கிரம் குளிச்சிட்டு வருவியாம், அம்மா சொன்னாங்க. அண்ணி உங்கள அம்மா கூப்டாங்க. " என்று யாழினியின் கரம் பற்றி கீழே அழைத்து சென்றாள்.
குளிக்க சென்றவனை அவனது செல் அழைக்க, அதை எடுத்தான். " ம்! சொல்லு கார்த்திக். " என்று கேட்க மறுமுனையில், "வீட்டுக்கு வந்து சேந்துட்டோம்டா. " என்று கூற, "சரிடா! நான் அப்புறம் பேசுரேன். " என்று ஃபோனை வைத்தவன் குளியலறைக்குள் நுழைந்தான்.
தயாராகி கீழே வந்தவன். "அம்மா! காஃபி!" என்றவாறு சமயலறை நோக்கி சென்றான். சமலறைக்குள் சென்றவன், அடுப்பில் பாலை வைத்துக்கொண்டு இருந்த, அன்னையின் அருகில் நின்றான். அடுப்பில் கஷாயத்தை கண்டவன், "அம்மா! கஷாயம் யாருக்கு? " என்று கேட்க, "யாழினிக்குதான்டா காலைல இருந்து தும்பிக்கிட்டே இருக்க! நேத்து சாப்ட ஐஸ் கீரிம் எதாவது ஒத்துக்கலைன்னு நினைக்றேன். " என்று அன்னை கூறினார். (ஐஸ் கீரிமா? நேத்து அவா எங்க ஒலுங்க சாப்டா? டைட்டானிங் கவுரபோர மாதிரி சோகமா தான் இருந்தா. அவா ஐஸ் கிரிம்லா ஒன்னும் சாப்டலயே.) " அம்மா யாழினி எங்க? " என்று கேட்க, ஜெயலஷ்மி "கொஞ்சம் வெளிக்காத்துப் படடும்னு யாழினியையும் கௌசல்யாவையும் தோட்டத்துக்கு போக சொன்னேன்டா. " என்று கூறியவர் காஃபியை கௌதமிடம் கொடுத்தார்.
YOU ARE READING
காதல் காற்று வீசும் நேரம்
ChickLit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.