கடற்கரை

2.1K 77 26
                                    

காலையில் கண் விழித்தவள், தன் அருகில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பவனை பார்த்தாள். உதட்டில் அவளை அறியாமல் புன்னகை குடி கொண்டது.அவனையே கண் கொட்டாமல் பார்த்தவளது உதடு அவளை அறியாமல் அவனது கன்னம் நோக்கி குனிந்தது. தான் செய்ததை உணர்ந்தவள் சிலையேன உறைந்தாள்.
'என்ன பண்ணி வச்சிருக்க யாழினி! என்னாச்சு உனக்கு!' என்று தன்னை தானே புரியாமல் கேட்டவள், ஒரு கனம் கூட தாமதிக்காமல் அறையை விட்டு வெளியே ஓடினாள்.

ஜாங்கிங் செல்ல கிளம்பியவன், யாழினியிடம் கூறிவிட்டு செல்ல கிச்சனுக்குள் சென்றான். யாழினி ஒரு தூர பார்வையுடன் நிற்க, பால் பொங்கும் நிலையில் இருந்தது, "யாழினி! பால் பொங்குது" என கூற, தன்னிலை உணர்ந்தவள் சட்டென அடுப்பை அணைத்தாள்.
"சாரி கௌதம்.....கவனிக்கல." என்று கூற, "இதுக்கு எதுக்கு யாழினி சாரியெல்லாம். கொஞ்சம் கவனமா இரு..." என்று புன்னகைத்தவன் வெளியே சென்றான்.

அன்று முழுவதும் காலை நிகழ்ச்சியையே மனதில் திரும்ப திரும்ப ஓட்டி பார்த்துக் கொண்டாள்.

மாலையில் அவசரமாக தன் உடைமைகளை எடுத்துக் கொண்டிருந்த கௌதமை பார்ந்த கார்த்திக், "ஏன்டா? ஏன் இவ்வளவு அவசரம்?" என்று கேட்க, " இல்லடா இன்னைக்கு காலைல யாழினி ஒரு மாதிரி இருந்தா. அதான் சீக்கிரம் போன, அப்படியே கடற்கரைக்கு கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன்", என்று தன் உடமைகளை சரி பார்த்துக் கொண்டான்.
"சரிடா. பாய். நாளைக்கு பார்க்கலாம்", என்று கார்த்திக்கிடம் விடை பெற்று கொண்டான்.

யாழினிக்காக அவளது அலுவலகம் முன் காத்திருந்த கௌதம், அவள் வந்ததும், "ஹாய்.." என்று கையை உயர்த்தினான்.
"ஹாய்..." என்று புன்னகைத்தவாரே காரில் ஏறினாள் யாழினி.
"இன்னைக்கு வொர்க் எப்படி போச்சு கௌதம்?" என்று கேட்க, "புது ஃபராஜெக்ட் யாழினி கொஞ்சம் வொர்க்லோட் இருந்தாலும் நல்லா இருக்கு" என்று கூறிவிட்டு புன்னகைத்தான்.
"யாழினி கடற்கரைக்கு போய்ட்டு வீட்டுக்கு போவோமா? உனக்கு டயர்டா இருக்குன்னா வீட்டுக்கு போகலாம். நோ ப்ராப்ளம்" என்று கேட்க,  "அதெல்லாம் ஒன்னும் இல்ல கௌதம், கடற்கரைக்கு போய்யிட்டே வீட்டுக்கு போகலாம்" என்றாள்.

காரை நிறுத்தி விட்டு இருவரும் கடல் நோக்கி நடந்தனர். அவளது கைககளை கோர்க்கலாமா வேண்டாமா என்று உள்ளுக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தியவன்,கைகளை கோர்க்க எண்ணி தயங்கி நடயில் பின் தங்கி நின்றான்.

அவளோடு நடந்து வந்தவன் தனக்கு அருகில் இல்லை என்று உணர்ந்தவள், பின்னால் திரும்பி பார்த்தாள். ஏதோ யோசனையில் கௌதம் நிற்க, "என்னாச்சு கௌதம் என்ன யோசிக்கிறீங்க? வாங்க" என்று அவனது கைகளை கோர்த்தாள். இருவரும் கடலை நோக்கி நடந்தனர்.

இருவரும் கரையில் அமர்ந்து கடலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
"யாழினி எனக்கு தெரியாதுனு நினைச்சியா?", என்று அவன் வினவ திகைத்தவள், "நீங்க என்ன சொல்றீங்கனு எனக்கு தெரியல கௌதம்...." என்று நெற்றி வேர்க கேட்க, "இன்னைக்கு காலைல இருந்து நீ ஏதோ யோசனையிலேயே இருக்குற, என்ன ஆச்சு யாழினி எதாவது பிரச்சனையா ?" என்று வினவ, நிம்மதி மூச்சு விட்டவள், "அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல கௌதம்" என்று கூற, "உண்மையாவா?" என்று கௌதம் கேட்க, "ப்ராமிஸ்சா.." என்று புன்னகைத்தவள், அவன் கை வளைவில் தன் கைகளை கோர்த்து, அவனது தோளில் தலை சாய்த்தாள்.

தங்களின் நெருக்கம் அதிகரித்ததால் கௌதமும், என்னவென்று கூற தெரியாத ஒரு இதமான உணர்வை உணர்ந்ததால் யாழினியும், புன்னகையுடன் மறையும் ஆதவனை பார்த்துக் கொண்டிருந்தனர்.

Hi guys!
I am really sorry for taking a lot of time.and a short update. Hope you guys enjoyed the chapter.
If you guys really enjoyed it , pls do vote and comment . It means a lot to me.
Bye.
Take care 🤗

காதல்  காற்று வீசும் நேரம்Where stories live. Discover now