முத்தம்

5.3K 176 91
                                    

கௌதம்.

"கார்த்திக்! ஆர் யு சீரியஸ்! டேய்! உனக்கே இது அனியாயமா தெரியலயா? வேணும்னே கண்டாக்குறியா?" என்று கௌதம் கார்த்திக்கை நம்பாமல் கேட்க, "நான் விளையாடல மச்சான். ஐ அம் சீரியஸ். பிளிஸ் மச்சான்! இந்த ஹல்ப் மட்டும் பண்ணுடா!" என்று கார்த்திக் கொஞ்சும் விழியோடு கேட்க, கார்த்திக், செய்வதறியாது தலையை கோதினான். அப்போது அங்கே யாழினி வர, "என்னாச்சு கார்த்திக் அண்ணா? " என்று யாழினி புரியாமல் கேட்க, "இல்ல யாழினி, நானும் பூஜாவும் படம் பாத்தே ரொம்ப நாள் ஆச்சு. கிர்த்திகா பிறந்ததுல இருந்து நாங்க வெளியவே போகல, அதான் இன்னைக்கு மட்டும் கிர்த்திகாவ பார்த்துக முடியுமானு, கௌதம்கிட்ட கேட்டிட்டு இருந்தேன்." என்று அவன் விளக்க, யாழினி, "இதுல என்னணா இருக்கு நானும் கௌதமும் கிர்த்திகாவ பாத்துக்கிறோம் நீங்க போய்ட்டு வாங்க." என்று அவள் கூற கௌதம் கார்த்திக்கை முறைத்தான் (மனசாட்சியே இல்லையாடா உனக்கு! கல்யாணம் ஆகி பத்து மாசதுல ஒரு பொண்ணையும் வச்சிகிட்டு நீ படத்துக்கு போவ, கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகல நான் உன்னோட குழந்தைய பாத்துக் கணுமா? உன்ன சொல்லி குத்தம் இல்ல எல்லாம் என்னுடைய நேரம்.)

கிர்த்திகாவை உறங்க வைத்த பூஜா, யாழினியிடம் குழந்தைக்கு தேவையானவற்றை பற்றி கூறியவள், "தேக் யூ சோ மச் யாழினி!" என்று அவளை அணைத்தவள், கார்த்திக்குடன் விடை பெற்றாள்.

கௌதமின் அருகில் அமர்ந்த யாழினி கௌதமை பார்த்த, " ரெண்டு பேரும் மேட்ஃ பார் ஈச் அதர் இல்ல? " என்று புன்னகையுடன் கூற, கௌதம் தலையை ஆட்டினான். ( நீ வேற ஏன் யாழினி என்னோட வாய கிளருர.) குழந்தையின் சினுங்கல் கேட்க, யாழினி கிருத்திவை மெத்தையில் இருந்து கையில் எடுத்தவள், குழந்தையை மெல்ல அசைக்க, குழந்தை மீண்டும் அமைதியானள். குழந்தையை கண்கொட்டாமல் புன்னகையோடு பார்த்த யாழினி, கௌதமிடம், "எவ்வளவு க்யூட்டா இருக்காள?" என்று கேட்க, கௌதப் யாழினியை பார்த்தவாறு, "ஆமா. செம க்யூட்!" என்றான். யாழினி குழந்தையை பார்த்து பூரித்து அதன் கண்ணங்களில் இதழ் பதிக்க, கண் கொண்டாமல் பார்த்தவன் அவனை அறியாமல் யாழினியின் கண்ணத்தில் இதழ் பதித்தான். அவனது செய்கயை எதிர்ப்பார்க்காதவள் கண்களை விரிக்க, கௌதம் இமை மூடி அந்த கனத்தை நெஞ்சில் பதித்தான்.

காதல்  காற்று வீசும் நேரம்Where stories live. Discover now