இன்ப அதிர்ச்சி

4K 157 23
                                    

புறம் ஏறிய ரக்ஷன் சிரிக்க ஆரம்பிக்க, வேற்று கிரகவாசியை பார்ப்பதுப்போல் அவனை யாழினி புரியாமல் பார்த்தாள். சற்றே கோபம் தொனிக்கும் குரலில் யாழினி, "டேய் ரக்ஷா!! ஏன்டா சிரிக்கிற? " என்று அவனை அதட்டும் குரலில் கேட்க, "ஒன்னுமில்ல! நினைச்சேன் சிரிச்சேன். " என்று கூறினான். "என்ன நினைச்ச? எதுக்கு சிரிச்ச?  ஒழுங்கா சொல்லுடா! " உயர்த்திய குரலில் கேட்க, "இத முதல்லேயே சொல்லிருந்தா அம்மா இவ்வளவு டென்ஷன் ஆகியிருக்க மாட்டாங்க. " என்று கூறினான். யாழினி புரியாமல் அன்னையைப் பார்க்க அவரின் முகத்தில் கடுமை நீங்கி இருந்தது. இன்னும் குழம்பியவள், ரக்ஷனிடம் கேள்வி பார்வை வீச, அவனோ வேண்டுமென்றே தன் தட்டில் கவனம் செலுத்த, கோபமடைந்த யாழினி, "ரக்ஷா  நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா? " என்று மூகத்தில் கோபம் அப்பட்டமாக தெரிய, அவனை அதட்டினாள். "அக்கா ஒன்னு கேப்பேன் கோபடமாட்டேல? " என்று கேட்க, "மாட்டேன்! என்னனு சொல்லு டென்ஷன் பண்ணாத " என்று பல்லை கடித்தாள் யாழினி.  "ஒன்னும்இல்ல ஒரு டவுட் நீ உண்மையிலேயே டியூப்லைட்டா இல்லேனா அப்படி நடிக்கிறீயா? " என்று சிரித்துக் கொண்டே கேட்க, இன்னும் எரிச்சல் அடைந்த யாழினி, "ரக்ஷா! என் பொறுமைய சோதிக்காத! என்னனு சொல்லு! " என்று அதட்டினாள். "ஓகே! ஓகே! கூல்! அக்கா அவர்களே! நீங்கள் சென்னைக்கு இடம்பெயர போகிறீர்கள். " என்று கேலியாக கூற,  "அத தானே நான் இவ்வளவு நேரமா சொல்லிட்டு இருக்கேன்." என்று பல்லைக் கடித்தாள் யாழினி. "அட லூசு அக்காவே! அத்தானும் சென்னையிதானே வொர்க் பண்றாங்க....." . "ஓ " என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டாள். "என்ன ஒன்னுமே சொல்லாம போறா! அம்மா! என்னமா ஆச்சு இவளுக்கு. " என்று ரக்ஷன் சலித்துக்கொண்டான்.
மெத்தையில் சரிந்தா யாழினி,  தலையணையை நனைத்தவாறு உறங்கிப்போனாள்.

காலையில் சீக்கிரமாக முழிப்பு தட்ட, விழித்துக்கொண்டாள் யாழினி. மனம் ஏனோ கனமாக இருக்க தோட்டத்தில் அமர சென்றாள் .  காற்றில் ஆடும் மரத்தை பார்த்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தாள். தன் தோளில் தொடுகையை உணர்ந்வள் நிமிர்ந்து பார்த்தாள். பத்மா அவள் அருகில் அமர்ந்து தலையை தடவினாள். "என்னடா யோசிச்சிட்டு இருக்க? " என்று பத்மா யாழினியிடம் கேட்டாள். "ஒன்னும் இல்லமா. " என்று இறங்கிய குரலில் யாழினி பதிலளிக்க, " ஒன்னும் இல்லைனு சொன்னாலே ஏதோ இருக்கு, சொல்லு என்ன ஆச்சுடா? " என்று பத்மா கேட்க யாழினியின் கண்களில் கண்ணீர் கெட்டியது. "ஏய்! என்னாச்சு ஏன் அழுற! சரி சரி எனக்கு உன்மேல கோபம்லா இல்லமா. அழாதடா என் தங்கம்ல." என்று யாழினின் கன்னத்தில் வடிந்த கண்ணீரை துடைத்தார் பத்மா.

காதல்  காற்று வீசும் நேரம்Where stories live. Discover now