பதட்டம்

5.2K 173 10
                                    

அன்று காலை ஒரு சிணுங்களுடன் புரண்டு படுத்தாள் யாழினி. ஹாலில் அவளது தந்தை பேசுவது அவளது காதில் விழுந்தது.
"இல்ல நான் என்ன சொல்றேன்னா, இன்னைக்கு கோவில்ல பொண்ணப் பாருங்க உங்களுக்கு பொண்ண புடிச்சிருந்துதுன, அப்பறம் வீட்டில இரண்டு பேரோட குடும்பமும் கலந்துக்கிற மாதிரி முறைப்படி வச்சிக்கலாம்"
"சரி! இன்னைக்கு மீனாட்சி அம்மன் கோவில வச்சி பார்கலாமா? " "நன்றிங்க. நான் வச்சிட்ரேன்" என்று முடித்தார்.

மீண்டும் யாழினி புரண்டு படுத்தாள்.சிறிது நேரத்தில் அறைக்குள் வந்த பத்மா ,"யாழினி! யாழினி!  எழுந்திருமா"என்று அவளைத் தட்டி எழுப்பி விட்டார்.
சிணுங்களுடன் யாழினி, "ப்ளிஸ்மா... இன்னும் ஐஞ்சு நிமிஷம் மா பிளிஸ் " என்றவாரே தலையணையைக் கட்டினாள்.
"யாழினி   இன்னைக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்க, எழுந்திருமா"என்று கூறிவிட்டு, ரக்ஷனின் படுக்கைக்கு அருகில் சென்று, "ரக்ஷா எழுந்திருடா "    என்று அவனையும் தட்டி எழுப்பினாள்.      "ம்.....ம்......"என்ற சத்தத்துடன் மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தான் அவன்.

யாழினி  சற்று நேரம் கழித்து படுக்கையில் இருந்து எழுந்து, கை, கால்களைக் கழுவி விட்டு பற்களை துலக்கி விட்டு, பத்மாவைத் தேடி சமையலறைக்குள் சென்றாள்.பத்மா  காலை உணவிற்கு சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருந்தாள்.
"மா! அப்பா எங்க?" எனக் கேட்டாள். "பால்கனில பேப்பர் படிச்சிட்டு இருங்காங்க... ஏன்டா? "

"இல்ல அப்பாவுக்கும் காஃபி போடத்தான் கேட்டேன்."என்றாள் யாழினி.
அதற்கு பத்மா "இங்க ஒருத்தி உட்கார்ந்து இருக்கேன் எனக்கு காஃபி வேணுமானு ஒரு நாளாவது கேட்டு, எனக்கு காஃபி போட்டு தந்திருக்கியா? நீ அப்பா பொண்ணுணு நிருப்பிக்குற இல்ல" என்று செல்லமாக கோபித்துக் கொண்டார்.
"என் செல்ல அம்மாவுக்கு கோபம் வந்திடுச்சா? ஹான்!"என்று அம்மாவின் கன்னத்தைப் பிடித்து செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு கண்களைக் கசக்கிக் கொண்டே வந்த ரக்ஷன்,"ஹய்யோ! காலைலயே அன்பு  மழை பொழியுதே! நா வேர குடைக் கொண்டு வரலயே." என்று புன்னகைத்தான்.
"உனக்கு ஏன்டா பொறாமை? "என்று கேட்டாள் யாழினி .
"சரி! சரி! இன்னும் கொஞ்ச நாள்தானே கொஞ்சிக்கோ. நான் ஒன்னும் சொல்லலபா!" என்று கூறி விட்டு சரண்டர் ஆவது போல் கைகளை மேல் தூக்கினான்.
புருவத்தில் முடிச்சுடன் யாழினி, "ஏன் கொஞ்ச நாளுக்கு அப்பறம் நான் அம்மாவ கொஞ்ச முடியாதா என்ன? " எனக் கேட்டாள்.
அதற்கு ரக்ஷன் "நீ  கொஞ்ச முடியாதுனு இல்ல... நீ கொஞ்ச மாட்ட" என்று ஒரு பிளாஸ்டிக் புன்னகையை உதிர்த்தான்.
"அப்படியெல்லாம் இல்ல நான் கொஞ்சுவேன் " என்று முகம் சுழித்தாள் யாழினி. 
அப்போது பத்மா ,"நீ சும்மா இருடா! என் பொண்ணு கொஞ்சுவா, ஆனா என்ன இல்ல! " என்று சீரியஸாக ஆரம்பித்து இறுதியில் சிரித்து விட்டாள். அம்மாவின் கால் வாரலை எதிர் பாராத யாழினி, "அம்......மா நீயுமா " என்று முகம் சுழித்து விட்டு பால்கனியை நோக்கி நடந்தாள்.

காதல்  காற்று வீசும் நேரம்Where stories live. Discover now