ஆசை

2.4K 80 26
                                    

"பை டா ரக்ஷா..." என்று புன்னகையுடன் போனை கீழே வைத்தவளை புன்னகையோடு பார்த்த கௌதம், "யாழினி... எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்..... கேட்கலாமா?" என்று கேட்டான்.
" ம்..." என்று தலை அசைத்தவள், தன்னுடைய தேநீரை அருந்தினாள்.
"நீயும் ரக்ஷனும் சண்டையே போட்டது இல்லயா?" என்று கேட்க, "ஏன் கேட்குறீங்க?" என்று யாழினி கேட்க,
"நீ அவன் மேல கோப பட்டு நான் பாத்ததே இல்ல. இரண்டு பேரும் சண்ட போட்டும் நான் பாத்ததே இல்ல..." என்று கூற,
"நாங்க ரெண்டு பேரும் சண்ட போட்டா எங்க வாய் பேசாது, எங்க கை தான் பேசும். பயங்கரமா அடிச்சுப்போம். எல்லாத்துக்கும் சண்ட போடுவோம். அம்மா யார் பக்கத்துல தூங்கனும்ல இருந்து யாருக்கு புளு கலர் ப்ரஷ் வரைக்கும்.... ஆனா ரக்க்ஷன் காலேஜ் போனத்துக்கு அப்புறம், அவனே இரண்டு நாளுக்கு தான் வீட்டுக்கு வருவானா அதுனால அப்படியே சண்ட போடுறது கம்மி ஆயிட்டு. நாங்க இரண்டு பேரும் எப்பவுமே சண்ட போடுவோம்னு சொல்ல முடியாது, இரண்டு பேரும் சேர்ந்து நிறைய சேட்டையும் பண்ணுவோம். லீவ் வந்தா பிரவீனும் சேர்ந்துப்பான். நல்ல சேட்ட பண்ணுவோம்... ஆனா மாட்டவே மாட்டோம்... நல்ல பிள்ளைங்க மாதிரியே சுத்துவோம்."என்று புன்னகை பூக்க,
"அப்படி என்ன சேட்ட பண்ணுவீங்க?" என்று கௌதம் ஆர்வமாக கேட்டான்.
"நாங்க பண்ணாத சேட்டையே கிடையாது, அக்காவ பயமுறுத்த அவ முகம் கழுவும் போது தண்ணில ரெட்  போஸ்டர் கலர கலக்கிறது, அப்புறம் வளர்ந்ததுக்கு அப்புறம் ரக்ஷனும் பிரவீனும் பைக்கில விழுந்து வார்னா அத வீட்டுக்கு தெரியாம மறைக்குறதுனு நாங்க பண்ணாத அட்டூழியமே கிடையாது. நீங்க இதெல்லாம் பண்ணது இல்லயா?" என்று அவள் வினவ,
"நானும் கௌசல்யாவும் அவ்வளவு சேட்ட பண்ணது இல்ல. சண்ட போடுவோம் தான் அத ஒத்துக்கிறேன். அவள சண்டைக்கு இழுக்கலேனா எனக்கும் தூக்கம் வராது அவளுக்கும் தூக்கம் வராது." என்று அலன் புன்னகைத்தான்.

ஏதோ நினைவுக்கு வர, "ஹான்....ஒரு தடவ நாங்க மாட்டுனோம். எனக்கு மொட்ட மாடில படுக்கனும்னு ரொம்ப ஆசை. ஒரு தடவ அம்மாட்ட சொன்னேன்... அப்போ நான் டென்த் படிச்சிட்டு இருந்தேனு நினைக்கிறேன், அம்மா 'உனக்கு விசித்திரமா தான் ஆசை வரும்' அப்படினு சொல்லிட்டு போய்டாங்க, அந்த ஆன்வல் லீவ்ல அப்பா வெளியூர் போயிருந்தாங்க, அம்மாவும் ஒரு நாள் வெளியே போற மாதிரி சூழ்நிலை ஆய்யிடுச்சு... அம்மா 'அடுத்த நாள் காலைல தான் வருவேன் பத்திரமா இருங்க' அப்படினு சொல்லிட்டு போய்டாங்க, நாங்க மொட்ட மாடில படுக்க ப்ளான் எல்லாம் போட்டு, மெத்தையெல்லாம் மேல போட்டு பக்காவ செட் பண்ணிட்டோம்.  டிவியெல்லாம் பார்த்துட்டு படுக்க போனப்போ அம்மா வந்துட்டாங்க. மரண பீதி எங்க முகத்துல இருந்தத பார்த்து அம்மா என்னனு கேட்க, மழுப்ப டிரை பண்ணோம், ஆனா மாட்டி கிட்டோம். செம திட்டு வாங்குனோம்" என்று அவள் சிரிக்க இருவரும் பேசியவாரே தேநீர் அருந்தினர்.

இருவரும் இரவு உணவு அருந்திய பின்னர், யாழினி பாத்திரங்களை சுத்தம் செய்ய, கௌதம் தனக்கு வேளை இருக்கின்றது என்று கிச்சனை விட்டு வெளியே சென்றான்.

பாத்திரத்தை சுத்தம் செய்து முடித்தவள், படுக்கை அறைக்கு செல்ல அங்கு கௌதம் இல்லாததால், அவனை தேடினாள்.
"கௌதம்!" என்று என்று அவனை அழைத்தவாறு பால்கனிக்கு செல்ல , அங்கு அவன் பால்கனியை சுத்தம் செய்து அங்கு மெத்தையை விரித்துக் கொண்டிருந்தான்.
"கௌதம்! என்ன பண்றீங்க?" என்று கேட்க,
"நம்ம இருக்கிறது அப்பார்ட்மென்டுங்கிறதுனால மொட்ட மாடில தூங்குறது கஷ்டம்... ஏதோ என்னால முடிந்தது, உன்னோட ஆசைய நிறைவேத்த...." என்று புன்னகைக்க,
"கௌதம்!" என்றவள்,  அவனை அணைத்துக் கொண்டாள்.
அவள் அணைப்பை எதிர்பாராதவன், தன்னை மீட்டபின் அவளை தன்னோடு இறுக்க அணைத்துக் கொண்டான்.

விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு இருவரும் தூங்க பால்கனிக்கு வந்தனர். இருவரும் மெத்தையில் அமர்ந்த பின்னர் யாழினி, "கௌதம்! தலையணைய மறந்துட்டோம்" என்று கூற, யோசித்த கௌதம், "நோ ப்ராபிளம்" என்று படுத்தவன், தனது கைகளை நீட்டி அதில் படுக்கும் படி சைகை செய்ய, புன்னகைத்தவாறு அவன் கைகளில் தலை வைத்தாள். இருவரும் கதைகளை பேசியவாரே கண்ணுறங்க, அவள் நெற்றியில் இதழ் பதித்து கண் அயர்ந்தான் கௌதம்.

Hi guys.....
If you guys enjoyed the chapter please vote and comment..... it means a lot to me.
Thank you🤗

காதல்  காற்று வீசும் நேரம்Where stories live. Discover now