திருப்பம்

4.2K 153 27
                                    


                        யாழினி

கண்களை கசக்கிவிட்டு மீண்டும் படித்தவள்,  திருதிருவென முழிக்க ஆரம்பித்தாள். அவளை பார்த்த பத்மா, (இவளுக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி முழிச்சிட்டு இருக்கா?) . "யாழினி!! என்ன ஆச்சு ஏன் இப்படி முழிச்சிட்டு இருக்க? " என்று அவள் அருகில் அமர்ந்தாள் . "ஹான்! அ..ம்மா" ( ஐயோ ! இப்போ என்ன பண்றது ) .என்று பதில் சொல்ல திக்கினாள் யாழினி. "என்ன ஆச்சு ஏன் இப்படி பேய் அரஞ்ச மாதிரி உட்கார்ந்து இருக்கனு கேட்டேன்? " என்று மீண்டும் பத்மா கேட்க யாழினிக்கு வியர்க்க ஆரம்பித்தது. "அம்மா உன்கிட்ட ஒன்னு சொல்லுவேன், கோபபடக் கூடாது, திட்ட கூடாது ஓகேவா? " சற்றே பயத்துடன் வினாவினாள். "என்ன! பொடியெல்லாம் பயங்கரமா இருக்கு? என்னனு சொல்லு? " என்று பதில் அழிக்க, "அம்மா கோபப்பட மாட்டேனு சொல்லு!  நான் சொல்றேன்."என்று அதே பயந்த குரலில் கேட்டாள். "சரி, கோபப்பட மாட்டேன். சொல்லு என்ன தப்பு பண்ணுன ஏன் பயப்படுற? " என்று பத்மா கேட்டார்.

"அம்மா ஒரு மூனு மாசம் முன்னாடி ஒருதங்க என்ன மீட் பண்ண என் ஆபிஸுக்கு வந்தாங்க. நம்ம ஊருதான். அவுங்களுக்கு ஒரு பொண்ணாம் கொஞ்சம் மென்டலி அபெக்டெட்.... " என்று இழுத்தாள். "சரி அதுக்கு என்ன? " என்று புரியாமல் கேட்டாள். "அவுங்க அம்மாவோட பிசிக்கல் கண்டீஷனும் நல்லா இல்லயாம். அவுங்களும் மேனேஞர்தான்  வொர்க் பண்றாங்க " என்று கூறிக் கொண்டிருந்தவளை, புரியாமல் பார்த்த பத்மா, "சுத்தாம என்னனு சொல்லு யாழினி! "என்று சற்றே கோப குரலில் கேட்டார். "அவுங்க மதுரைக்கு ட்ரான்பர்க்கு ட்ரைப் பன்னிருங்காங்க ஆனா கிடைக்கல. அன்னைக்கு என்கிட்ட ஹெல்ப் கேட்டு வந்தாங்க." என்று கூறியவளிடம், "அதுக்கு நீ என்ன ஹெல்ப் பண்ண முடியும்? " என்று பத்மா கேட்க,  "முசுவல் ட்ரன்ஸ்பர் மா." என்று சொல்ல,  "லூசு இதுக்குதான் இவ்வளவு பயந்தயா? கொஞ்ச நேரத்தில என்னலாமோ நினைக்க வச்சுட்ட. " என்று நிம்மதி பெருமூச்சி விட்டார் பத்மா. "உனக்கு இன்னும் இருபது நாள்ல கல்யாணம்டா, அதுக்கு அப்புறம் நீயும் மாப்பிள்ளையும் சேர்ந்து என்ன முடிவுனாலும் எடுத்துக் கோங்க." என்று புன்னகையுடன் கூறினாள் பத்மா.

காதல்  காற்று வீசும் நேரம்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin