கௌதம்
"அம்மா இதெல்லாம் உங்களுக்கே அநியாயமா தோனலயா? " என்று கௌதம் கேட்டான். "எதுடா அநியாயம்? " என்று பரபரபாக இயங்கி கொண்டிருந்த ஜெயலஷ்மி அவனிடம் கேட்டார். "அப்புறம் என்னமா என்னோட எங்கேஜ்மெண்ட்டுக்கு நானே வர கூடாதுனா என்னமா? " என்று சோகமா கேட்டான் கௌதம். "நான் என்னடா பண்றது உங்க அப்பா தான் நீ வர வேண்டானு சொன்னாங்க." என்று ஜெயலஷ்மி விளக்கினார். சிறு குழந்தைப் போல் தன் அறைக்குள் சென்றான் கௌதம்.
யாழினி
வீடே பரபரப்பாக இயங்கி கொண்டிருக்க, முழிப்பு தட்டிய யாழினி கண்களை திறக்க விருப்பம் இன்றி படுத்திருந்தாள். "யாழினி நீ முழிச்சிதான் இருக்க தெரியுது எழுந்திரி. " என்று பத்மா அதட்டினார். தலைணையை வைத்து காதுகளை மூடிய யாழினி தூக்கம் வராமல் புரண்டாள். "யாழினி!! நீ என்கிட்ட அடிதான் வாங்க போர. எழுந்திரு! " என்று அவளை தட்டினார் பத்மா. எரிச்சலோடு எழுந்த யாழினி, "ஏன்மா இப்படி பண்ற? கொஞ்ச நேரம் தூங்க விடுமா! " என்று யாழினி கெஞ்சினாள். " இன்னைக்கு உனக்கு நிச்சயதார்த்தம் அதாவது நியாபகம் இருக்கா? எழுந்திருச்சு கிளம்ப ஆரம்பி." என்று பத்மா அதட்டினார். "மா மணி அஞ்சுதான் ஆகுது......" என்று ஆரம்பித்த யாழினி பத்மாவின் முறைப்பில் வாயை முடினாள். ஒரு பெருமூச்சுடன் கட்டிலை பிரிந்தாள் யாழினி.
குளித்துவிட்டு சமையலறைக்குள் சென்றாள் யாழினி. "அக்கா! நீ எப்போ வந்த? தேஜ் வந்திருக்கானா? " என்று ஆச்சரியமாக யாழினி கேட்க, சிரிப்புடன், யாழினியை அணைத்த நக்ஷத்திரா "என்னோட செல்லா தங்கச்சியோட எங்கேஜ்மென்ட நான் எப்படி மிஸ் பண்னுவேன்? சொல்லு. " என்று கூற, யாழினி "லவ் யு அக்கா. " என்று இறுக்க அனைத்துக் கொண்டாள். தன் காலை யாரோ அணைக்க கீழே பார்த்தவள், தேஜைப் பார்ததும் நக்ஷத்திராவை விட்டிவிட்டு, தரையில் முனங்காலிட்டு, "தேஜ்! எப்படிடா இருக்க? " என்று கேட்க உதட்டை பிதிக்கியவன், "அம்மா என்னைய அடிச்சுட்டா " என்று அழும் குரலில் கூற, "என்னது என்னோட பையன அடிச்சாலா? எதுக்கு அடிச்ச என் பையனா? " என்று யாழினி போலியாக நக்ஷத்திராவை மிரட்ட , "யாரு என்னுடைய. ஒய்ஃப மிரட்டுரது?" என்ற குரல் கேட்டு, திடுக்கிட்டு திரும்பி யாழினி புன்கையோடு ஆதித்யாவை பார்த்து, "வாங்கத்தான்! எப்படி இருக்கீங்க? " என்று புன்னகையுடன் கேட்க, "நல்லா இருக்கேன். கல்யாணப் பொண்ணுக்கு என்னோட வாழ்த்துக்கள்." என்று ஆதித்யா வாழ்த்னான். "தேங் யு " என்று யாழினி புன்கைத்தாள்.
YOU ARE READING
காதல் காற்று வீசும் நேரம்
ChickLit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.