யாழினி
எப்போதும் போல் தன் அறையை விட்டு வெளியில் வந்தவள், பரப்பபரப்பாக இயங்கி கொண்டிருந்த தன் அன்னையையும் அத்தை மாதவியையும் பார்த்தவுடன் எதோ தோன்ற மீண்டும் தன் அறைக்குள் ஓட முற்ப்பட்டாள். அவளை பார்த்த பத்மா, "யாழினி!!" என அழைக்கவும், ஒரு வித சலைப்புடன் அன்னையிடம் சென்றாள், இருவருகும் குட் மார்னிங் என்று விட்டு, "என்னமா?" என கேட்டாள். "ரக்ஷன எழுப்பி விடுடா. பெரிம்மாவ பஸ் ஸ்டடுலிருந்து கூப்புடுட்டு வர சொல்லுடா." என்று விட்டு தன் வேலையை செய்ய ஆரம்பித்தாள். "சரிம்மா." என்று விட்டு ரக்ஷனின் அறைக்குள் சென்றாள்.
சிறிது நேரத்தில் ரக்ஷன் பெரிம்மாவுடன் (கல்யாணி) உள்ளே நுழைந்தான். தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த யாழினி, பெரியம்மாவைப் பார்த்தவுடன் அவரிடம் ஓடினாள். "ஹாய் பெரிம்மா! எப்படி இருக்கீங்க? பெரிப்பா எப்படி இருக்காங்க?" என நலம் விசாரித்தாள். " நல்லா இருக்கோம்டா தங்கம். நீ இன்னும் குளிக்கலையா? போடா போய் ரெடி ஆக ஆரம்பி, அப்புறம் நேரம் போறதே தெரியாதுடா. போ! " என்று அவளை அவள் அறைக்குள் அனுப்பினாள். "எப்படி இருக்கீங்க அண்ணி? அண்ணண் எப்படி இருக்காங்க?" என்ற தந்தையின் அவள் காதில் தோய அவள் அறைக்குள் புகுந்தாள் யாழினி.
கௌசல்யா
" அம்மா எனக்கு என்னமோ இது சரியா படல!!!! " என்று அன்னையிடம் சலித்துக் கொண்டாள் கௌசல்யா. "எதுமா சரியா படல?" எனப் புரியாமல் கேட்டார் ஜெயலஷ்மி. "அத்தைய கூடிட்டு போறதுதான். நமக்கு பொண்ண புடிச்சிருக்கு நாம பூ வைக்க போறோம், அதுக்கு எதுக்கு அத்தை வரனும்? " என தாயிடம் கவலையோடுக் கேட்டாள். "நீ அடிதான் வாங்கப் போற! அவுங்க கண்டிப்பா வரனும் வருவாங்க! " என்று கண்டிப்பான குரலில் கூறினார்.
ஜெயலஷ்மிக்கு உடன் பிறப்பு கிடையாது. மாதவனுக்கு ஒரு தங்கை சுமித்ரா. சுமித்ராவுக்கு தன் மகள் பல்லவியை கௌதமிற்கு மணம் முடிக்க வேண்டும் என்று மிகவும் பிரியப்பட்டாள். கௌதம் கல்யாண பேச்சி எடுத்தவுடனேயே முடியாது என்று விட்டான். பல்லவிக்கும் கௌதமிற்கும் பத்து வயது வித்தியாசம் அது மட்டும் இல்லாமல் அவளும் இப்போதுதான் கல்லூரி வாழ்க்கையில் நுழைந்திருக்கிறாள் என்பதெல்லாம் அவனின் வாதம் அவையும் கௌதமின் பெற்றோருக்கு நியாயமாக படவே அத்துடன் அந்த பேச்சு முடிந்தது. அதனால் சுமித்ராவுக்கு வருத்தம் உண்டு.
YOU ARE READING
காதல் காற்று வீசும் நேரம்
ChickLit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.