மூவரும் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்போது தந்தை மகனிடம் , "கௌதம்! நாளைக்கு பொண்ணு பார்க்கப் போறோம், ஞாபகம் இருக்கா? " எனக் கேட்டார். பதில் சொல்ல அவன் வாய் திறக்கும் முன், கௌசல்யா "நீங்க வேறப்பா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட லூசு மாதிரி தனியா சிரிச்சிட்டு இருந்தான்." என்றாள் .
அதற்கு மாதவன், " டேய்! போட்டோவ பார்த்தியா, பொண்ணு உனக்கு பிடிச்சிருக்குதானே? எங்க எல்லாருக்கும் பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு, குடும்பமும் ரொம்ப நல்ல குடும்பம். " என்றார்.
கௌதம் குழப்பத்துடன் பார்க்க, கௌசல்யாவோ ,"ஆமாம்பா, அண்ணண் போட்டோவ பார்த்துட்டான். அவனுக்கும் பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. " என்றாள்.
அவளை கௌதம் குழப்பமாக பார்த்தான். பின் உணவு அருந்திவிட்டு அனைவரும் எழுந்தனர்.மாதவன் உறங்க சென்றார். கௌதம் தாய்க்கு உணவு பரிமாறினான். அப்போது கௌதம், தாயிடம் ,"அம்மா! நீங்க பொண்ணோட போட்டோவ பார்த்தீங்களா? "என்று கேட்டான். "ஆமாடா! பொண்ணு அழகா இருக்காளா? " என்று வினாவினார். அதற்கு கௌதம் ,"இந்த கேள்விக்கு பதில் சொல்ல, நான் போட்டோவ பார்த்திருக்கனும் " என்று நக்கலாக கூறினான். அதற்கு ஜெயலெஷ்மி, "ஏன்டா போட்டோவ பாக்கல? "எனக் கேட்டார். "அதுக்கு முதல்ல, எனக்கு போட்டோவ காட்டியிருக்கணும்." என்றான் சிரித்துக்கொண்டே.
"டேய் நான் சாயங்காலமே போட்டோவ கௌசல்யாட்ட கொடுத்துட்டேன்! அவ உன்கிட்ட கொடுக்கலையா? " எனக் கேட்டார்.
அதற்கு கௌதம் "இல்லமா! அவ என்கிட்ட எதுவுமே சொல்லலையே! ", என்று எழுந்து, கௌசல்யாவின் அறைக்கு சென்றான். அங்கு அவள் இல்லை என்றவுடன், தன் அறைக்கு விரைந்தான்.அங்கு கௌசல்யா ஏதோ ஒரு நாவலை புரட்டிக் கொண்டிருந்தாள்.கௌதம் அவளிடம் போட்டோவை கேட்டால் வாழ்கை முழுவதும் சொல்லி கேலி செய்வாளே, என்று யோசித்து, அவளிடம் சென்று, "அம்மா உன்கிட்ட கொடுத்த போட்டோவ கேட்டாங்க! " என்றான்.
கௌசல்யா சிரித்துக்கொண்டே, "உனக்கு போட்டோவ பார்க்கணும்னா நேரடியா கேளு, அத விட்டுட்டு அம்மா கேட்டாங்க, தாத்தா கேட்டாங்கனு! ". லேசாக அசடு வடிய ,கௌதம், "அதான் தெரியுதுல போட்டோவ தா "என்று கேட்டான்.
அதற்கு கௌசல்யா ,"பார்றா! உனக்கு வேண்ண்ண்ண்டிய ஒரு பொருள் என்கிட்ட இருக்குது, அத இப்படிதான் கேப்பியா? "என்றாள் நக்கலாக.கௌதம் "ஐய்யய்யோ! என்ன இவ இப்படி பண்றாளே? இப்போ எப்படி போட்டோவ வாங்கறது." என்று யோசித்தான்.
பின்பு கௌசல்யாவிடம் "என்னுடைய செல்ல தங்கச்சியில்ல. பிளீஸ், போட்டோவ கொடுமா! ",என பொய்யாக கெஞ்சினான்.
அதற்கு கௌசல்யா சிரித்துக்கொண்டே, "அந்த பயம் இருக்கணும்." என்று கூறிவிட்டு, படுக்கையைவிட்டு எழுந்து தன் அறையை நோக்கி நகர்ந்தாள். இவனும் அவளுக்கு பின்னால் நடந்தான் ."ஆனா அதுக்காகலாம் நான் போட்டோவைக் கொடுக்க முடியாது! " என்று கூறிவிட்டு தன் அறைக்குள் ஓடினாள்.இதனை எதிர்பார்க்காத கௌதம் அவள் பின்னால் ஓடினான், ஆனால் அதற்குள் அவள் அறையை தாளிட்டு விட்டாள். கௌதம் கதவை தட்டிப்பார்த்தும் அவள் திறக்கவில்லை.
கௌதம் "சே! மிஸ் பண்ணிட்டேனே "என்று திரும்பி தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்த போது, கௌசல்யா கதவை சற்று திறந்து ,"அதான் நாளைக்கு பார்க்க போறேல, அப்ப பார்த்துக்கோ " என்று கத்தி விட்டு, கதவைத் தாளிட்டாள்.அவளைத் திரும்பி பார்த்துவிட்டு தன் அறையை நோக்கி நகர்ந்தான். தன் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டான். கைகளைப் பின்னந்தலையில் கட்டி, விட்டத்தைப் பார்த்து எண்ணக் குதிரையைத் தட்டிவிட்டான், "அம்மாவும், அப்பாவும் சொல்றத பார்த்தா நாளைக்கு பார்க்க போற பொண்ணுதான் என்னவள்னு நினைக்கிறேன். சே! அந்த பொண்ணு பேரக் கூட கேக்கலையே " என நினைத்துக்கொண்டே உறங்கி போனான்
பிழை இருந்தால் மன்னிக்கவும்.
Thank u for reading
If u enjoyed the update plssssssss vote and comment it means a lot to me☺☺☺☺
BYE🌟🌟🌟🌟
ESTÁS LEYENDO
காதல் காற்று வீசும் நேரம்
Chick-Lit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.