தடுமாற்றம்.

4.7K 174 19
                                    

                           யாழினி

செல்போன் சுப்ரபாதம் பாட தூக்க கலக்கத்துடன் அதை அமைதி படுத்திவிட்டு, தூக்க கலக்கத்துடன் படுக்கையில் அமர்ந்தாள் யாழினி. கை கால்களை கழுவி விட்டு , பல் துலக்கிவிட்டு, தன் அறையில் இருந்து வெளியில் வந்தாள்.ரக்ஷனின் அறை கதவு மூடி இருந்தது (ம்!  தூங்கிட்டு இருப்பான்.).

அப்போது சமையலறையில் இருந்து சத்தம் வந்தது (ஐய்! அம்மா எழுந்திருச்சிட்டாங்க.). அன்னையை தேடி சமையலறைக்குள் சென்றாள். அங்கு பத்மா காஃபி கலக்கிக்கொண்டு இருந்தாள். யாழினி வருவதய் பார்த்த பத்மா, "எப்போ! எழுந்திருச்ச? " என்று கேட்டார்.அவரைப் பின்னில் இருந்து அணைத்த யாழினி, "இப்போதான். மா எனக்கும் காஃபி " என்றாள். பத்மா கொடுத்த காஃபியை வாங்கிகொண்டு, பால்கனிக்குச் சென்று பேப்பரைப் புரட்ட ஆரம்பித்தாள்.

திடீரென்று பத்மாவின் குறல் கேட்டு திடுக்கிட்டாள் யாழினி. "யாழினி மணி ஏழு! நீ இன்னும் குளிக்க போகலயா." என்று கேட்டார். "இதோ போயிட்டேன்மா!!! " என்று கத்திவிட்டு பேப்பரை மேசையில் போட்டுவிட்டு தன் அறைக்குள் புகுந்தாள். குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு ஹாலுக்கு விரைந்தாள். சுந்தரராமன் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார், யாழினி அன்னை கொடுத்த நான்கு இட்லியை உண்டு விட்டு, "அம்மா! பைய் லேட் ஆயிட்டு." என்று தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியில் விரைந்தாள்.

அப்போது சுந்தரராமனிடம் "அப்பா! பைய். " என்று ஸ்கூட்டியை நோக்கி விரைந்தாள். அப்போது சுந்தரராமன் "ஒரு நிமிஷம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்! " என்று கூறினார். "ஸாரிப்பா எனக்கு லேட் ஆகிட்டு பைய். " என்று கத்திவிட்டு அதற்கு மேல் அங்கு நில்லாமல் ஸ்கூட்டியில் பறந்துவிட்டாள்.

                           கௌதம்

காலையில் கௌசல்யாவின் குறளைக் கேட்டு கண் விழித்தான் கௌதம். நேற்றைய நிகழ்ச்சிகளை யோசித்து தனக்கு தானே புன்னகைத்தான்.

  கௌசல்யாவின் குறலினால் நிகழ்வாழ்க்கைக்கு வந்தான் கௌதம். கௌசல்யா "அண்ணா! பைய்! நான் காலேஜுக்கு போயிட்டு வரேன்! ", "ம்....! நானும் இன்னைக்கு சென்னைக்கு கிளம்புறேன். பைய்! "என்று சற்றே சோகமாக கூறினான். அவனிடம் விடைப்பெற்றுக் கொண்டாள் கௌசல்யா. செல்போன் ஒலியைக் கேட்டு அதை எடுத்து காதில் வைத்தான்.

காதல்  காற்று வீசும் நேரம்Where stories live. Discover now