தலை வலி

3.7K 153 22
                                    

                           யாழினி

"அக்கா இன்னும் வேலை இருக்கா? " என்று  கேட்ட ரக்ஷனிடம், தலையை ஆட்டினாள். " அக்கா அப்போ நீ உன்னோட வேலையைப் பாரு நான் காலேஜ் வரப் போகனும். " என்று கூறியவனைப் புரியாமல் பார்த்தாள் யாழினி. "ஓன்னும் இல்லக்கா லீவ் அப்ளைப் பண்றதுக்கு தான் வேற ஒன்னும் இல்ல " என்று அவன் கூற தலை அசைத்தாள் யாழினி. யாழினிக்கு சென்னையில் கிடைத்த ட்டிரன்ஸ்பரை
ஏற்று பணியில் சேரவே யாழினியும் ரக்ஷனும் அன்று காலை சென்னையை வந்தடைந்தனர்.யாழினி தன் வேலைகளை செய்ய, ரக்ஷன் காரில் தன் கல்லூரிக்கு சென்றான்.

                   கௌதம்.

"டேய் மச்சான் கல்யாணத்துக்கு வந்துருடா. சிஸ்டரையும் கூட்டிட்டு வா." என்று கௌதம் கார்த்திக்கிடம் கூறினான். "கண்டிப்பாடா! " என்று புன்னகைத்தான் கார்த்திக். "டேய்! இன்னைக்குதானே ஊருக்கு கிளம்புற?" என்று கார்த்திக் கேட்க தலை அசைத்தான் கௌதம். "அப்போ இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க? " என்று அவன் கேட்க, "இல்லடா கொஞ்சம் வேல இருக்கு அப்புறம் இன்னும் லீவ் அப்புரு பண்ணல ஆனா அப்புரு ஆயிரும். இன்னைக்கு சாய்காலம் தான் கிளம்பனும்." என்று கௌதம் விளக்கினான். "டேய் அப்போ நைட்டா ட்டிரவல் பண்ண போற?  பாத்துப் போடா." என்று கார்த்திக் கூற, தலை அசைத்தான் கௌதம். "டேய்! இன்னும் சிஸ்டர்க் கிட்ட பேசலதானே? " என்று அவன் கேட்க அதை கவனிக்காதது போல் நின்றான் கௌதம். "உன்னைய எல்லாம் வச்சுகிட்டு ரொம்ப கஷ்டம்டா! பேசவே இவ்வளவு தயங்குனேனா....... " என்று அவன் பெருமூச்சுவிடா கௌதம் அவனிடம் இருந்து நலுவினான்.

                        யாழினி

"டேய் ரக்ஷா வேல முடிஞ்சுட்டு ஆனா நாளைக்கு தான் லீவ் அப்பளைப் பண்ண முடியும் கண்டிப்பா இன்னைக்கு இங்க ஸ்ரே பண்ணணும். " என்றவளிடம்,  "ஃபைன் நோ ப்ரப்ளம்! " என்று புன்னகைத்தான் ரக்ஷன். செல்போனை எடுத்த யாழினி தன் தாயை அழைத்தாள்.

" ஆமாமா, நாளைக்கு தான்மா வருவேன். " "சரி! சரி! எனக்கும் புரியுதுமா! கல்யணத்துக்கு இன்னும் மூனு நாள் தான் இருக்கு அதுக்கு நான் என்னமா பண்ண முடியும். " "ஓகேமா!  நாளைக்கு சாயங்காலம் கண்டிப்பா நான் வீட்டுல இருப்பேன்." "பை மா. " என்று பேசிக்கொண்டிருத்த யாழினியைப் பார்த்துப் புன்னகைத்தவரே காரைச் செலுத்தினான் ரக்ஷன்.

காதல்  காற்று வீசும் நேரம்Where stories live. Discover now