யாழினி
கண்களில் கண்ணீருடன் நக்ஷத்திராவை அணைத்துக் கொண்டாள். அவளது ஆறுதலாக, அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் நக்ஷத்திரா. யாழினியின் சேலையை யாரோ இழுக்க, கீழே பார்த்தாள் யாழினி. அவளிடம் கைகளை நீட்டிய தேஜை வாரி அணைத்துக் கொண்டாள். அவன் யாழினியின் கலங்கிய முகத்தப் பார்த்து "ஏன் அழுர யாழினி? தாத்தா திட்டிடாங்கலா? " என்று வருத்ததுடன் மழலை மொழியில் கேட்க, கலங்கிய கண்களுடன் இல்லை என்பதுப் போல் தலை அசைக்க, நக்ஷத்திரா தேஜை வாங்கி கொண்டாள். நக்ஷத்திராவின் அணைப்பில் இருத்து தன்னிடம் வர போராடும் தேஜின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
ரக்ஷன் யாழினியிடம் அவளுக்கு பிடித்த சாக்லேடை நீட்ட அவள் இன்னும் அழ ஆரம்பித்தாள். "அக்கா! கம் ஆன்! சாக்லேட பாத்த ஒரு சிரிப்பு வருமே உன்னோட முகத்துல அந்த சிரிப்பு எங்க? அழுதேனா உனக்கு சாக்லேட் தரமாட்டேன், ரொம்ப நேரமா தேஜ் சாக்லேட் கேட்டுட்டு இருக்கான், அவனுக்கு கொடுத்துருவேன் பாத்துக்கோ! " என்று அவன் யாழினியை உற்சாக படுத்த முயற்சிக்க, யாழினி ரக்ஷனை இறுக்க அணைத்துக் கொண்டாள். யாழியை பார்க்க பார்க்க ரக்ஷனின் தொண்டை அடைத்தது.
"யாழினி சின்ன பிள்ளையா நீ! ஹா! என் தங்கம்ல அழக்கூடாதுடா. கண்ண தொடச்சிக்கோமா. பாரு மாப்பிள்ளை உனக்கு வேயிட் பண்றாங்க. " என்று கலங்கிய கண்களுடன் யாழினியை தேற்றினாள் பத்மா. தந்தையை இறுக்க அணைத்த யாழினி மலமலவென கண்ணீர் வடித்தாள். "மிஸ் யு அப்பா! லவ் யு பா! " என்று அழுதவளின் தலையை ஆறுதலாக தலையை தடவியவர், "யாழினி! இப்போ ஏன் நீ அழுற? ம்! " என்று அவளை தேற்றினார்.
காரில் அமர்தவள் கண்ணில் கண்ணீருடன், கை அசைக்க, கார் நகர்ந்தது. தலை குனிந்தவளின் கண்முன் கைகுட்டையை நீட்டினான் கௌதம். வேண்டாம் என்று தலை அசைத்தாள் யாழினி. கன்னத்தில் கண்ணீர் காய்ந்திருக்க, நித்திரா தேவி அவளை அணைக்க, கௌதமின் தோளில் கண் அயர்ந்தாள்.
அவளது கன்னத்தில் தொடுகையை உணர்ந்தவள், தூக்கத்தில் கண்களை திறக்க முயல, அவளது காதருகே "யாழினி! வீடு வந்திருச்சு எழுந்திரு. " என்று கௌதம் கூற பதறி கண் விழித்தாள் யாழினி. அவளது பயந்த முகத்தைப் பார்த்த கௌதம், "யாழினி! காம் டவுன்! வீடு வந்திருச்சு அதான் எழுப்புனேன். பதறாத." என்று புன்னகையோடு அவன் வெளியேரி அவள் இறங்க கரம் கொடுத்தான். முதலில் தயங்கிய யாழினி அவனது கரத்தை ஏற்றுக் கொண்டாள்.

YOU ARE READING
காதல் காற்று வீசும் நேரம்
ChickLit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.