"பிரவீன்"........
"ஹாய்! " என்று கை அசைத்து விட்டு கண் அடித்தவனைப் பார்த்து,
அதிர்ந்தவள் பின் ஏதோ உணர்ந்தவள் போல், முகத்தை திருப்பிக்கொண்டு தேஜுடன் தன் அறைக்குள் புகுந்தாள். "ஏ! என்னாச்சு ஏன் முகத்த திருப்புற? " என்று புரியாமல் வினாவினான் பிரவீன். அவனை பார்த்து முறைத்த யாழினி, "என்னோட எங்கேஜ்மென்டுக்கு வர மாட்டேனு சொன்னவங்கள எல்லாம் நான் பாக்க ரெடியா இல்ல. " என்று கூறினாள். "யாழினி!!! நான் வரமாட்டேனு சொல்லவே இல்லயே? எனக்கு வேலை இருக்குனுதானே சொன்னேன்." என்று விவரித்தான் பிரவீன். யாழினி பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருக்க, " கமான் யாழினி, உன்னோட எங்கேஜ்மென்ட அடன்ட் பண்றதுக்காக மும்பைல இருந்து வந்துருக்கேன்! நீ என்னனா முகத்த திருப்புற! " என்று புலம்ப, யாழினி எதையும் கண்டுக்கொள்ளாததுப் போல் அமைதியாய் இருந்தாள். "யாழினி திஸ் இஸ் டூ மச்!! புரிஞ்சுக்கோ யாழினி, எனக்கு எக்ஸாம் நடந்துட்டு இருக்கு அதனாலதான் அப்படி சொன்னேன்." என்று கெஞ்சும் கூரலில் பேசிவிட்டு, யாழினி பாதிப்பில்லாமல் நிற்பதய் பார்விட்டு ஒரு பெருமூச்சு விட்டவன், காதை பிடித்து "ஓகே யாழினி! தப்புதான் சாரி! மன்னிச்சுக்கோ! " என்று அவன் கெஞ்சலோடு யாழினியை பார்க்க அவன் புன்முருவல் பூக்க, பெருமூச்சு விட்டவன், " ம் இப்பதான் கல்யாணப் பொண்ணு மாதிரி இருக்குற " புன்னகைத்தான்.கௌதம்
" அத்தான் சாப்பிட வாங்க " என்ற குரலில் தன் சிந்தனையில் இருந்து வெளியே வந்தவன், புன்னைகையோடு ரக்ஷனைப் பின் தொடர்ந்தான்.
ரக்ஷன் மணமகன் அறைக்கு கௌதமை அழைத்துச் சென்றான். இருவரும் அமர்ந்திருக்கும் போது கதவை யாரோ தட்ட ரக்ஷன் கதவைவ் திறந்தான். "பிரவீன்!!! " என்று அதிர்ந்தவன் அவனை அனைத்துக் கொண்டான். "எப்படிடா இருக்க? நீ வரமாட்டேனு த்த சொன்னாங்க!" என்று கேள்விகளை அடுக்க, பிரவீன், "நல்லா இருக்கேன், நான் வரமாட்டேனுதான் நினைச்சேன் அப்புறம் யாழினியை நினைச்சேன், பின்விழைவுவ நினைச்சேன்! அப்புறம் எப்படி இருக்க தோனும் அதான் வந்திட்டேன்." என்று கூறியவனைப் பார்த்து ரக்ஷன் சிரித்தான். பின் கௌதமைப் பார்த்து, "அத்தான்! இது பிரவீன், என்னோட அத்த பையன். மும்பையில எம். பி.ஏ. பன்றான்." என்று கூறிவன் பிரவீனிடம் திரும்பி, "இவுங்க..." என்று ஆரம்பித்தவனை பார்த்து பிரவீன், "தெரியுமே! கௌதம்,யாழினியோட மாப்பிள்ளை. " என்று முடித்தவன் கௌதமிடம் நலம் விசாரித்தான்.
KAMU SEDANG MEMBACA
காதல் காற்று வீசும் நேரம்
ChickLit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.