க்ரஷ்

4.6K 161 69
                                    

யாழினி

கண்ணை கசக்கிக் கொண்டு வெளியே வந்த ரக்ஷன், சமயலறைக்குள் சென்றான். காலை உணவை செய்துக் கொண்டிருந்த யாழினியிடம், "குட் மார்னிங் அக்கா." என்று புன்னகைக்க, "குட் மார்னிங் ரக்ஷா! ப்ரெஷ் பண்ணிட்டியா? " என்று கேட்க, "என்னைய உன்ன மாதிரி நினைச்சியா? " என்று அவன் காலையிலேயே வம்பிழுக்க, யாழினி, "எக்ஸக்ட்லி, நீ என்னை மாதிரி கிடையாது. அதான் கேக்றேன். " என்று சரிக்கு சரி தயாரானாள். ரக்ஷன் இரு கைகளையும் உயர்ந்தியவன், "உனக்கு சப்ஸ்டிடூட்டே கிடையாது அக்கா. " என்று சரண்னடைய, இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள், யாழினி.

இருவரும் எப்போதும் போல் கேலியும் கிண்டளுமாக பகலை கழிக்க, மாலையில், காஃபி கப்புடன் அமர்ந்து இருவரும் கதை அடிக்க, ரக்ஷன், "அக்கா.... உன்கிட்ட ஒன்னு கேக்கவா?" என்று வினாவினான்.  "ம்.... கேளு." என்று இசைந்தாள். "கேக்றேனு தப்பா நினைக்காத.... ஹப்பியா இருக்கியாகா?" என்று கேட்க, "ம்.... ஹப்பியா தானே இருக்கோம். இதுல்லா தப்பா நினைக்க, என்ன இருக்கு?" என்று வினாவ, "நான் என்கூட ஹப்பியா இருக்கியானு கேக்கல. அத்தானோட ஹப்பி இருக்கியா? அத்தான் உன்னைய நல்லா பாத்துக்குறாங்க தானே?" என்று விளக்கிக் கேட்க, "கௌதம்.........செம கேரக்டர் தெரியுமா. காலையில குக்கிங்ல எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க, என் மேல அக்கறையா இருப்பாங்க, நேத்துக் கூட நான் டக்ஸி புக் பண்ண மறந்துட்டேன், கௌதம் தான் நான் மறந்திடுவேனு தெரிஞ்சு, அவங்களே புக் பண்ணிட்டாங்க. நேத்து போனோம்ல அந்த பார்க்குக்கு தான் நாங்க ரெண்டு பேரும் அடிக்கடி போவோம். எனக்கு அது என்ன பீல்னு சொல்ல தெரியல, கௌதம் கூட இருக்கும் போது ஒரு மாதிரி காம்மா பீல் பண்றேன், சேஃபா பீல் பண்ணுறேன். எனக்கு அந்த பீல்ல டிஃப்பைன் பண்ண தெரியல." என்று புன்னகையோடு முடித்தாள்.

மறுநாள் காலை ரக்ஷன் கல்லூரிக்கு செல்ல ஆயத்தமானான், "அக்கா! இன்னைக்கு காலேஜ் போறேன். அத்தான் வர நாள் ஆகும்னா எனக்கு கால் பண்ணு நான் இங்கே வரேன், அத்தான் வர்ர வரைக்கும் இங்க இருந்து காலேஜ் போறேன். ஓகேவா?" என்று கேட்க, அவனை இமைக்காமல் பார்த்தவளின், முகத்தின் முன் கைகளை அசைத்தவன், "ஏன் அப்படி பாக்குற?" என்று கேட்க, ஒன்றும் இல்லை என்பது போல் தலை அசைத்தவள், "நீ ரொம்ப வளந்துட்ட ரக்ஷா. இப்போல்லாம் ரொம்ப மெச்சுவர்டா பிஹெவ் பண்றே." என்றவள் அவனது தலையை கோத, "எவ்வளவு வளந்தாளும் நான் உன்னோட செல்ல, சேட்டகார தம்பி தான்." என்று யாழினியை அணைத்தவன், ஒரு சோக புன்னகையுடன் விடைப் பெற்றுக் கொண்டான்

காதல்  காற்று வீசும் நேரம்Where stories live. Discover now