யாழினி
"எப்போ திருப்பி வருவீங்க கௌதம்? ", என்று யாழினி கேட்க, "தெரியல யாழினி மினிமம் த்ரி டேய்ஸ் ஆகும். கண்ஃபமா தெரியல." என்று அவன் கூறியவாறு அவளது அலுவலகம் முன் காரை நிறுத்தினான். "ஏன் திடீருனு பெங்களுர்? உங்களுக்கே இப்போதான் உடம்பு சரியாயிருக்கு......" என்று புலம்பியவளின், முகத்தை பற்றி தன் புறம் பார்க்க செய்தவன், அவள் கண்களைப் பார்த்து, "அடுத்த வார ப்ளான் யாழினி, நீயே பாத்தேல, இப்போதானே கால் வந்துச்சி? நீ கவலபட அவசியமே இல்ல. நான் உடம்ப நல்ல பாத்துக்கிறேன். ஓகேவா? " என்று அவன் கேட்க, அவனை கண் கொட்டாமல் பார்த்தவள், தலை அசைத்தாள். காரை விட்டு இறங்க சென்றவளின் கரத்தை பற்றியவன், "தனியா இருந்திருவியா யாழினி?" என்று கண்களில் அக்கறையோடு கேட்க, புன்னகையோடு தலை அசைத்தாள்.
அலுவலகம் முடிந்து தன் உடமைகளை எடுத்துக் கொண்டிருந்தவளின் செல்போன் சினுங்க, அதை எடுத்தவள், "சொல்லுங்க கௌதம்... " என தொடங்க, "யாழினி வீட்டுக்கு கிளம்பிடியா? " என்று கேட்க, "ம்.... கிளம்பிட்டேன் கௌதம். ஏன்? என்னாச்சு? " என்று கேட்க, "இல்ல.... எப்பவுமே நான்தான் என் ஒய்ப்ப பிக் பண்ணுவேன். இன்னைக்கு நான் இல்லாததால மேம்ம டக்ஸி புக் பண்ண சொன்னேன். அதான் அவங்க புக் பண்ணிட்டாங்களானு கேக்க போஃன் பண்ணேன்." என்று அவன் குறுப்பு தொனித்த குரலில் கேட்க, "ஸ்..... மறந்திட்டேன் கௌதம்.... இப்போ புக் பண்றேன்." என்று அவள் தனது நாக்கை கடிக்க, " தெரியுமே... நீ கண்டிப்பா மறந்திருவேனு. எனக்கு சொல்லும்போதே தெரியும், அதனால, நானே புக் பண்ணிட்டேன். கேஃப் வெளியே நிக்கு, உனக்கு ஓடிபி சென்ட் பண்ணிருக்கேன். வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணு. ஓகேவா?" என்று அவன் கூற, புன்னகைத்தவள், "ஓகே. பாய் கௌதம்." என்று கூறி இணைப்பை துண்டித்தவளின் கண்ணம் லேசாக சிவந்திருந்தது.
கண்களை முடி படுத்தளுக்கு தூக்கம் வர மறுக்க, படுக்கையில் புரண்டு கொண்டே இருந்தாள்.
காலையில் சோர்வாக உணர்ந்தவள், விதியே என்பதுப் போல் நடமாட, அவளது செல்போன் சினுங்க, "சொல்லுங்க கௌதம்." என்று சோர்வான குரலில் கேட்டாள்.
YOU ARE READING
காதல் காற்று வீசும் நேரம்
ChickLit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.