பெண் பார்க்கும் படலம்.

5.3K 180 24
                                    

யாழினி மதியம் உணவு உண்டுவிட்டு டி.வியின் முன் அமர்தாள். ரக்ஷன் ரீமோட்டை வைத்து சேனலை மாற்றிக் கொண்டிருந்தான். அப்போது
"தூவானம் தூவ தூவ மழைத் துளிகளில் உன்னைக் கண்டேன்.
என் மேலே ஈரமாக உயிர் நனைவதை நானே கண்டேன்.
கடவுள் வரங்கள் தரும் பல கதைகள் கேட்டேன்,
அவரே வரமாய் வருவதய் இங்கு பார்த்தேன்."
பாடல் ஓடிக் கொண்டிருந்தது.ரக்ஷன் அதையும் மாற்றினான்.அப்போது யாழினி ஆவழுடன், "ரக்ஷா அந்த பாட்ட வைடா. பிளிஸ்! "என்று கெஞ்சினாள். ரக்ஷன் எரிச்சலுடன், " போ! உனக்கு வேற வேலையில்லையா?  நான் மேட்ச் பாக்கனும்" என்று எரிச்சலாக கூறினான். முகத்தில் கோபத்துடன், "போடா! உன்கிட்ட போய் கேட்டேன் பாரு " என்று முகத்தைச் சுழித்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றாள்.

பத்மா யாழினியின் அறைக்குள் நுழையும் போது யாழினி  செல்போனை நோண்டிக் கொண்டிருந்தாள்.
"யாழினி  இன்னைக்கு என்ன புடவ கட்டப் போற? ", என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தார். அதற்கு யாழினி  கொஞ்சும் குரலில் "அம்மா கோவில் கூட்டமா இருக்கும்ல மா அதனால நான் சுடிதார் போட்டுகிறேனே! எனக்கு கம்போட்டபுளா இருக்கும். பிளிஸ்மா! " என்று கெஞ்சினாள்.
முகத்தை ஏரிச்சலாக மாற்றிய பத்மா, "நீ என்கிட்ட அடிதான் வாங்க போற. நான் என்ன எடுத்து வைக்கேனோ அதை போடு. உன்கிட்ட போய் கேக்க வந்தேன் பாரு. " என்று யாழினியின் கப்போடைத் திறந்து புடவைகளை ஆராய்ந்தார். யாழினி (ஆமா நான் சொன்ன உடனே நீங்க செய்யவா போறீங்க? சே! எரிச்சலா வருது. எவனோ ஒருத்தன் பாக்க வர்ரதுக்கு நான் திட்டு வாங்க வேண்டியதா இருக்கு) .

                        கௌதம்

காலையுணவு  முடிந்தவுடன் தன் அறைக்குள் சென்றவன், நண்பகலில் வெளியே வந்தான். அவன் வெளியே வருவதை பார்த்த கௌசல்யா, "என்னணா நீ  ! நான் உன்னைய எத்தன தடவ கூப்டேன், நீ ஏன் ரூமைத் திறக்கவே இல்ல? என் மேல கோபமா இருக்கியா? ", என்று குழந்தைப்போல் வினாவினாள்.
அவளைப் பார்த்து சிரித்துவிட்டு "அப்படியெல்லாம் இல்லமா கொஞ்சம் முக்கியமான ஆபிஸ் ஒர்க் அதான்." என்றான்.
அதற்கு புன்னகைத்துவிட்டு,  "ஒரு நிமிஷம் வேட் பண்ணு நான் போஃட்டோ எடுத்துட்டு வரேன்", என்று தன் அறையை நோக்கி நடத்தாள் கௌசல்யா.

காதல்  காற்று வீசும் நேரம்Where stories live. Discover now