கௌதம்
வானொளியில், பாடல் கேட்டவாறு தூத்துக்குடியை நோக்கி காரை செலுத்தினான். காற்று விளையாடி கொண்டிருக்கும் கூந்தலை சரி செய்தவாறு அமர்ந்திருந்தாள் யாழினி. பாடல்களை முனு முனுத்துக் கொண்டிருந்த யாழினியின் செல்போன் சினுங்கியது. அதில் பிரவீனின் பெயரை பார்த்துப் புன்னகைத்தவள், அதை காதில் வைத்தாள். "சொல்லுடா பிரவீன்! எப்படி இருக்கா?" என அவள் கேட்க மறுமுனையில் பிரவீன், "நான் நல்ல இருக்கேன். புதுப் பொண்ணு எப்படி இருக்கீங்க? "என்று கேட்க, யாழினி, " ம்! நல்லா இருக்கேன். எக்ஸாம் எப்படி பண்ண? " என்று கேட்க, பிரவீன், "ம்! பண்ணிருக்கேன்." என்று கூற, "யுனிவர்சிட்டி டாப்பர் சொல்ற வார்த்தையா இது? " என்று பொய்யாக அதிர்ந்தவாறு செய்கை செய்ய, பிரவீன், "நீயும் கலாய்காத யாழினி!" என்று அவன் சினுங்க, யாழினி, "ஓகே! ஓகே !எக்ஸாம்ஸ் முடிஞ்சிட்டுதானே? எப்போ ஊருக்கு வார? " என்று கேட்க, அவன், "இன்னைக்கு கிளம்புரேன் யாழினி. " என்று உற்சாக குரலில் கூற, "செம! போ. " என்று அவள் மெச்சினாள். பிரவீன், "சரி யாழினி நான் கிளம்பபோறேன், நான் நாளைக்கு பேசுரேன். பாய்! " என்று விடைப் பெற்றுக் கொண்டான்.
கௌதம்
பேசிவிட்டு செல்போனை வைத்தவள், வெளியே வேடிக்கை பார்க்களானாள். ( ஏதாவது பேச ஆரம்பிபோமா? என்ன பேசுரது? கோவில்ல கட்டிடம், கலைனு பேசியாச்சு. இப்போ என்ன பேசுரது?) அவன் புறம் திரும்பிய யாழினி, "உங்களுக்கு மெலோடி சாங்ஸ் ரொம்ப பிடிக்குமா கௌதம். " என்று கேட்க, கௌதம் வண்டியை நிருத்தினான். அதை எதிர்பார்க்காத யாழினி "என்னாச்சு? " என்று திகைக்க, "என்ன சொன்ன? " என்று கௌதம் ஆச்சரியமாக கேட்க, முகத்தில் குழப்ப ரேகையுடன், "உங்களுக்கு மெலோடி பிடிக்குமானு கேட்டேன்? " என்று கூற, "இல்ல என்னனு கூப்ட? " என்று கேட்க, குழப்பமா "கௌதம்? அதுதானே உங்க பேரு? " என்று கேட்க, புன்னகைத்தவன் ( நான் கனவு காண்றதா நினைச்சிட்டேன்.) " ஒன்னும் இல்ல. " என்று கூற, "ஏன் அப்போ அப்படி ரியக்ட் பண்ணீங்க? நான் ஒரு நிமிஷம் பயந்திட்டேன். " என்று அவள் கண்களை உருட்ட, கௌதம், "இல்ல, நீங்க, வாங்கனே கூப்பிட்டு இருந்தியா? அதான் பெயர் சொன்னவுடனே கொஞ்சம் ஜெர்க் ஆயிட்டேன். " என்று கூற, "ஏன் உங்களுக்கு நான் உங்கள பெயர் சொல்லி கூப்புடுரது அன்கம்ஃபோடபுலா இருக்கா? " என்று கேட்க, கௌதம் "இல்ல, இல்ல இதான் கம்ஃபோடபுலா இருக்கு. நீ அப்படி கூப்புடும்போதுதான் எனக்கே நான் வயசான மாதிரி தோனுச்சி. " என்று இதழ் விரித்தான்.
YOU ARE READING
காதல் காற்று வீசும் நேரம்
ChickLit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.