சம்மதம்

5K 171 20
                                    

வரிசையில் நிற்கும் போது ஜெயலஷ்மி,  "எனக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு" , என்றார். கௌசல்யா, "எனக்கும் மா, அவங்க ரொம்ப பொலைட்டா இருக்காங்கல " என்றாள்.
அதற்கு மாதவன், "ஆமா! எனக்கும் பொண்ண பிடிச்சிருக்கு .என்னப்பா கௌதம் உனக்கு பொண்ண பிடிச்சிருக்கா? ", என்று கௌதமை பார்த்தார் மாதவன்.
அதற்கு கௌதம் (அதான் ஃப்ளாட் ஆகியாசே)  , "உங்களுக்கு பிடிச்சிருக்குனா எனக்கு ஓகே" என்றான்.
அப்போது கௌசல்யா, "அப்போ உனக்கு பொண்ண பிடிக்கல? ",  என்று நக்கல் போல் வினாவினாள். உள்ளுக்குள் பதட்டமான கௌதம், அதை வெளியே காட்டாமல், "அப்படி இல்ல, உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கும் ஓகே", என்றான்.

அதற்கு கௌசல்யா, "பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குனு சொல்லு இல்லேனா பிடிக்கலைனு சொல்லு, அதென்ன உங்களுக்கு ஓகேனா, எனக்கு ஓகே " என்று நக்கலடித்தாள்.
அசடு வலிந்த கௌதம், "தங்கச்சினா அண்ணணோட மானத்த காப்பாத்தனும், இப்படி கப்பலேத்த கூடாது" , என்றான்.
அதற்கு கௌசல்யா,  "அப்புறம் என்ன சும்மா. எங்களுக்காக லைப்பை சாக்கிரிபைஸ் பண்ற மாதிரி பேசுற " என்றாள்.
ஜெயலஷ்மி,  "டேய் ஒழுங்க சொல்லுடா, உனக்கு பொண்ண பிடிச்சிருக்கா, இல்லையா? " என்று கேட்டார். (டேய்!  கௌதம் எல்லாரும்  ஒன்னு கூடிட்டாங்க. ப்பரிஸ்டீஜ் பார்க்காம பிடிச்சிருக்குனு சொல்லிரு)  " ம் புடிச்சிருக்கு மா " என்று புன்னகைப் பூத்தான்.
"அப்படி வா வழிக்கு. இத முதல்லயே சொல்லிருக்கலாம்ல " என்று சிரித்தாள் , கௌசல்யா.
ஏன் என்று தெரியாத சந்தோஷம் ஜெயலஷ்மியின் மனதில் குடி கொண்டது. அப்போது கௌதமின் செல்போன் ஒலித்தது.
"அம்மா முக்கியமான கால்,  நான் வெளியே போய் பேசுறேன்", என்று இடத்தை விட்டு நகர்தான்.
"டேய் தரிசனம் பண்ணிட்டு போடா " என்று மாதவன் கூறினார்.
"இல்லப்பா இன்னோரு நாள் தரிசனம் பண்ணிக்கிறேன்" , என்று விட்டு கூட்டத்தை விட்டு வெளியே விரைந்தான்.
                   
                        யாழினி

சுந்தரராமன், "பத்மா நீ என்ன நினைக்கிறே? " என்று வினவினார். "எனக்கு பிடிச்சிருக்கு நீங்க என்ன நினைக்கிறீங்க? " என்று சந்தேகமாக கேட்டார்.
"எனக்கும் பிடிச்சிருக்கு. நாம விசாரிச்சதுலயும் எல்லாரும் நல்லா சொன்னாங்க. யாழினி! நீ என்னமா நினைக்கிற? " என்று அவளது அபிப்பிராயத்தைக் கேட்டார் சுந்தர ராமன்.
யாழினி, "எனக்கு ஒன்னும் தோணலப்பா! நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதையே பண்ணுங்கப்பா " என்று சாதாரணமாக கூறிவிட்டு குளத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
பத்மா ஒரு மூச்சி விட்டுவிட்டு சுந்தர ராமனைப் பார்த்தார். அப்போது ரக்ஷனின் செல்போன் சிணுங்கியது. அங்கு சத்தமாக இருந்ததால், அமைதியான இடத்தை தேடினான் ரக்ஷன். தன் நண்பனிடம் பேசிவிட்டு திரும்பினான்.

காதல்  காற்று வீசும் நேரம்Where stories live. Discover now