அன்று இரவு உணவு மிகவும் அமைதியாக நடந்தது. உணவுக்கு பின் தந்தையிடம் பேசலாமா என்று யாழினி யோசித்தாள். ஆனால் தந்தையிடம் என்ன கூறுவது என்று அவளுக்கு தெரியவில்லை.
கல்லூரியில் பயிலும் போதே, தான் திருமணம் செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தாள், யாழினி. அதை ஒரு நாள் தாயிடம் கூறினாள்.
அவளது தாயும் தந்தையும் அவளிடம் நண்பர்களைப் போலத்தான் பழகுவார்கள்.சிறு வயது முதல் யாழினியும் அவளுடைய தம்பி ரக்ஷனும் பெற்றோர்களுடன் நண்பர்களாகவே பழகினார்கள். விடுமுறை நாட்களில் அனைவரும் அமர்ந்து பேசுவதும் சிரிப்பதுமாக இன்பமாய் அமையும்.
சாதாரணமாய் ஒரு தோழியிடம் சொல்வது போல தனது முடிவையும் அம்மாவிடம் கூறினாள். முதலில் அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று அறிவுரை கூறியவர், பின்பும், அவள் அதையே கூறவும் கோபமடைந்து, குடும்பத்தலைவரிடம் கூறினார்.
யாழினியின் தந்தை முதலில் வருத்தப்பட்டுவிட்டு பின்பு, " அப்படியெல்லம் சொல்லாதேமா, அது என்னை காயப்படுத்துகிறது " என்று கூற அத்துடன் அந்தப் பேச்சை வீட்டில் யாரும் எடுப்பதில்லை.பின்பு அவள் பி.எஸ்சி முடித்து எம்.பி.ஏ சேர்ந்தாள். அதன் பின் பேங் எக்ஸாம் எழுதி அதில் தேர்ச்சி பெற்றவுடன், பத்மா கல்யாணப் பேச்சை எடுத்துவிட்டாள். அன்றில் இருந்து ஒரே போர்களம்தான். போர்களம் என்றால் எப்போதும் சண்டையிட்டு கொண்டே இருப்பார்கள் என்று கூற முடியாது, ஆனால் வரன் வரும் நேரம் எல்லாம் சண்டைதான்.
உணவு அருந்திவிட்டு அனைவரும் எழவும், தந்தையிடம் பேசியே ஆகவேண்டும் என்று முடிவுசெய்து,"அப்பா! உங்க கிட்ட ஒன்னு பேசனும் " என்று சொல்ல, "என்னம்மா " என்று கேட்டார் தந்தை சுந்தர ராமன்.
"நான் என்ன பேசுவேன்னு உங்களுக்கு தெரியாதா", என கேட்டாள்.
அவரோ "நான் என்ன மந்திரவாதியா,நான் ஒரு Treasury officer, எனக்கு எப்படிமா உன் மனசுல இருக்கிறது தெரியும். " என்று நக்கலாக வினாவினார்.
"ஓகே அப்பா, இதுக்கு மேல மறைமுகமா சொல்லிப் பயனில்லை! நாளைக்கு அவங்கள பொண்ணு பார்க்க வராதீங்கன்னு நீங்க சொல்ல மாட்டீங்க, அதனால ஒரு கண்டிஷன்!" என்றாள் யாழினி.
"என்ன கண்டிஷன்? " என்று பெற்றோர் இருவரும் கேட்பதற்கு முன் இன்னொறு குரல் கேட்டது.மூவரும் திடுக்கிட்டு அறை வாசலை திரும்பி பார்த்தனர்.ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்
Editing credit goes to Srinidhisweety
If u enjoyed the update plsssssssss vote and comment.It means a lot to me😊😊
Thank U for reading😊😊😊
BYE⭐⭐⭐⭐🌟
ESTÁS LEYENDO
காதல் காற்று வீசும் நேரம்
Chick-Lit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.