காலிங் பெல் அடிக்க, கிட்சனில் இருந்த யாழினி திறக்க ஓடினாள்.
கதவை திறந்தவளை கண்டவுடன், "யாழினி மா!" என்று உற்சாகமாக கத்திய தேஜ், நக்ஷத்திராவிடம் இருந்து யாழினியிடம் சென்று, அவளது கழுத்தை கட்டிக் கொண்டான்.
"வாங்க அத்தான், வா அக்கா. உள்ள வாங்க", என்று வரவேற்றாள்.
அவர்களை சோபாவில் அமர்த்தியவள், "எப்படி இருக்குறீங்க அத்தான்?" என்று கேட்க,
"நான் நல்ல இருக்கேன் யாழினி. நீ எப்படி இருக்க? கௌதம் எங்க?" என்று கேட்க,
"தூங்கிட்டு இருக்காங்க........" என்று அவள் பெட் ரூம்மை நோக்கி நடக்க, அவளை விட்டாள் மறைந்தி விடுவாள் என்பது போல் கட்டி அணைத்திருந்தான் தேஜ்.
உறங்கி கொண்டிருந்த கௌதம் அருகில் சென்றவள், "கௌதம்.....அக்காவும் அத்தானும் வந்துட்டாங்க எழுந்திருங்க." என்று அவனை எழுப்ப, கண்களை திறந்தவன், யாழினியையும் அவளை அணைத்திருந்த தேஜையும் பார்க்க, அவனது உதடுகள் புன்னகை பூத்தன.
"குட் மர்னிங்" என்று சோம்பல் முறித்தவன், "நான் ப்ரஷ் ஆயிட்டு வாரேன் யாழினி" என்று கூறி குளியலறையை நோக்கி நடக்க, யாழினி சமையலறைக்கு சென்றாள்.
அவள் பின்னால் நக்ஷத்திராவும் வர, அவளிடம் பேசிக்கொண்டே காபி போட துவங்கினாள் யாழினி.ஆதித்யாவும் கௌதமும் பேசிக் கொண்டிருக்க யாழினி அனைவருக்கும் காபியை கொடுத்தாள்.
அனைவரும் பேசிக் கொண்டிருக்க, தேஜ் யாழினியின் முகத்தை தன் கைகளால் பிடித்து தன் புறம் திருப்பி, "யாழினிமா............ நான் சொல்றத கேளு...." என்று அவன் அவனது கதைகளைக் கூற ,அவன் கூறுவதை கேட்க தொடங்கினாள்.
பேசிக் கொண்டிருந்தவள் கடிகாரத்தை பார்க்க, "அக்கா.... நேரம் ஆயிட்டு நீ கிளம்ப ஆரம்பி, நீ இப்போ கிளம்புனா கல்யாண மண்டபத்துக்கு போய் சேரும் போது டைம் கரக்டா இருக்கும்." என்று கூற "ஆமா, டைம் ஆயிடுச்சு" என்ற நக்ஷத்திராவும் ஆதித்யாவும் கிளம்ப ஆரம்பித்தனர்.
மூவரும் கிளம்பி ஹாலில் இருக்க கௌதம், ஆதித்யாவிடம் "நான் கார்ல உங்கல டிராப் பண்றேன்" என்று அவன் கார் கீயை எடுக்க, ஆதித்யா, "ஐயோ கௌதம் நான் கேப்ல போய்ருவேன். ஆல்ரெடி கேப் புக் பண்ணிட்டேன் ", என்று கூற, கௌதம் "பரவாயில்ல கேன்சல் பண்ணுங்க, நான் கூட்டிட்டு போறேன்", என்று கூற, ஆதித்யா, "பரவயில்ல கௌதம் கேப் இப்ப வந்துரும்..." என்று கூறி முடிக்கவும் அவனது செல்போன் சிணுங்க, "இதோ வந்துட்டு", என்று கூறி விடை பெற தொடங்கினார்கள்.
அதுவரை அமைதியாக இருந்த தேஜ், யாழினி தன்னுடன் வரவில்லை என்று உணர்ந்து, "யாழினிமா! நீ வரமாட்டியா?", என்று வினவ, யாழினி இல்லை என்பதுப் போல் தலை அசைத்தாள்.
YOU ARE READING
காதல் காற்று வீசும் நேரம்
ChickLit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.