10.

3.8K 141 1
                                    

      ஆனந்த் தன் குப்பத்துக்குள் நுழைந்தான்.ஒவ்வொரு வீடாக தான்டி கடைசியில் ஒரு வீட்டின் முன் நின்றான்.ஆர்த்தியும் அவன் பின்னால் வந்து நின்றாள்.

"பாட்டி! பாட்டி!",என்று அழைத்தான்.
ஒரு பாட்டி மெதுவாக வந்து எட்டி பார்த்தார்.

"நீ இங்கேயே இரு.நான் இப்போ வந்தரேன் ",என்று ஆர்த்தியிடம் கூறினான்.அவள் எதுவும் பேசாமல் அவனை பார்த்தாள்.உள்ளே சென்று பாட்டியிடம் ஏதோ கூறினான்.பாட்டி சரி என்பதை போல தலை அசைத்தார்.

"உன் பிரச்சணை தீரும் வரை நீ இங்கே தங்கிகலாம்.நான் பாட்டிகிட்ட பேசீட்டேன்.என் வீடு 4 வீடு தள்ளி தான்  இருக்கு.எதாவது வேனும்னா தயங்காம என்னை கேளு",என்றான்.
அவள் எதுவும் பேசவில்லை.

"நான் பார்த்துகுரேன் பா.நீ பயபடாம போ",என்றார் பாட்டி.
அங்கு இருந்து செல்ல மனம் இல்லாமல் வீட்டை நோக்கி சென்றான் ஆனந்த்.அவள் இப்போது இவ்வளவு அருகில் இருப்பது ஒரு வித சந்தோசத்தை தந்தாலும்.அவளின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்று எண்ணும் போது ஒரு பட படப்பு உருவானது.

             ஐஷ்வர்யா கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தாள்.ஒரு சுவர் ஓரம் சில ஆண்கள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள்.ஐஷ்வர்யா அவர்களை கடந்த போது ஒருவன்

"யேய் உன் அக்கா ஓடி போயிட்டா.நீ எப்போ போக போர",என்றான் அவளை பார்த்து.ஐஷ்வர்யா கோவத்தில் கொப்பளித்தாள்.

அவன் அருகில் சென்று "என்ன சொன்ன",என்றாள்.

"நீ எப்போ ஓடி போக போர நு கேட்டேன்",என்றான் சிரித்துக் கொண்டே.

"நீ செத்ததுக்கு அப்புறம் டா",என்று கூறி அவனை ஓங்கி அரைந்தாள்.

       அனைவரும் அதிர்ச்சியாக அவளை பார்த்தார்கள்.அவன் கோவத்தில் அவள் கையை முறுக்க முற்பட்டான் ஆனால் அவன் நண்பர்கள் அவனை தடுத்தனர்.அங்கு அவனுக்கும் அவளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.திடீர் என்று ஒரு கார் அவள் அருகில் வந்து நின்றது.அர்ஜுன் அதில் இருந்து இறங்கினான்.

"ஐஷ்வர்யா என்ன இது ரோட்டில் அசிங்கமாக.வா போகலாம்",என்றான்.

"ஆமா கூப்பிடுரார்ல போ.இவன் கூட தான நீ ஓட போற",என்று அவன் கூறி சிரித்தான்.

அது வரை அமைதியாக இருந்த அர்ஜுனுக்கு கோவம் வந்தது."ஆமா டா.என் கூட தான் அவ ஓட போற.உனக்கு வக்கு இருந்தால் நீயும் எவ கூடையாவது போ",என்று கூறிவிட்டு அவளை தர தரவென இழுத்து வந்து வண்டியில் ஏற்றி வண்டியை கிளப்பினான்.

ஐஷ்வர்யா அதிர்ச்சி அடைந்தாள்.ஒரு சிறிய மகிழ்ச்சி வந்து தொற்றிக் கொண்டாலும் அவன் கோவத்தில் சொன்ன வார்த்தை அது.அது உண்மையாக நடக்க வாய்ப்பு இல்லை என்பதை உணரும் போது அந்த மகிழ்ச்சி சட்டென மறைந்தது.

       சிறிது நேர மௌனத்துக்கு பிறகு"இப்போ நம்ம எங்கே போறோம்",என்றாள் ஐஷ்வர்யா.அர்ஜுன் சட்டென்று வண்டியை நிறுத்தினான்.

"தெரியலை கோவத்தில் இவ்வளவு தூரம் ஓட்டிவிட்டேன் ",என்றான்.
அவள் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"எதுக்காக கண்ட பசங்களோடு சண்டை போடுகிறாய்",என்றான் அமைதியாக.

"அவன்  அக்காவை பற்றி என்ன சொன்னான் என்று தெரியுமா",என்றாள் வெறுப்பாக.

"இவன் உன் முன்னால் பேசினான் என்று சண்டைக்கு போன.உனக்கு பின்னாடி எத்தனையோ பேர் எத்தனையோ விதமா பேசுவாங்க.எல்லாருடைய வாயையும் அடைக்க முடியுமா உன்னால்",என்றான்.

"மற்றவர்களை பற்றி விடுங்க.நீங்களும் அப்படி தான் நினைக்கிறீங்களா அக்காவை பற்றி",என்று கேட்டாள்.அவன் முகம் மாறியது.

"நான் அப்படி நினைப்பேனா.உன் அக்காவை நான் காதலிப்பது வேற விஷயம் ஆனால் ஒரு நண்பனாக அவளை பற்றி எனக்கு நல்லா தெரியும்.அவள் யாரையும் காதலிக்கவில்லை
அப்படியே எனக்கு தெரியாமல் காதலித்து இருந்தாலும் பெரியவர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளுவாளே தவிற ஒடி போக ஒரு நாளும் முடிவு எடுதிருக்க மாட்டாள்",என்றான் உறுதியாக.

       ஐஷ்வர்யா பெரு மூச்சு விட்டாள்.இவன் தன் அக்காவின் மீது வைத்திருக்கும் காதலை எண்ணி சந்தோச படுவதா இல்லை அவன் மீது அவள் வைத்திருக்கும் காதல் அவனுக்கு புறியாமல் போனதை எண்ணி வருத்தப்படுவதா என்றே அவளுக்கு புரியவில்லை.
எனினும் அவனோடு இருப்பது அவளுக்கு ஒரு வித நிம்மதியும் மகிழ்ச்சியும் தந்தது.அவ்வப்போது அவனை ரகசியமாக ரசித்துக் கொண்டாள்.தன் கல்லூரி வந்ததால் மனம் இல்லாமல் அவனிடம் இருந்து விடைபெற்று கொண்டாள்.

திருடிவிட்டாய் என்னைWhere stories live. Discover now