ஆர்த்தி மெதுவாக கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றாள்.ஆனந்த் அங்கு மேசை மேல் தலை வைத்து படுத்து இருந்தான்."ஆனந்த்",என்ற சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.ஆர்த்தியை பார்த்தவுடன் பல உணர்ச்சிகள் அவனை தாக்கியது.அவளை தெரு தெருவாக தேடியும் அவள் கிடைக்கவில்லை.இனி அவளை பார்க்கவே முடியாது என்ற ஏக்கம் ஒரு புறம் இருக்க அவளுக்கு என்ன ஆனதோ.அவள் பாதுகாப்பாக இருப்பாளா என்ற படபடப்பு மறு புறம் அவனை பயமுறுத்தியது.
அவளை தேடிய களைப்பில் விட்டுக்கு வந்தான்.வீட்டின் ஒவ்வொறு மூலையும் அவனுக்கு அவளை நினைவு படுத்தியது.வேதனையாக மேசை மேல் படுத்து அழ தொடங்கினான்.ஆனந்தின் முகம் சோர்வாக இருப்பதை ஆர்த்தி உணர்ந்தாள்.அவளை பார்த்த சந்தோசத்தில் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.சட்டென்று அவன் தன் கண்களை துடைத்தான்."எங்கே போயிட்டீங்க சொல்லாம",என்றான் ஆனந்த்.ஆர்த்தி மௌனமாக தலை குனிந்தாள்.
"உங்ககிட்ட அப்படி பேசினது தப்பு தான்.மன்னிச்சுக்கோங்க
எந்த ஒரு பெண்ணும் திருடனோடு தங்க விருப்பப்பட மாட்டா.இன்னிக்கு மட்டும் பொறுத்துக்கோங்க.நாளைகே உங்கள ஒரு மகளீர் விடுதில சேர்த்தறேன்.பாட்டி வர வரைக்கும் நீங்க அங்கேயே தங்கிக்கலாம்.",என்றான்.
அவள் அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்."இல்லை நான் இங்கேயே இருக்கேன்.எனக்கு ஒன்னும் பிரச்சணை இல்லை",என்று கூறி உள்ளே சென்றாள்.ஆனந்தின் முகம் சிரிப்பில் மலர்ந்தது.ஆனந்தத்தில் அவன் மனம் துள்ளி குதித்தது.
அர்ஜுனும் ஐஷ்வர்யாவும் அந்த முகவரியை நோக்கி சென்றனர்.
"என்ன அர்ஜுன் இந்த சாலை வெரிச்சோடி இருக்கிறது.ஒரு வீடு கூட இல்லை",என்றாள் ஐஷ்வர்யா.
"எனக்கும் ஒன்னும் புரியலை.போயி பார்த்தா தான் தெரியும்",என்றான் அர்ஜுன்.வண்டி ஒரு பாழடைந்த வீட்டின் முன் நின்றது.சாலையில் இருந்து அந்த வீடு 1 கி.மி. தூரம் இருந்தது.அதை தான்டி செல்வதர்க்கு வழி எதுவும் இல்லை.

YOU ARE READING
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...