ஆனந்த் அதிர்ச்சியில் சிலையாய் நின்றான்."யாரு டா இந்த பொன்னு.இங்க எப்படி வந்துச்சு",என்றான் குழப்பமாக.
"மொதல்ல இந்த பொன்ன தூக்கிட்டு உள்ளே போகலாம்.மத்ததல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.",என்றான் ரவி.
அந்த பெண்ணை இரண்டு பேரும் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றனர்.அவளை தரையில் படுக்க வைத்தனர்.
"இப்போ சொல்லு டா.யாரு இந்த பொன்னு",என்றான் ஆனந்த்.
"டேய் நான் திருட போன இடம் பெரிய இடம் டா.எனக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு கடைசியா இந்த பொன்னு அறைக்குள் வந்தேன்.இந்த பொன்னு கைல போட்டிர்கே என்ன மோதிரம் நு நெனச்ச.வைரம் டா.பல லட்சம் தேரும்.அவ கைல இருந்து எடுக்க பார்த்தேன் ஆனா அவ முழுச்சுகிட்டா.இந்த மோதிரத்தை விட எனக்கு மனசு இல்லை.அதனால மயக்க மருந்து கொடுத்து தூக்கீட்டு வந்துட்டேன்",என்றான் மகிழ்ச்சியாக.
"என்ன டா பேசர நீ.அதுக்காக இந்த பொன்ன கடத்தீட்டு வருவியா.உனகெல்லாம் அறிவு இருக்கா இல்லையா.ஏதோ சின்ன திருட்டு பன்னிகிட்டு இருக்கோம்.நீ பெரிய வம்புல மாட்டி விட்டுருவ போல இருக்கே",என்றான் ஆனந்த் கோவமாக.
ரவி அதை கண்டு கொள்ளாமல் அவள் கையில் இருக்கும் மோதிரத்தை அவிழ்க்க முயற்சி செய்து கொண்டு இருந்தான்.
ஆனந்த் கோவமாக அவன் அருகில் சென்றான்.
அப்போது தான் ஆர்த்தியின் முகத்தை ஆனந்த் பார்த்தான்.ஒரு நிமிடம் அவள் அழகில் சொக்கி போனான்.அவளை பார்த்தவுடன் அவன் நெஞ்சில் ஒரு இனம் புரியாத உணர்ச்சி ஏற்பட்டது.அது பாசமா காதலா பரிதாபமா இல்லை குற்ற உணர்ச்சியா என்று அவனுக்கு புரியவில்லை.
இப்போது ரவி அந்த மோதிரத்தை கழற்றிவிட்டான்."மாப்புள வா டா போகலாம் வந்த வேலை முடிந்தது",என்றான் ரவி
"டேய் இந்த பொன்ன என்ன டா பன்னரது",என்றான் ஆனந்த்.
"மயக்கம் தெளிஜா அவளே வீட்டுக்கு போயிடுவா டா.கொஞ்சம் தூரம் போனால் ரோடு வந்துரும்.அப்புறம் என்ன இவளோ பெரிய பொன்னுக்கு வீட்டுக்கு போக தெரியாதா.வா டா போகலாம்",என்றான் இயல்பாக.
YOU ARE READING
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...