13.

3.6K 173 7
                                    

ஐஷ்வர்யா லாவன்யாவை தேடிக் கொண்டு அவள் அறைக்கு சென்றாள்.லாவன்யா தன் அறையில் ஒரு மேசை மேல் தலையை வைத்து படுத்துக் கொண்டு இருந்தாள்.கையில் அவள் அக்காவுக்கு பரிசாக குடுக்க நினைத்த புகைப்படம் இருந்தது.
"லாவன்யா",என்று மெதுவாக அழைத்தாள் ஐஷ்வர்யா.
அவள் நிமிர்ந்து பார்த்தாள்.கண்கள் கலங்கி இருந்தது.

"ஏன் இங்கு தனியாக இருக்கிறாய்.கீழே வா",என்றாள் ஐஷ்வர்யா.

"அக்கா திரும்பி வரவே மாட்டாங்களா",என்றாள்.

"வருவாங்க ஏன் இப்படி கேட்குர",என்றாள் ஐஷ்வர்யா அதிர்ச்சியாக.

"அப்படி தான் எல்லாரும் பேசிக்குறாங்க.",என்றாள் லாவன்யா வருத்தமாக.

"இல்லை லாவன்யா.அக்காவை நம்ம தேடிகிட்டு தான இருக்கோம்.கண்டிப்பா கண்டுபுடிசுரலாம்.நீ கவலை படம இரு.இன்னும் கொஞ்ச நாளில் நம்ம எல்லாரும் பழைய படி சந்தோசமா இருக்க தான் போறோம்.",என்றாள் உறுதியாக.
லாவன்யா முழுமையாக திருப்தி அடையவில்லை என்றாலும் சரி என்பதை போல தலையை ஆட்டினாள்.

        ஆனந்த் தன் வீட்டில் மதிய உணவை சமைத்துக் கொண்டு இருந்தான்.அப்போது முத்து அவசரமாக உள்ளே நுழைந்தான்.

"என்ன அண்ணே இந்த நேரத்துல வந்து இருக்க.வேலைக்கு போகலையா",என்றான் ஆனந்த்.

"இல்ல டா.அம்மா போன் பன்னுச்சு.பொன்னு வீட்டுகாரங்க என்னை நேரா பாக்கனும் நு சொன்னாங்கலாம்.இப்போ போனா நானும் பொன்ன ஒரு வாட்டி பாத்துகலாமா.அப்படியே கல்யாணத்துக்கு தேவையான ஜவுளி எல்லாம் எடுத்தரலாம்நு சொல்லுச்சு.அதான் கிளம்பீட்டேன்.
டேய் இரண்டு மூணு நாளைக்கு நான் இருக்க மாட்டேன்.எந்த பிரச்சணைக்கும் போகாம ஒழுங்க இருக்கனும்.என்ன சொல்லுரேனு புரியுதுல",என்றான் முத்து.

"இல்ல அண்ணே போக மாட்டேன்.இந்தா அண்ணே இந்த பணத்த செலவுக்கு வச்சுக்கோ",என்று கூறி பண கட்டை நீட்டினான்.

"இந்த பாவ பணம் எனக்கு வேண்டாம்.உழைச்சு சம்பாரிச்சு குடு எவ்வளவு வேணும்னாலும் வாங்கிக்குரேன்.",என்று கூறி உள்ளே சென்றான்.ஆனந்த் வருத்தமாக மீண்டும் சமையல் அறைக்குள் சென்றான்.

திருடிவிட்டாய் என்னைWhere stories live. Discover now