ஐஷ்வர்யாவும் ஆர்ஜுனும் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.ஐஷ்வர்யா உள்ளே சென்றாள்.அர்ஜுன் காரை நிறுத்த சென்றான்.ரிசெப்ஷனில் இருந்த பெண்ணிடம் ஐஷ்வர்யா விசாரித்துக் கொண்டு இருந்தாள்.
"இங்கே இரண்டு வாரத்துக்கு முன் 25 வயதிற்குள் இருக்கும் பெண் யாராவது அட்மிட் ஆனாங்களா.",என்றாள்.அவள் ரெஜிஸ்டரை பார்த்து சொல்லுகிறேன் என்று கூறி தேடிக் கொண்டு இருந்தாள்.அர்ஜுன் உள்ளே வந்தான்.
"போன வாரம் பத்து பேரு அட்மிட் ஆகியிருக்காங்க.எல்லாமே இருபதில் இருந்து இருபத்தி ஐந்து வயது பெண்கள் தான்.",என்றாள்.
"அதுல ஆர்த்தி நு யாராவது அட்மிட் ஆகி இருக்காங்களா",என்றான் அர்ஜுன்.
"அப்படி யாரும் இல்லை சார்",என்றாள்.அர்ஜுன் முகம் வாடி போனது.இருவரும் வருத்தமாக வாசலை நோக்கி நடந்தார்கள்.
"அர்ஜுன் விபத்து அப்போ அக்கா சுய நினைவோட இருந்தா தானே அவள் பெயர் ஆர்த்தி என்று சொல்லி இருப்பாள்.",என்றாள்.
"என்ன சொல்ல வர",என்றான் அர்ஜுன்.
"அவள் மயக்க நிலையில் இருக்கும் போது யாரோ ஒருவர் எப்படி அவள் பெயர் குடுத்து அட்மிட் செய்து இருக்க முடியும்.ஒன்று வேற பெயரில் அட்மிட் செய்து இருக்கலாம்.இல்லை பெயர் தெரியவில்லை என்று சொல்லி இருக்கலாம்",என்றாள் தெளிவாக.
"ரொம்ப சரி.ஆர்த்தியோட புகைப்படம் உன்னிடம் இருக்கா",என்றான்.
"இந்த அவசரத்தில் இப்போ அக்கா முகத்தை பார்க்கனுமா",என்றாள் ஐஷ்வர்யா.
"யேய் விளையாட இது நேரம் இல்லை.இருக்கா இல்லையா",என்றான் அர்ஜுன்.
"என் கைபேசியில் இருக்கு",என்றாள்."சரி வா",என்று கூறி திரும்பவும் அந்த பெண்ணிடம் சென்றார்கள்.
ஆர்த்தியின் புகைப்படத்தை காட்டி
"இந்த பெண் இங்கே அட்மிட் ஆகி இருக்காளா",என்று கேட்டான் அர்ஜுன்.அவள் இல்லை என்று கூறவே இருவரும் சோகம் அடைந்தார்கள்.அப்போது ஒரு நர்ஸ் அங்கே வந்தாள்."சார் பெரிய டாக்டர் வர நேரம் இது.இங்கே யாரும் நிற்க கூடாது.அங்கே சென்று உக்காருங்க"என்றாள் அந்த நர்ஸ்.
"நாங்க டாக்டர பார்க்க வரல.ஒரு பொன்னை தேடி வந்து இருக்கோம்",என்றான் அர்ஜுன்.
"அப்படியா யாரு நு சொல்லுங்க.தெரிஞ்சா சொல்லுறேன் ",என்றாள்.அர்ஜுன் ஆர்த்தியின் புகைப்படத்தை காட்டினான்.நர்ஸின் முகம் ஆச்சர்யத்தில் விரிந்தன.
"இந்த பொன்னா",என்றாள் நர்ஸ்.
"உங்களுக்கு இந்த பொன்ன தெரியுமா",என்றாள் ஐஷ்வர்யா.
"இந்த பொன்னு தலையில் அடிபட்ட நிலையில் இங்கே வந்துச்சு.நான் தான் முதல் உதவி பன்னினேன்.ஒரு வாரம் இங்கே தான் மயக்க நிலையில் இந்துச்சு.சுய நினைவு திரும்பினப்போ தண்ணிர் கேட்டுச்சு.கொண்டு வரதுக்குள்ள ஆளை கானோம்.எங்கே போச்சுனு தெரியலை",என்றாள் நர்ஸ்.
"அவங்களுக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லைல சிஸ்டர்",என்றாள் ஐஷ்வர்யா.
"இல்லை பெருசா எதுவும் இல்லை.",என்றாள் நர்ஸ்.
"அவங்கள யார் வந்து அட்மிட் பன்னினாங்க நு தெரியுமா",என்றான் அர்ஜுன்.
அவள் ரெஜிஸ்டரை மீண்டும் புரட்டிவிட்டு"அந்த பொன்னு ஆம்புலன்ஸ் மூலமா இங்கே வந்திற்கு.ஆம்புலன்ஸுக்கு யாரு தகவல் குடுத்தார்கள் என்று தெரியவில்லை.",என்றாள்.
"அந்த ஆம்புலன்ஸ் எந்த முகவரியில் இருந்து அந்த பொன்னை கூட்டீட்டு வந்தாங்க நு சொல்ல முடியுமா",என்றான் ஆர்ஜுன்.நர்ஸ் யோசித்தாள்.
"பிலீஸ் சிஸ்டெர்.இந்த பொன்னை காணாமல் வீட்டில் எல்லோரும் தவிச்சு போயி இருக்காங்க.உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் உதவி பன்னுங்க.உங்களுக்கு புண்ணியமா
போகும்",என்று கெஞ்சினான் அர்ஜுன் ."இந்த தகவல் எல்லாம் நாங்கள் யாருக்கும் தர கூடாது.உங்களை பார்த்தாளும் பாவமா தான் இருக்கு.சரி முகவரியை எழுதி தரேன்",என்று கூறி எழுதி தந்தாள்.இருவரும் அவளுக்கு நன்றியை கூறிவிட்டு வெளியே வந்தார்கள்.
"அடுத்து என்ன அர்ஜுன்",என்றாள் ஐஷ்வர்யா."அந்த முகவரிக்கு போயி பார்க்கனும்.ஆர்த்தி அங்கே இருக்க கூட வாய்ப்பு இருக்கு",என்றான் அர்ஜுன்.இருவரும் உடனே அங்கு கிளம்பினார்கள்.
YOU ARE READING
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...