மறுநாள் காலையில் முத்து வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தான்.
ஆனந்த் ஒரு ஓரமாக உக்கார்ந்து செய்திதாள் படித்துக் கொண்டு இருந்தான்.
"என்ன டா.நீயா சொல்லுவனு பார்த்தேன்.ஆனா இப்போ வரைக்கும் எதுவுமே நடக்காத மாதிரி இருக்க",என்றான் முத்து ஆனந்தை பார்த்து.
ஆனந்த் அவனை குழப்பமாக பார்த்தான்.
"என்ன டா முழிக்குர.யாரு டா அந்த பொன்னு.நேற்று பாட்டி வீட்ல தங்க வச்சியாம் குப்பத்துல பேசிகிட்டாங்க ",என்றான் முத்து.ஆனந்த் அவனை சங்கடமாக பார்த்தான்.அவனிடம் எல்லா உண்மையையும் சொல்ல வேண்டும் என்று அவன் மனம் ஏங்கியது ஆனால் அவன் ரவியை வெறுத்ததை போல தன்னையும் வெறுத்து விடுவானோ என்று எண்ணும் போது அவன் மனம் அவனை தடுத்தது.
"அந்த பொன்னு யாரும் இல்லாம தனியா நின்னுச்சு அண்ணே.பார்க்கவே பாவமா இருந்துச்சு.அதான் கூட்டீட்டு வந்தேன்.",என்றான்.
முத்து அவனை கோவமாக முறைத்தான்.
"யாரு நு தெரியாம அடைக்களம் குடுதிர்க.இதல்லாம் நமக்கு தேவையா டா.எதாவது பிரச்சணை என்றால் நீ தான் டா பொறுப்பு ஏற்கனும்",என்றான்.
"இதல்லாம் ஒரு உதவி தான அண்ணே.மற்றவர்களுக்கு நம்ம உதவி செய்தால் நமக்கு ஒருத்தர் உதவி செய்ய மாட்டாங்களா",என்றான் ஆனந்த்.
"ஏதோ பன்னு .நான் சொன்னா கேட்கவா போற",என்று புலம்பிக் கொண்டே வெளியில் சென்றான் முத்து.
ரவி அந்த வைர மோதிரத்தை எடுத்துக் கொண்டு தான் எப்போதும் செல்லும் சேட்டு கடைக்கு சென்றான்.
"என்ன சேட் ஜீ எப்படி இருக்க",என்றான்.
"வா பா.நான் நல்லா தான் இருக்கேன்.என்ன நீயும் ஆனந்தும் இந்த பக்கமே ஒரு வாரமா கானம்",என்றார்.
"சரியான நேரம் பார்த்து தானே வர முடியும் சேட்டு.இந்த வாட்டி கொஞ்சம் பெரிய சரக்கு",என்று கூறி வைர மொதிரத்தை எடுத்து காட்டினான்.சேட்டின் கண்கள் விரிந்தன.
அதே சமயம் அங்கு ஆனந்த் வந்தான்.
CZYTASZ
திருடிவிட்டாய் என்னை
Romansதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...
