3.

5.2K 168 4
                                    

அதிகாலை 3.30 மணி

ஆர்த்தி திடீர் என்று தூக்கத்திலிருந்து திடுகிட்டு விழித்தாள்.தன் விரலை யாரோ தொடுவதை போல உணர்ந்தாள்.எழுந்து உக்காந்து கொண்டு ஒரு முறை அவள் அறையை சுற்றி பார்த்தாள்.இருட்டாக இருந்ததால் எதுவும் கண்ணில் தென்படவில்லை.திடிர் என்று அவள் பின்னால் ஒரு அசைவு தெரிந்தது.

அது என்னவென்று அவள் திரும்பி பார்ப்பதர்க்குள் யாரோ அவள் வாயை மூடினார்கள்.

ரவி ஒரு ஓரமாக காரோடு காத்துக் கொண்டு இருந்தான்.ஆனந்த் ஓடி வந்து காரில் ஏறினான்.ரவி உடனே காரை கிளப்பினான்.

"டேய் யாரும் பாக்கலைல ",என்றான் ரவி காரை ஓட்டிக் கொண்டே.

"இல்ல டா.ஆனா இன்னிக்கு எதுவும் பெருசா மாட்டல",என்றான் ஆனந்த்.

ரவி சிரித்தான்.

"என்ன டா சிரிக்குர",என்றான் ஆனந்த்.

"ஒன்றும் இல்லை.நீ குழந்தை டா.நீ எல்லாம் எப்படி திருடன் ஆனேனு எனக்கு ஆச்சர்யமா இருக்கு",என்றான்.

ஆனந்த் எதுவும் பேசாமல் வெளியில் பார்த்துக் கொண்டே தாம் முதன் முதலில் எப்படி திருடன் ஆனான் என்று நினைத்துப் பார்த்தான்.

ஆனந்துடைய அப்பா ஒரு குடிகாரன்.வீட்டுக்கு தேவையான எதையும் செய்ய மாட்டார்.ஒரு முறை ஆனந்துடைய அம்மாவுக்கு மிகவும் உடம்பு சரியில்லை.அவருக்கு மருந்து

வாங்க வைத்து இருந்த காசை அவன் அப்பா எடுத்து சென்று விட்டார்.வேறு வழி இல்லாமல் அவன் திருட நேர்ந்தது.அதில் இருந்து வீட்டில் பணம் இல்லாத போது எல்லாம் திருட ஆரம்பித்தான்.படி படியாக மற்றவர்களின் நலனுக்காக திருட ஆரம்பித்து இப்போது முழு நேர திருடனாக மாறிவிட்டான்.அவன் குப்பத்தில் இருக்கும் ஒரு சிலருக்கே இவனை பற்றிய உண்மை தெரியும்.

ஒரு பாழடைந்த வீட்டுக்கு முன் கார் நின்றது.வழக்கமாக திருடியவுடன் இங்கே வந்து திருடிய பொருள்களை பதுக்கி விட்டு மறுநாள் பிரச்சணை எதுவும் இல்லை என்று உறுதி செய்த பிறகே அதை எடுத்து சென்று விற்று காசு ஆக்குவார்கள்.

அதே போல் இன்றும் அங்கு வந்தார்கள்.

ஆனந்த் பழய எண் பலகையை மற்றி விட்டு.புதிதாக ஒன்றை மாட்டினான்.ரவி காரின் டிக்கியை திறந்து திருடிய பொருக‌ளை எல்லாம் எடுத்துக் கொண்டு இருந்தான்.அவன் எதையோ இழுக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான்.

ஆன்ந்த்",என்னடா இழுக்கவே கஷ்ட்ட படுர.இன்னிக்கு பெரிய வேட்டை தான் போல இருக்கு",என்று கூறிக் கொண்டே அவன் அருகில் சென்றான்.

அதிர்ச்சியில் உறைந்து போனான்.அங்கு மயக்க நிலையில் ஒரு பெண் கூனி குருகி படுக்க வைத்து இருந்தாள்.அவள் இடது கை விரலில் ஒரு மோதிரம் ஜொளித்துக் கொண்டு இருந்தது.

திருடிவிட்டாய் என்னைWhere stories live. Discover now