30.

3.3K 131 1
                                    

        ரவி சுருளியை பார்த்தான்."என்ன அண்ணே உன் திட்டம்",என்றான்.

"அந்த பொன்னு யாரு டா",என்றான் சுருளி.

"அவ மோதிரதுக்கு ஆசைபட்டு தான் நான் இந்த நிலைமையில் இருக்கேன்",என்றான் ரவி.

"அது இல்ல டா.அவ ஆனந்துக்கு யாரு",என்றான்.

"புரிலையே அண்ணே",என்றான் ரவி."அவளை எதாவது பன்னினா ஆனந்துக்கு வலிக்குமா",என்றான் சுருளி.

"ஓ நீ அப்படி வரியா அண்ணே.அவனுக்கும் அவளுக்கும் என்ன பழக்கம் நு எனக்கு தெரியலையே அண்ணே",என்றான்.

"கண்டுபுடிக்குறேன் டா",என்றான் சுருளி.

மதியம் சாப்பிடும் போது ஆனந்தை பார்த்தான் சுருளி.
"என்ன ஆனந்த் ரொம்ப சந்தோசமா இருக்க போல",என்றான் சுருளி.

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அண்ணே",என்றான் ஆனந்த்.

"சரி காலைல உன்ன பார்க்க ஒரு பொன்னு வந்ததே அது யாரு டா",என்றான் சுருளி.

"தெரிஞ்ச பொன்னு அண்ணே",என்று சொல்லும் போதெ வெட்கப்பட்டான் ஆனந்த்.

"தெரிஞ்ச பொன்னா இல்ல புடிச்ச பொன்னா",என்று கேட்டன் சுருளி.

ஆனந்த் வெட்க பட்டான்."சரி போயி சாப்பிடு",என்றான் சுருளி.ஆனந்த் ஒரு வித நிம்மதியுடன் சாப்பிட சென்றான்.

ரவி வந்து சுருளி அருகில் நின்றான்."என்ன அண்ணே சொல்லுரான் என் நண்பன்",என்றான் ரவி.

"அந்த பொன்னு எனக்கு, ஆனந்த் உனக்கு",என்று கூறி சிரித்தான் சுருளி.

"அண்ணே நாளைக்கு நானும் அர்ஜுனும் போலீஸ் ஸ்டேஷன் போயி கேஸ்ஸை வாபஸ் வாங்கிறோம்",என்றாள் ஆர்த்தி முத்துவிடம்.

"அவசர படாதே ஆர்த்தி உன் அப்பாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம்",என்றான் அர்ஜுன்.

"அப்பாகிட்ட நான் பேசிக்குறேன் அர்ஜுன்.ஆனந்த் நல்லவன்.அவனுக்கு உதவி செய்ய வேண்டும்",என்றாள் ஆர்த்தி.

"ஆர்த்தி இப்போ தான் பல பிரச்சணையில் இருந்து வெளியே வந்து இருக்க.எதுக்கு இப்போ இந்த உதவி எல்லாம் தேவை இல்லாம",என்றான் அர்ஜுன்.

ஆர்த்தி மெலிதாக சிரித்தாள்."இது என் கடமை",என்றாள்.அர்ஜுன் அதன் பின் எதுவும் பேசவில்லை.அர்ஜுன் ஆர்த்தியை வீட்டில் விட்டு விட்டு நாளை சந்திப்பதாக கூறிவிட்டு சென்றான்.

       மறுநாள் காலையில்  ரவி கோவமாக அமர்ந்து கொண்டு இருந்தான்."என்ன டா ஆச்சு உனக்கு.ஏன் இப்படி இருக்க",என்றான் சுருளி.

"அண்ணே அன்னிக்கு வந்தாளே அவ ஆனந்த வெளியே எதுக்க போராலாம்.கேள்விபட்டேன்",என்றான்.

"டேய் இது பழைய தகவல்.அவன் நாளை வெளியே போரான்.இது எனக்கு இப்போ வந்த தகவல்.அந்த பொன்னு இன்னிக்கு வாபஸ் வாங்க போகுது."என்றான் சுருளி.

"அண்ணே அவனை ஒன்னுமே பன்ன முடியாதா.அவனை கொல்லனும் அண்ணே",என்றான் ரவி.

"பதறாத டா.நாளைக்கு அவன் ரிலீஸ் ஆயிடுவான்.நானும் நாளைக்கு ரிலீஸ் ஆகுரேன்.நீ நாளைக்கு சாயங்காலம் உன் கையை அறுத்துகிட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்துரு.போலீஸ் அசந்த நேரம் பார்த்து நீ தப்பிச்சு என் இடத்துக்கு
வந்துரு.மத்ததல்லாம் நான்
பார்த்துகுறேன்.",என்றான்.

ரவி வியப்பாய் அவனை பார்த்தான்.பின் மெதுவாக தலையை அசைத்தான்.

Note:Hai readers.Just one more chapter n you will know the climax.I have written many stories but this one has many chapters coz there r many characters to include.Pls give me your comments n votes.Thank you.

திருடிவிட்டாய் என்னைWhere stories live. Discover now