32.

3.7K 132 3
                                    

வேன் ஒரு இடத்தில் சட்டென்று நின்றது.ரவியும் அவனது ஆட்களும் ஆனந்தையும் முத்துவையும் அடித்து இழுத்து சென்றனர்.அது ஒரு உபயோகபடுத்தாமல் இருக்கும் மில்லை போல் தெரிந்தது.மிகவும் தூசியாக இருந்தது.10 நிமிட நடைக்கு அப்புறம் ஒரு பெரிய இடத்தை அடைந்தனர்.அங்கு ஒரு சில பயன்படுத்தாத இயந்திரங்களை தவிற வேறு எதுவும் இல்லை.ரவி சுருளிக்கு போன் செய்தான்.

"அண்ணே நான் வந்துட்டேன் நீ எங்கே இருக்க",என்றான்.

"நானும் அங்கே தான் டா இருக்கேன் ",என்று கூறி பக்கத்தில் இருந்த அறையில் இருந்து வெளிப்பட்டான் சுருளி.

"என்ன அண்ணே தனியா வர.அவ எங்கே",என்றான் ரவி.சுருளி அவன் பின்னால் இருந்த ஒருவனிடம் கை அசைத்தான்.அவன் உள்ளே இருந்து ஆர்த்தியை இழுத்து வந்தான்.ஆனந்தும் முத்துவும் அதிர்ச்சி அடைந்தனர்.

"யாரு டா நீங்க எல்லாம்.எதுக்கு டா எங்களை இங்கே கொண்டு வந்திர்க்கீங்க",என்று கத்தினாள் ஆர்த்தி.அவளை ஓங்கி அறைந்தான் சுருளி.

"தேவை இல்லாம கத்த கூடாது.எனக்கு பிடிக்காது",என்றான் சுருளி.ஆர்த்தி கண்களில் நீர் வழிந்தது.ஆனந்த் தனது கட்டை அவுக்க முயற்சி செய்தான்.

"டேய் உன் நண்பன் ஏதோ சொல்ல வரான்.வாயில் இருக்கும் கட்டை அவுத்து விடு",என்றான் சுருளி.

"பொம்பளைய அடிக்கரியே நீ ஆம்பளையா",என்று கத்தினான் ஆனந்த்.
ரவி அவனை அறைந்தான்.

"டேய் ஆம்பளையா இருந்தா எங்க கட்டை அவுத்துட்டு அப்புறம் அடிங்கடா",என்றான் ஆனந்த்.சுருளி சிரித்தான்.

"கட்டை அவுத்தா மட்டும் என்ன கிழிச்சுருவ.நாங்க எத்தனை பேர் இருக்கோம் நு பார்த்தாயா.இது என்ன சினிமாவா எங்களை அடித்துவிட்டு நீ இவளை காப்பாற்ற" ,என்றான் சுருளி.

"என்ன டா வேணும் உங்களுக்கு",என்று கத்தினான் ஆனந்த்.

"இப்போ கேட்டியே இது நல்ல கேள்வி.ரவிக்கு உன் உயிர் வேணும்.எனக்கு இவ அழகு வேணும்",என்று கூறி ஆர்த்தியின் கன்னத்தை தீண்டினான் சுருளி.
ஆர்த்தி அறுவருப்பாக முகத்தை திருப்பினாள்.

திருடிவிட்டாய் என்னைWhere stories live. Discover now