ரவி தான் திருடிய பொருள்களை ஒரு வாரத்துக்கு மேல் வைத்துக் கொள்வதே இல்லை.இப்போது அந்த வைர மோதிரத்தை விற்க முடியாமல் மிகவும் கோவமாக இருந்தான்.ஒரு பெரிய கடையை தேர்ந்து எடுத்து தன் மொதிரத்தை விற்க முதிவு செய்தான்.
"வணக்கம் சார்,உங்களுக்கு எந்த மாதிரி நகை வேண்டும்",என்றாள் கடையில் வேலை பார்க்கும் பெண்.
"எனக்கு என் மோதிரத்தை விற்க வேண்டும்.",என்றான் ரவி.
"ஓ சரிங்க சார்.நீங்க அங்க வெயிட் பன்னுங்க",என்றாள் கனிவாக.
ரவி அமைதியாக காத்து இருந்தான்.ஒருவர் அவன் முன் வந்தார்."சொல்லுங்க சார்",என்றார்.
"இதை விற்கனும் ",என்றான்.அவர் அந்த மோதிரத்தை வாங்கி பார்த்தார்.
"இதை எந்த கடையில் வாங்கனீங்க சார்",என்றார் மோதிரத்தை பார்த்துக் கொண்டே.
"வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கடையில்",என்று தடுமாறினான் ரவி.
அவர் அவனை ஒரு மாதிரி பார்த்தார்."கடை பெயர் என்ன சார்",என்றார்".ரவி ஒரு நொடி யோசித்துவிட்டு.
"சாந்தி ஜுவெல்லரி",என்றான்.
"எத்தனை ரூவாயிக்கு வாங்கனீங்க சார்",என்றான்.
"இதல்லாம் எதுக்கு கேட்கரீங்க.உங்களால இதை வாங்கி கிட்டு பணம் தர முடியுமா முடியாதா.இல்லை என்றால் நான் வேறு இடம் பார்த்து கொள்கிறேன்.",என்றான் எரிச்சலாக.
அவர் அதிர்ச்சி அடைந்தார்."சாரி சார்.இருங்க கொஞ்ச நேரத்தில் வரேன்",என்று கூறி அவர் உள்ளே சென்றார்.அவர் தன் முதலாளியிடம் ஏதோ சொன்னார்.முதலாளி போனை எடுத்து போலீஸை அழைத்தார்.
ரவி காத்துக் கொண்டு இருந்தான்.அவன் தோளில் யாரோ கையை வைத்தார்கள்.திரும்பி பார்த்து திடுகிட்டான்.போலீஸ் இன்ஸ்பெக்டர் நின்று கொண்டு இருந்தார்."வாங்க மிஸ்டர் போகலாம்",என்றார்.
"என்ன சார்.நான் எதுக்கு வரனும்.நான் என் மோதிரத்தை விற்க வந்தேன்",என்றான் ரவி.
"யாரு உண்மையா விற்க வருவா.யாரு திருடன பொருளை விற்க வருவா நு எங்களுக்கு தெரியும் டா.ஒழுங்கா வந்தனா உனக்கு நல்லது.இல்லை அடிச்சு இழுத்துட்டு போவேன்.எப்படி வசதி",என்றார்.
ரவி வேறு வழி இல்லாமல் அவருடன் அமைதியாக சென்றான்."இதுவரை இப்படி ஆனதே இல்லை.எல்லாம் உன்னால் தான் டா.உன்னை சும்மா விட மாட்டேன் டா ஆனந்த்",என்று மனதில் வெறியோடு நினைத்துக் கொண்டான் ரவி.
YOU ARE READING
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...