மறுநாள் காலையில் ஆர்த்தி அர்ஜுனுடன் சென்று கொடுத்த கேஸ்ஸை வாப்பஸ் வாங்கினாள்.
"நீங்களே கம்பளைட் கொடுத்தீங்க.இப்போ நீங்களே வாபஸ் வாங்கரீங்க",என்றார் கமல் வெறுப்பாக.
"அவர் திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்தேன் சார்.இனி தவறு செய்ய மாட்டார் என்று நம்புகிறேன்",என்றாள்.கமல் அவளை குழப்பமாக பார்த்துவிட்டு.
"சரி இதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கனும்.அந்த வேலை எல்லாம் முடிந்த பிறகு தான் ஆனந்த் வெளியே வருவான்.அதுக்கு மதியம் ஆகும்",என்றார் கமல்.
"சரி சார் நாங்க போயிட்டு மதியம் வருகிறோம்",என்றாள் ஆர்த்தி.
முத்து தாம் வீட்டுக்கு போய்விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றான்.
ஆர்த்தியும் அர்ஜுனும் வெளியே வந்து காரில் ஏறினார்கள்.அர்ஜுன் ஆர்த்தியை ஒரு முறை பார்த்தான்.
"இது தேவை இல்லாத வேலை ஆர்த்தி.இதனால் உனக்கு வேறு ஏதாவது பிரச்சணை வந்து விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கு",என்றான் அர்ஜுன். ஆர்த்தி அவனை பார்த்து சிரித்தாள்.அர்ஜுன் பெரு மூச்சு விட்டான்.
"அர்ஜுன் உனக்கு பார்த்த பொன்னு யாருன்னு இன்னும் நீ என்கிட்ட சொல்லவே
இல்லை ",என்று செல்லமாக கோவப்பட்டாள் ஆர்த்தி.அர்ஜுன் சட்டென்று காரை நிறுத்தினான்.ஆர்த்தி அவனை குழப்பமாக பார்த்தாள்.
"அது வந்து........",என்று தயங்கினான் அர்ஜுன்.
"சொல்ல விருப்பம் இல்லை என்றால் சொல்ல வேண்டாம்",என்றாள் ஆர்த்தி.
"நான் காதலிப்பது உன் தங்கை ஐஷ்வர்யாவை",என்று கூறி அவள் முகத்தை பார்த்தான்.ஆர்த்தி முதலில் அதிர்ச்சி அடைந்து பின் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றாள்.அர்ஜுன் கையை பிடித்து கண் கலங்கினாள்.
"என்னால் என் தங்கைகளின் வாழ்க்கை பாதிக்குமோ என்று பயந்து கொண்டு இருந்தேன்.இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு.உன்னை விட ஒரு நல்ல பையன் என் தங்கைக்கு கிடைக்க மாட்டான்",என்று கூறினாள்.அர்ஜுனுக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.
திடீர் என்று ஒரு கும்பல் இவர்களின் கார் முன்னே வழி மறைத்து நின்றது.
"யார் நீங்கல்லாம்.எதுக்கு இப்படி நிக்குரீங்க",என்றான் அர்ஜுன்.கும்பலில் ஒருவன் கார் கதவை திறந்து ஆர்த்தியை வெளியே இழுத்தான்.ஆர்த்தி அவன் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றாள் ஆனால் முடியவில்லை.தடுக்க வந்த அர்ஜுனை அவன் ஒரு கட்டையால் அடித்து காயப்படுத்தினான்.அர்ஜுன் தலையில் இருந்து இரத்தம் வழிந்தது.அவன் தலையை பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான்.
அந்த கும்பல் ஆர்த்தியை ஒரு காரில் வலுகட்டாயமாக ஏற்றி வேகமாக சென்றது.அர்ஜுனுடைய தலையில் இருந்து இரத்தம் அதிகமாக வழிந்ததால் அவன் மயக்கம் ஆனான்.
ஆனந்த் சிறையில் இருந்து வெளியே வந்தான்.முத்து அவனுக்காக காத்துக் கொண்டு இருந்தான்.ஆனந்தை முத்து கட்டி தழுவினான்.ஆனந்தின் கண்கள் யாரையோ தேடியது.
"அண்ணே ஆர்த்தி வரலையா",என்றான் ஆனந்த் ஏக்கமாக.
"வரேன் நு தான் டா சொல்லீட்டு போச்சு.என்னானு தெரியலை .இன்னும் வரலை.சரி வா நம்ம வீட்டுக்கு போகலாம்",என்றான் முத்து.
இருவரும் ஒரு பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு வந்தார்கள்.ஆனந்த் வந்து பாயில் மெதுவாக அமர்ந்தான்.முத்து அவனுக்கு தண்ணீர் கொண்டு வர உள்ளே சென்றான்.திடீர் என்று வாசலில் ஒரு குரல் கேட்டு ஆனந்த் நிமிர்ந்தான்.
"என்ன நண்பா.ரொம்ப சந்தோசமா இருக்க போல",என்றான் ரவி.அவன் கையில் கட்டு போடப்பட்டு இருந்தது.
"டேய் நீ எப்படி டா இங்கே.தப்பிச்சு வந்துட்டயா",என்றான் ஆனந்த்.சத்தம் கேட்டு வெளியே வந்தான் முத்து.
"நீயா.நீ ஏன் டா இங்க வந்த.உன்னால நாங்க பட்டதல்லாம் போதும்.இரு இப்போதே போலீஸுக்கு போன் பன்னுரேன்",என்றான் முத்து.
ரவி அவன் கையில் இருக்கும் போனை பிடுங்கினான்.
"இன்னும் நீங்க பட வேண்டியது நிறைய இருக்கு அண்ணே",என்று கூறி சிரித்தான்.வெளியில் இருந்து இருவர் உள்ளே வந்து ஆனந்த்,முத்துவின் கைகளையும் வாயையும் கட்டி ஒரு வேனில் ஏற்றினார்கள்.வேன் எங்கேயோ வேகமாக சென்றது.
YOU ARE READING
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...