விஷ்வனாதன் ஊரில் இருந்து திரும்பி வந்தார்.களைப்பாக உள்ளே நுழைந்தார்.எதிரில் ஆர்த்தி நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்."அப்பா",என்று கூறி ஆர்த்தி கண் கலங்கினாள்."எதுக்காக இங்கே வந்தாய்.இருக்கும் கொஞ்ச மானத்தை வங்கவா?",என்று கத்தி விட்டு அவர் அறைக்குள் வேகமாய் சென்றார்.ஆர்த்தி அழுது கொண்டே சோபாவில் சாய்ந்தாள்."அக்கா அழாதே.போயி அப்பா கிட்ட பேசு.நடந்ததை புரிய வை.அவருடைய கோவம் நமக்கு தெரியாதா.",என்றாள் ஐஷ்வர்யா.
ஆர்த்தி அவர் அறைக்குள் மெதுவாக சென்றாள்.அவர் ஜன்னல் வழியாக எதையோ பார்த்துக் கொண்டு இருந்தார்.அவர் தோழை தொட்டு"அப்பா",என்றாள் நடுங்கிய குரலோடு.அவர் திரும்பவில்லை.அவர் தோளை பிடித்து திருப்பினாள்.அவர் கண்களில் இருந்து அருவி போல கண்ணீர் வந்து கொண்டு இருந்ததை பார்த்து ஆர்த்தி திடுகிட்டாள்."அப்பா,என் தப்பு எதுவுமே இல்லை",என்று ஆரம்பித்து நடந்ததை ஒன்று விடாமல் கூறினாள்.
விஷ்வனாதன் அனைத்தையும் கேட்டு விட்டு ஆர்த்தியை கட்டி அனைத்து அழுதார்."நீ தப்பு பன்ன மாட்டாய் என்று எனக்கு தெரியும்.ஆனால் உலகம் உன்னை பற்றி என்ன பேசும்.என் காதில் படும் படியே உன்னை பற்றி",என்று கூறி அழுதார்."அப்பா அழாதீங்க.எல்லாம் சரி ஆயிடும்.இன்னிக்கு என்னை பற்றி பேசுரவங்க நாளைக்கு வேறு ஒருத்தரை பற்றிப் பேச அரம்பிச்சுருவாங்க.அதை பற்றி எல்லாம் கவலை படாதீங்க",என்றாள் ஆர்த்தி.அப்பா இப்போது தெளிவு ஆனார்."சரி வா சாப்பிடலாம்",என்றார்.
இருவரும் ஒரு மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் சாப்பிட சென்றனர்.மறுநாள் காலையில் முத்து தயக்கமாக ஆர்த்தியின் வாசலில் நின்றான்."யார் நீங்க.என்ன வேனும்",என்றாள் லாவன்யா."இது ஆர்த்தி வீடு தானே",என்றான் முத்து."ஆமாங்க அது என் அக்கா தான்.நீங்க",என்றாள் லாவன்யா."என் பெயர் முத்து உங்க அக்காவை பார்க்க வந்து இருக்கேன்",என்றான்."சரி உள்ளே வாங்க.நான் போயி அக்காவை கூட்டீட்டு வரேன்",என்று கூறி உள்ளே சென்றாள் லாவன்யா.
"அக்கா உன்ன பார்க்க யாரோ வந்து இருக்காங்க.",என்றாள் லாவன்யா."யாரு டி",என்றாள் ஆர்த்தி."தெரியலை அக்கா ஏதோ பெயர் சொன்னார்.",என்றாள் லாவன்யா."சரி வா போயி பார்க்கலாம்",என்றாள் ஆர்த்தி.கீழே சென்ற போது முத்துவும் பாட்டியும் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்தாள் ஆர்த்தி."இவன் எதற்க்கு இங்கே வந்தான்",என்று மனதில் நினைத்துக் கொண்டாள் ஆர்த்தி."நீங்க ஏன் இங்கே வந்தீங்க",என்றாள் ஆர்த்தி.
"ஆர்த்தி நல்லா இருக்கியா மா",என்றான் முத்து பாசமாக.ஆர்த்தியின் மனதில் ஒரு வித உணர்ச்சி ஏற்பட்டது."நல்லா இருக்கேன் அண்ணா",என்றாள்."ஆனந்த் உனக்கு என்னம்மா துரோகம் செய்தான்.சாக போன உன்ன காப்பாற்றி அடைக்களம் குடுத்தது தப்பா.நல்லா யோசிச்சு பாரு.அவன் உன்னை கட்டாய படுத்தினானா.நீயே தான அவன் கூடவந்த.அப்பவும் உன்னை பாதுகாப்பா பாட்டி வீட்டில் தானே தங்க வைத்தான்",என்றான் முத்து.
ஆர்த்தி சிறிது நேரம் யோசித்தாள்."நான் அப்படி அங்கே வருவதர்க்கு அவன் தானே காரணம்.வீட்டில் இருந்த என்னை மோதிரத்துக்காக கடத்தியது அவன் தானே",என்றாள்."அவன் உன்னை கடத்தியதை நீ பாத்தியா.இல்லை வேறு யாராவது பாத்தாங்களா",என்று கேட்டான்.அவள் மௌனமாக இருந்தாள்."உன்னை கடத்தியது ஆனந்த் இல்லை.அவன் கூட இருந்த ரவி.ஆனந்த் அன்னிக்கு உன் வீட்டில் திருடவே இல்லை.அவன் வேற வீட்டுக்கு தான் போயி இருக்கான்.அவன் திருடன் தான் ஆனால் பொய் சொல்ல மாட்டான்.",என்றான்.
ஆர்த்தி குழப்பமாக அவனை பார்த்தாள்."ஆமா ஆர்த்தி உன்னை கடத்தியது ரவி.ஆனந்துக்கு அதை பற்றி எதுவும் தெரியாது.கடைசியில் உன்னை பார்த்த போது திடுகிட்டான்.ஆனால் ரவிக்கு உன்னுடைய நகை தான் தேவை நீ இல்லை என்று தெரிந்தவுடன் நீ மயக்கம் தெளிந்து வீடு திரும்பி விடுவாய் என்ற நம்பிக்கையுடன் கிளம்பி வந்துவிட்டன்.அது தான் அவன் செய்த தவறு.வேறு எந்த தப்பான எண்ணமும் அவனுக்கு இல்லை.அவன் நல்லவன் ஆர்த்தி",என்றான் முத்து.
ஆர்த்திக்கு பிரம்மிப்பாய் இருந்தது.இத்தனை விஷயம் நடந்து இருக்கிறதா எனக்கு தெரியாமல் என்று நினைத்தாள்."ஆர்த்தி ஆனந்த் பாவம்.அவனை எப்படியாவது வெளியே கொண்டு வந்துரு",என்று கெஞ்சினான் முத்து."எங்களுக்கே ரொம்ப குழப்பமா இருக்கு பா.ஆர்த்தியுடைய அப்பாகிட்ட பேசீட்டு ஆக வேண்டியதை பார்க்கிறோம் ",என்றார் பாட்டி.முத்து நன்றி கூறி அங்கு இருந்து வெளியே சென்றான்.
YOU ARE READING
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...