2.

7.3K 221 4
                                    

"டேய் மச்சான் இன்னிக்கு சரியான வேட்டை டா",என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான் ரவி.

ஆனந்தும் முத்துவும் மதிய உணவுக்கு தயார் செய்து கொண்டு இருந்தனர்.

"என்ன டா சிக்கிச்சு இன்னைக்கு",என்று ஆர்வமாய் கேட்டான் ஆனந்த்.

"தங்க வலையல்",என்றான் ரவி.

முத்துவும் ஆனந்தும் அவனை அதிர்ச்சியாக பார்த்தனர்.ரவி ஒரு சிறிய பொட்டளத்தில் இருந்து இரண்டு சிறிய வலையல்களை

எடுத்து அவர்கள் முன் காட்டினான்.

"ரேஷன் கடையில் ஒரு அம்மா குழந்தையோடு நின்று கொண்டு இருந்தார்கள்.நான் அவர்களிடம் பேச்சு கொடுத்தேன்.என்னை நல்லவன் என்று நம்பி அவங்க குழந்தையை பாத்துக்க சொன்னாங்க.நான் வலையலை அடிசுட்டேன்",என்றான் மகிழ்ச்சியாக.

"ஏன் டா உங்களுக்கு இந்த திருட்டு பொளப்பு.கொஞ்சம் வருமானம் வந்தாலும் அது நேர்மையா இருக்கனும் டா",என்றான் முத்து.

"இப்படியே பழகி விட்டோம் முத்து அண்ணன் இனி மாத்திக்க முடியாது",என்றான் ஆனந்த் வருத்தமாக.

"ஆமாம் அண்ணே காசு பாத்து பழகீட்டோம்.இனி வேலைக்கு எல்லாம் போக முடியாது.இந்த காசு உன் வேலையில் கிடைக்குமா.அஞ்சுக்கும் பத்துக்கும் உன்ன மாதரி நாயா பேயா எங்களையும் அலைய சொல்லுரியா",என்றான் ரவி.

"டாய் எப்படியோ நாசமா போங்க டா.ஆனந்த் நீயாவது நான் சொல்லுரதை கேளு டா",என்றான் முத்து.

"அண்ணா நீயும் தான் இரண்டு வாட்டி எனக்கு வேலை வாங்கி கொடுத்த.ஆனா நான் திருடனா இருந்தவன்

என்று தெரிந்ததும் என்னை வேலையில் இருந்து துறத்திவிட்டார்கள்.விடு அண்ணே எனக்கு இது தான் தலை எழுத்து",என்றான் ஆனந்த்.

முத்து பெருமூச்சு விட்டு வேலையை தொடர்ந்தார்.

முத்து துப்புறவு தொழிலாளி.மிகவும் நல்ல குணமுடையவன்.நேர்மையாக வாழ வேண்டும் என்று ஆசை படுபவன்.அவன் ஒரு குப்பத்தில் வாழ்ந்து வந்தான்.குப்பத்தில் ஒரு நாள் தீ பிடித்த போது ஆனந்துடைய பெற்றோர் அதில் கருகி இறந்து போனார்கள்.ஆனந்த் ஆதரவு இல்லாமல் நின்ற போது முத்து தான் அவனுக்கு அடைக்களம் கொடுத்தான்.அதனால் அவனுக்கு ஆனந்த் மீது ஒரு தனி பிரியம் உண்டு.ஆனந்த் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடனாக மாறினான்.குழந்தைகள் பெண்களிடம் இருந்து திருட மாட்டான்.இருக்கும் சீமான்க‌ளிடமிருந்து திருடி இல்லாத ஏழை மக்களுக்கு தருவான்.மிகவும் நல்ல குணமுடையவன்.

ரவி பிறவி திருடன்.எந்த ஒரு பொருளை ஆசை பட்டாலும் அதை அடையாமல் இருக்க மாட்டான்.பேராசை பிடித்தவன்.

கல் நெஞ்சம் கொண்டவன்.மிகவும் மோசமானவன்.தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் பிறருக்கு குழி பறிக்க கூட தயங்க மாட்டான்.இவனுடைய குணம் முத்துவுக்கு பயத்தை தரும்.எங்கு இவனால் ஆனந்துக்கு எதாவது சிக்கல் வந்து விடுமோ என்று எண்ணுவான்.ஆனால் ஆனந்த் சொன்ன காரணத்தினால் அவனுக்கு தங்க இடம் கொடுத்து அவனை பொறுத்துக் கொண்டான்.

ஆனால் அவன் செய்ய இருக்கும் காரியத்தினால் இவர்கள் மூவரின் வாழ்க்கையும் மாற போவதை அவன் அறியவில்லை.

Note: Hai readers.Hope you all liked the beginning of this story.Give me your votes in each chapter so that I can give my best in the forth coming chapters.Also give me comments on this story.Keep reading.Thank you.

திருடிவிட்டாய் என்னைWhere stories live. Discover now