ஆர்த்தியின் படுக்கை காலியாக இருப்பதை பார்த்து நர்ஸ் அதிர்ச்சி அடைந்தாள்.உடனே டாக்டரிடம் சென்று சொன்னாள்.
"டாக்டர் அந்த புது பொன்ன கானோம்.எல்லா இடத்துலையும் பார்த்துவிட்டேன் ஆனால் காணவில்லை",என்றாள்.
"நீ தானே அந்த பொன்னு கூட இருந்த பத்திரமா பாத்துக்க தெரியாதா",என்று டாக்டர் அதட்டினார்.
"இல்லை டாக்டர்.அந்த பொன்னு முழிச்சு பாத்துச்சு.உங்கள கூப்பிடலாம் நு பாத்தேன்.அதுகுள்ள தண்ணீர் கேட்டுச்சு.நான் எடுத்துட்டு வந்து பார்த்தேன்.ஆனால் அவள் அங்கு இல்லை",என்று சொல்லி முடித்தாள்.
"சரி நான் பாத்துகிறேன்.நீ போய் வேலையை பாரு",என்றார் டாக்டர.
அர்ஜுன் மேசை மேல் தன் தலையை வைத்து படுத்து இருந்தான்.பக்கத்தில் ஆர்த்தியின் புகைப்படம் இருந்தது.அவன் அம்மா உள்ளே நுழைந்தாள்."அர்ஜுன் எந்திரி பா.இந்த பாலை குடி",என்றாள்.
"எனக்கு வேண்டாம் அம்மா",என்றான் அவள் முகம் பார்க்காமல்.
"தம்பி ஒரு வாரமா நீ சரியாவே சாப்பிட மாட்டேங்குர டா.எனக்கும் தான் வருத்தமா இருக்கு. நீ சாப்பிடாம இருந்தா ஆர்த்தி கிடைத்துவிடுவாளா",என்றாள் வருத்தமாக.
ஆர்த்தியின் பெயர் கேட்டவுடன் அவன் நிமிர்ந்து பார்த்தான்.கண்கள் கலங்கி இருந்தன.
அவனை இப்படி பார்பதர்க்கு அவளுக்கு சங்கடமாய் இருந்தது.
"நம்ம என்ன பா பன்ன முடியும்.அவங்க அப்பா தான் போலீஸ் கிட்ட எல்லாம் போக வேண்டாம் ,என் பெண்ணுடைய பெயர் கெட்டுவிடும் என்று சொல்லுராரே.நம்ம முடிந்த அளவு தேடிகிட்டு தானே இருக்கிரோம்.",என்றார் ஆறுதலாக.
"அவள் பிறந்தநாள் அன்றைக்கு என் காதலை சொல்லி சம்மதம் வாங்கலாம் நு இருந்தேன்.இப்படி ஆகும் என்று நான் நினைக்கவே
இல்லை ",என்று கூறி கதறி அழுதான் அர்ஜுன்.அவனை கட்டி அனைத்து சமாதானம் சொன்னாள் அம்மா.
YOU ARE READING
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...