ஆனந்த் காலையில் எழுந்து செய்திதாள் படித்துக் கொண்டு இருந்தான்.ஆர்த்தி அவனுக்கு காபி போட்டு கொண்டு வந்தாள்.அவன் சிரிப்புடன் அதை வாங்கிக் கொண்டான்.அவள் பாயில் அவன் அருகில் அமர்ந்து அவளுடைய காபியை குடித்துக் கொண்டு இருந்தாள்.அப்போது யாரோ அழைப்பு மணியை அடித்தார்கள்.ஆனந்த் யாரென்று பார்க்க சென்றான்.அங்கு ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள்.அவள் ஏதோ ஒரு முகவரியை ஆங்கிலத்தில் விசாரித்தாள்.ஆனந்த் அவள் கையில் இருந்த சீட்டை வாங்கி பார்த்தான்.ஆர்த்தி அவனை வேடிக்கையாக பார்த்தாள்.அந்த பெண்ணுக்கோ தமிழ் புரியவில்லை இவன் எப்படி சொல்ல போகிறானோ என்று எண்ணிக் கொண்டு இருந்தாள்.அவன் திடீர் என்று ஆங்கிலத்தில் பேச தொடங்கினான்.
தெளிவான ஆங்கிலத்தில் அந்த பெண்ணுக்கு முகவரியை கூறினான்.ஆர்த்தி அதிர்ச்சி அடைந்தாள்.ஒரு திருடனால் இவ்வளவு அழகாக ஆங்கிலம் பேச முடியும் என்று அவள் நினைக்கவே இல்லை.அவள் அவனை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு இருப்பதை அவன் கவனித்தான்.
"ஏன் அப்படி பாக்குரீங்க",என்றான் குழப்பமாக.
"நீங்க என்ன படிச்சு இருக்கீங்க",என்றாள்.
"அது எதுக்கு இப்போ",என்றான் சங்கடமாக.
"சொல்ல விருப்பம் இல்லாட்டி சொல்ல வேண்டாம்",என்றாள்.
அவள் செல்லமாக கோவப்படுவதை சிறிது நேரம் ரசித்தான்.
பின் சிரித்துக் கொண்டே"பி.காம் இறுதி ஆண்டு",என்றான்.அவள் கண்கள் இன்னும் அதிகமாக விரிந்தன.
"ஏன் அதுக்கு மேல படிக்கலையா",என்றாள்.
"இல்லை எனக்கு வசதி இல்லை.நான் அனாதை ஆன சமயம் அது",என்று கூறினான்.அவன் முகம் வாடி போனதை கண்டு அவள் மனம் உருகியது.
"கவலை படாதீங்க நீங்க அனாதை இல்லை.உங்களுக்கு நான் இருக்கேன்",என்று ஆறுதல் கூறினாள்.
ஆனந்த் ஒரு நொடி அதிர்ச்சி அடைந்தான்.ஒரு சிறு மகிழ்ச்சி வந்து அவனை தொற்றிக் கொண்டது.
"என்ன சொல்லரீங்க",என்றான்.
"உங்களுக்குஒரு நல்ல தோழியாக நான் எப்போதும் இருப்பேன்",என்றாள் தெளிவாக.ஆனந்தின் முகம் மீண்டும் வாடி போனது.
ESTÁS LEYENDO
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...
