ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.காயம் ஆழமாக இருந்ததனால் ஆப்பிரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டார்.ஆர்த்தி பதட்டமாக வெளியில் காத்துக் கொண்டு இருந்தாள்.முத்துவுக்கு முதல் உதவி செய்யப்பட்டது.
ஐஷ்வர்யா விரைந்து சென்று அர்ஜுனை பார்த்தாள்.அவன் தலையில் கட்டோடு படுத்து இருந்தான்."ஆர்த்தியை பற்றி ஏதாவது தெரிந்ததா",என்றான் அர்ஜுன்.
"இன்ஸ்பெக்டரோடு இப்போது தான் பேசினேன்.அந்த கும்பலை கைது செய்ததாக சொன்னார்.ஆனால் ரவி ஆனந்தை கத்தியால் குத்திவிட்டானாம்.அதனால் அக்கா அவரோடு ஆஸ்பத்திரி போயி இருக்காளாம்",என்றாள் ஐஷ்வர்யா.அர்ஜுன் சோகம் ஆனான்.அவனுக்கு ஆனந்தை பிடிக்காது என்றாலும் அவன் சாக வேண்டும் என்று அவன் நினைத்ததே இல்லை.அவனுக்காக மௌனமாக கடவுளை வேண்டிக் கொண்டான்.
"உனக்கு எதுவும் ஆகலையே",என்று கூறி கண் கலங்கினாள் ஐஷ்வர்யா.
அர்ஜுன் மெதுவாக அவள் கையை பிடித்து"உன் அன்பும் காதலும் இருக்கும் வரை எனக்கு எதுவும் ஆகாது",என்றான்.
"ஆர்த்தியை காதல் செய்துவிட்டு பின் எப்படி உன்னிடம் காதலை சொன்னேன் என்று நீ நினைக்கலாம்.உன் பாசத்தால் என் மனதை வென்றாய் ஐஷ்வர்யா.உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க எனக்கு மனம் இல்லை",என்றான்.ஐஷ்வர்யா வெட்கத்தில் தலை குனிந்தாள்.
4 மணி நேரம் கழித்து டாக்டர் வெளியே வந்தார்.
"ஆப்பிரேஷன் நல்லபடியா முடிஞ்சுது ஆனால் அவரை ஒரு மணி நேரம் கழித்து தான் ரூம்முக்கு கொண்டு வருவோம்.அப்போ நீங்க அவரை பார்க்கலாம்",என்றார் டாக்டர்.ஆர்த்தி
அவருக்கு நன்றியை கூறிவிட்டு மீண்டும் காத்து இருக்க துவங்கினாள்.ஒரு மணி நேரம் ஒரு யுகம் போல அவளுக்கு தோன்றியது.பதட்டத்தில் அவள் கைகள் நடுங்கின.ஆர்த்தி பொறுமையை இழக்க துவங்கினாள்.அவனை உடனே பார்க்க வேண்டும் போல இருந்தது.ஒரு வழியாக அவனை ரூம்முக்கு அழைத்து வந்தனர்.அவனை மெதுவாக மெத்தையில் படுக்க வைத்தனர்.ஆர்த்தி அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.சிறிது நேரம் கழித்து மெதுவாக தன் கண்களை திறந்தான்.
"இப்போ எப்படி இருக்கு.ரொம்ப வலிக்குதா",என்றாள் ஆர்த்தி.
"எனக்கு பரவாயில்லை.உனக்கு எதுவும் ஆகலையே",என்றான்.அவள் கண்களில் இருந்து நீர் வழிந்தது.இப்போதும் என்னை பற்றி தான் கவலை படுகிறான் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
"உன் உயிரை பொருட்படுத்தாமல் என் உயிரை காப்பாற்றினாயே ஏன்",என்றாள் ஆர்த்தி.
"என் உயிரே நீ தானே",என்றான் ஆனந்த்.ஆர்த்தி மனம் உருகினாள்.மெதுவாக அவன் கையை பற்றினாள்.
"திருட மாட்டேன் என்று எனக்கு வாக்கு குடுத்தாய்.ஆனால் அதை மீறிவிட்டாயே",என்றாள்.அவன் குழப்பமாக அவளை பார்த்தான்.
"ஆம்.திருட மாட்டேன் என்று சொல்லிவிட்டு என் மனதை திருடி விட்டாயே",என்றாள்.
ஆனந்த் அவள் கை மேல் தனது கையை வைத்து"இல்லை ஆர்த்தி திருடனாக இருந்த என்னை திருடியவள் நீ தான்",என்றான்.அவள் வெட்கத்தில் சிவந்து போனாள்.இருவரின் விழிகளும் காதலில் மூழ்க.அந்த இனிமையான நிமிடங்கள் அப்படியே உறைந்து போயின.
(முற்றும்)
Note:Hai friends.This s the end of this story.Hope you like the end.Thank you for your votes n comments.Keep encouraging me.Do tell me if you liked this end.See you soon with another story.It may take some time.Keep reading my other stories till then.Thank you.

أنت تقرأ
திருடிவிட்டாய் என்னை
عاطفيةதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...