சேட்டிடம் வாங்கி வந்த பணத்தில் ஆர்த்திக்கு ஆடை வாங்கி வந்தான் ஆனந்த்.
"பாட்டி! பாட்டி!",என்று வெளியே இருந்து அழைத்தான்.பாட்டி வெளியே வந்து எட்டி பார்த்தார்.
"இந்தா பாட்டி, அந்த பொன்னுக்கு புது துணி வாங்கீட்டு வந்திர்கேன்.",என்று சொல்லி நீட்டினான்.
"நீயே குடு பா.அந்த பொன்னு நேத்துல இருந்து சாப்பிடவே மாட்டேங்குது.நீ கொஞ்சம் ஆறுதல் சொல்லி சாப்பிட வை பா.நான் போயி சுள்ளி பொறுக்கீட்டு வந்தரேன்",என்றார் பாட்டி.
சரி என்று தலை ஆட்டிவிட்டு உள்ளே சென்றான்.ஆர்த்தி ஒரு மூலையில் சுவர் ஓரம் பாயில் குறுகி படுத்து இருந்தாள்.அதை பார்த்தவுடன் அவன் மனம் ஒரு நொடி இழகி போனது.பெரிய இடத்து பெண்.வசதியாக வாழ்ந்து இருப்பாள்.தன்னால் தான் இந்த நிலைமை என்று எண்ணி வருந்தினான்.ஏன் அவள் தன் வீட்டுக்கு போகவில்லை.அன்று என்ன நடந்தது என்று அவளை கேட்க வேண்டும் என்று தவித்தான்.ஆனால் எல்லா உண்மையும் தெரிந்தால் அவள் அங்கு இருக்க மாட்டாள்.
இதை விட அவளுக்கு ஒரு பாதுகாப்பான இடம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.அதனால் இப்போதைக்கு அவளிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தான்.அவள் அருகில் சென்று "ஏங்க ஏங்க",என்று அழைத்தான்.அவள் மெதுவாக கண் விழித்து பார்த்தாள்.ஆனந்தை பார்த்தவுடன் மெதுவாக எழுந்து உக்கார்ந்தாள்.கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது.அவளை தன் மார்பில் சாய்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று அவன் மனம் பதை பதைத்தது.
"உங்களுக்கு போட்டுக்க துணி வாங்கீட்டு வந்திர்கேன்.",என்று மெதுவாக கூறினான்.அவள் எதுவும் பேசாமல் தலையை குனிந்தாள்.அவன் அந்த பையை அவள் அருகில் வைத்தான்.
"உங்களுக்கு இங்கே இருக்க புடிக்கலைனா உங்க வீடு எங்க இருக்குனு சொல்லுங்க நான் உங்களை பத்திரமா கொண்டு போய் விட்டரேன்",என்றான்.
அவள் திடீர் என்று தேம்பி தேம்பி அழுதாள்.ஆனந்துக்கு சங்கடமாய் இருந்தது.ஒரு வாரம் ஆகியும் அவள் தன் வீட்டை தொடர்பு கொள்ளவில்லை என்றால் அங்கு செல்வதில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று அவன் நன்கு புரிந்து கொண்டான்."சரி நீங்க யாரு.உங்க வீடு எங்க.ஏன் நீங்க தற்கொலை பன்னிக்க முயற்சி செஞ்சீங்க இப்படி எதையுமே இனி உங்ககிட்ட கேட்க மாட்டேன்.உங்களுக்கு எப்போ சொல்லனும் நு தோனுதோ அப்போ சொல்லுங்க",என்றான் அவளை பார்த்து.இப்போது அவள் அழுகையை நிறுத்தி அவனை பார்த்தாள்.
"ஆனால் உங்க பேரு மட்டும் சொல்லுங்க.ஏங்க ஏங்க நு கூப்பிட கஷ்டமா இருக்கு",என்றான்.
அவள் எதுவும் பேசவில்லை."சரி உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் அதான் பெயர் கூட சொல்ல மாட்டேங்கரீங்க",என்றான் வருத்தமாக.
"புது இடத்தில் சாப்பிடவும் தங்கவும் கொஞ்சம் சங்கடமா தான் இருக்கும்.ஆனால் சாப்பிடாம இருந்தால் உங்க உடம்பு கெட்டு போய்விடும்.இன்னும் நம் வாழ்கையில் சந்திக்க வேண்டியது நிறைய இருக்கு.இதுக்கே சோர்ந்து துவன்டு போன எப்படி.எனக்காக இல்லை என்றாலும் பாவம் அந்த பாட்டிக்காகவாவது சாப்பிடுங்க",என்றான்.
அப்போது பாட்டி உள்ளே நுழைந்தார்.சுள்ளியை கொண்டு வந்து வீட்டின் ஒரு மூலையில் வைத்தார்.
"பாட்டி நான் பேசீட்டேன்.பசிக்கும் போது அவங்களே சாப்படரேன் நு சொல்லீட்டாங்க.நீங்க கவலைபடாம இருங்க.நான் கிளம்பரேன்",என்று கூறி அங்கு இருந்து வெளியேரினான்.
ஆர்த்தி அவன் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.இவனை நம்பலாமா இல்லை மற்ற ஆண்களை போல வேறு நோகத்தோடு தனக்கு உதவுகிறானா என்று எண்ணி குழம்பினாள்.
![](https://img.wattpad.com/cover/31156405-288-k835447.jpg)
YOU ARE READING
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...