24.

3.3K 137 3
                                    

ஐஷ்வர்யா கிளம்பி வெளியே வரும் போது அர்ஜுன் காரில் அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தான்.

"ஹாய் அர்ஜுன்.ஏன் இங்கே உக்கார்ந்து இருக்கீங்க.உள்ளே காத்துட்டு இருக்கலாமே",என்றாள்

."சும்மா தான்.சரி போகலாமா",என்றான் அவள் முகம் பார்க்காமல்.
அவள் சரி என்றாள்.வண்டி நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்றது.
இருவரும் இறங்கினார்கள்.உள்ளே சென்றார்கள்.நார்க்காளியில் இன்ஸ்பெக்டர் அமர்ந்து கொண்டு இருந்தார்.

"ஹலோ சார்.நாங்க இரண்டு பேரும் மாணவர்கள்.ஒரு கம்பளைன்ட் குடுக்க வந்து இருக்கோம்.",என்றான்.

"சொல்லுங்க என்ன விஷயம்",என்றார் இன்ஸ்பெக்டர் கமல்.

"சார் இவங்க பேரு ஐஷ்வர்யா.இவங்க அக்காவை கடந்த இரண்டு வாரமா காணவில்லை",என்றான்.

"ஓ எப்படி காணாம போனாங்க ",என்றார் கமல்.
அர்ஜுன் நடந்ததை விவரமாக விளக்கினான்.
அவர் பொறுமையாக கேட்டார்.

"அந்த பொன்னு கடைசியா போட்டு இருந்த உடையின் அடையாலம்.அப்புறம் வேறு எதாது அடையாலம் இருந்தா சொல்லுங்க",என்றார்.

"அக்கா நீல நிற சுடிதார் போட்டு இருந்தா.காணாமல் போன அன்னிக்கு அக்கா விரலில்  ஒரு வைர மோதிரம் போட்டு இருந்தாள்.",என்றாள் ஐஷ்வர்யா.

"அந்த வைர மோதிரம் எப்படி இருக்கும்",என்றார் கமல்.

"தங்க மோதிரத்தில் ஒரு பெரிய வெள்ளை கல் பதிக்கப்பட்டு இருக்கும்.",என்றாள்.
கமல் சிறிது நேரம் யோசித்துவிட்டு" செல்வம் இங்க வாங்க",என்றார்

"சொல்லுங்க சார்",என்றார் செல்வம்.

"அந்த ரவி கேஸ்ல ஒரு வைர மோதிரம் மாட்டுச்சே,அது நம்ம கிட்ட தானே இருக்கு.அதை கொண்டு வாங்க",என்றார்.
சிறிது நேரம் கழித்து அவர் அந்த நகைகளையும் மோதிரத்தையும் கொண்டு வந்தார்.

"சார் இதல்லாம் என் நகையும் என் தங்கச்சி நகையும் சார்",என்றாள் ஐஷ்வர்யா அதிர்ச்சியாக

."இதை பாருங்க",என்று
கூறி அவர் ஒரு மோதிரத்தை காட்டினார்.

"இது அக்காவோட மோதிரம் சார்.அவள் பிறந்த நாள் அன்று அப்பா பரிசாக குடுத்தார்.",என்றாள் கண்களில் நீர் ததும்ப.

"சரி இதை திருடியவன் பெயர் ரவி.அவன் இப்போது சிறையில் இருக்கான்.அவனை விசாரித்தால் தான் உங்க அக்காவை பற்றி தெரியும்.ஒரு கம்ப்ளைன்ட் எழுதி குடுத்துட்டு போங்க நான் விசாரிக்குறேன்.",என்றார் கமல்.

"ரொம்ப நன்றி சார்.நாங்க திரும்பி எப்போ வரனும் ",என்றான் அர்ஜுன்.

"நானே உங்களுக்கு போன் பன்னுறேன்",என்றார் கமல்.
நன்றிகளை கூறிவிட்டு இருவரும் அங்கு இருந்து கிளம்பினார்கள்.

இருவரும் காருக்குள் ஏறினார்கள்.

"இன்னும் இரண்டு மூணு நாட்களில் அக்கா கிடைத்து விடுவாள் யா. ,என்று கண் கலங்கினாள் ஐஷ்வர்யா.

"ஆமா எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா.நான் நினைத்தது நடக்கும் நாள் நெருங்கி விட்டது",என்றான் அர்ஜுன் சிரித்துக் கொண்டே.

"என்ன சொல்லுரீங்க",என்றாள் ஐஷ்வர்யா.

"ஆர்த்தி கிடைத்துவிட்டால்   என் காதலை சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி விடுவேன்.என் பல நாள் கனவு நினைவு ஆகிவிடும்",என்றான்.

அதை கேட்ட ஐஷ்வர்யாவின் கண்களில் நீர் அருவி போல வழிந்தது.

"என்ன ஆச்சு.ஏன் அழுகர.உனக்கு இதுல சந்தோசம் இல்லையா",என்று கேட்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவள் கண்களை துடைத்துக் கொண்டாள்.

"இல்ல இல்ல சந்தோசம் தான்.என் அக்காவுக்கு ஏற்ற ஜோடி நீங்க தான்",என்றாள்.
அவள் முகத்தில் தெரிந்த வலி அவனை பதற வைத்தது.
தன் காதலை மறைத்து தன் அக்காவுக்காக சந்தோஷ்படும் குணம் அவனை ஏதோ செய்தது.
அவன் மனதை உலுக்கியது..
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அவள் ஜன்னல் ஓரம் திரும்பி தன் துப்பட்டாவில் முகத்தை மறைத்து அழுது கொண்டு இருந்தாள்.
அதை கவனித்தும் கவனிக்காதவனை போல வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான்
மௌனமான பயனத்துக்கு பிறகு ஐஷ்வர்யாவை வீட்டில் இறக்கி விட்டு  கனத்த இதயத்தோடு கிளம்பினான் அர்ஜுன்
.இந்த கன்னாமூச்சி ஆட்டத்தில் ஜெயிக்க போவது யாரோ.

திருடிவிட்டாய் என்னைDonde viven las historias. Descúbrelo ahora