20.

3.5K 147 6
                                    

ரவி ,தான் வைர மோதிரத்தை திருடினான் என்று போலீஸிடம் ஒப்புக் கொண்டான் ஆனால் யாரிடமிருந்து திருடினான் என்னும் உண்மையை சொல்லவே இல்லை.எங்கே அதை சொன்னால் தன் மீது கடத்தல் கேஸையும் போட்டு விடுவார்களோ என்று பயந்து அதை மறைத்து விட்டான்.தன் மீது விழுந்த ஒவ்வொறு அடியும் இரு மடங்காக ஆனந்துக்கு  திருப்பி தர வேண்டும் என்ற வெறியை மட்டும் மனதில் விதைத்துக் கொண்டான்.
அவன் மீது இருந்த குற்றத்தை அவன் ஒப்புக் கொண்டதால் அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

        ஆர்த்தி எங்கே செல்வது என்று தெரியாமல் சாலையில் நடந்து கொண்டு இருந்தாள்.முதலில் தன் வீட்டுக்கு சென்று விடலாம் என்று நினைத்தாள் ஆனால் ஏனோ அவள் மனம் அவளை தடுத்தது.திக்கு தெரியாமல் நடந்து கொண்டு இருந்தாள்.பேருந்து நிலையத்தில் சென்று நின்றாள்.அவளிடம் பணம் எதுவும் இல்லாததால் அமைதியாக நின்று கொண்டு இருந்தாள்.வெகு நேரம் ஆகியும் எங்கே செல்ல போறோம் என்று தெரியாமல் நின்று கொண்டு இருந்தாள்.நேரம் ஆக ஆக வானம் இருட்டிக் கொண்டு வந்தது.அவளின் சிந்தனை ஆனந்தை நோக்கி பயணம் செய்தது.
திருடன் என்று தெரியாமல் இத்தனை நாள் அவனோடு இருந்துவிட்டேனே.இதுவரை தான் சாப்பிட்ட சாப்பாடு பல பேரின் கண்ணீர் துளி என்று நினைக்கும் போது அவள் உடல் சிலிர்த்தது.அமைதியாக போய் கொண்டு இருந்த தனது வாழ்க்கை திடீர் என்று தடம் புரண்டுவிட்டதை எண்ணி வருந்தினாள்.கடவுளே இதில் என் தப்பு என்ன.யாரோ செய்த தவறுக்கு நான் தண்டனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் என்று எண்ணி வருந்தினாள்.ஏதோ சத்தம் கேட்டு அவள் சிந்தனை கலைந்தது.

இருவர் அவள் அருகில் வந்து நின்றார்கள்.
"என்னம்மா எங்கே போகனும்.ரொம்ப நேரமா இங்கேயே நிக்குர",என்றான் ஒருவன்.

"மச்சி  யாருக்கோ  காத்துகிட்டு இருக்கு போல இருக்கு டா",என்றான் அவன் நண்பன்.

"அவன் வராட்டி என்ன.எங்க கூட வா மா",என்று கூறி அவளை நெருங்கினான்.

திருடிவிட்டாய் என்னைWhere stories live. Discover now