ஆர்த்தி வரும் விஷயத்தை போனில் வீட்டுக்கு தெரிவித்தாள் ஐஷ்வர்யா.வாசலில் வண்டி வந்து நின்றதும் லாவன்யா ஓடி வந்தாள்.ஆர்த்தியை பார்த்து கட்டி அனைத்தாள்.பாட்டி ஆரத்தியுடன் கதவு ஓரம் காத்துக் கொண்டு இருந்தார்.
"அக்கா ",என்று கூறி தேம்பி தேம்பி அழுதாள் லாவன்யா.
"மொதல்ல உள்ளே போகலாம் லாவன்யா.",என்றாள் ஐஷ்வர்யா.வசலில் பாட்டி கண்ணீருடன் ஆரத்தி எடுத்து ஆர்த்தியை வரவேற்றார்.
அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தார்கள்."அக்கா நீ என்கே அக்கா இருந்த இவ்வளவு நாள்.",என்றாள் லாவன்யா.ஆர்த்தி மௌனமாக இருந்தாள்.
"லாவன்யா அக்கா ரொம்ப சோர்வா இருப்பாங்க.இப்போ எதுவும் கேட்க வேண்டாம்.அவங்க போயி கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கட்டும்.",என்றான் அர்ஜுன்.ஆர்த்தி மெதுவாக மாடியில் இருக்கும் தனது அறைக்கு சென்றாள்.அவள் சென்ற பிறகு நடந்ததை பாட்டியிடம் கூறினார்கள்.பாட்டி நடந்ததை கேட்டு
அதிர்ச்சி ஆனார்."கடவுள் தான் நம்ப ஆர்த்தியை காப்பாற்றியது.கடவுளே இனி இந்த குடும்பத்துக்கு எந்த தீங்கும் வந்தர கூடாது",என்று பாட்டி புலம்பினார்.ஐஷ்வர்யா பாட்டியின் கையை பிடித்து ஆறுதல் கூறினாள்.
"சரி நான் வீட்டுக்கு கிளம்பறேன்.நாளைக்கு அம்மாவை கூட்டிகிட்டு வறேன்.அவங்க ஆர்த்தியை பார்த்தா ரொம்ப சந்தோச படுவாங்க.",என்று கூறி ஐஷ்வர்யாவை பார்த்தான் அர்ஜுன்.அவள் முகம் வாடிப் போனது.
"சரி பா போயிட்டு வா.உனக்கு நாங்க ரொம்ப நன்றி கடன் பட்டு இருக்கோம்",என்றார் பாட்டி.
"அப்படி எல்லாம் சொல்லி என்னை மூணாவது ஆள் ஆக்கீறாதீங்க பாட்டி.நான் எப்போதும் இந்த வீட்டுல ஒருத்தன் தான்",என்று கூறி கிளம்பினான் அர்ஜுன்.
ஆர்த்தி தன் அறையை சுற்றி பார்த்தாள்.ஒரு மாதம் முன்னாடி எவ்வளவு மகிழ்ச்சியாக வந்து படுத்தாள் என்று நினைத்து பார்த்தாள்.தன் விரலை ஒரு முறை பார்த்தாள்.அப்பா அந்த மோதிரத்தை
தன்னிடம் கொடுக்காமல் இருந்திருந்தால் அவள் வாழ்வின் மோசமான இந்த ஒரு மாதத்தை சந்தித்து இருக்க மாட்டாள்.மெதுவாக அவள் சிந்தனை ஆனந்தை நோக்கி சென்றது.அவனே கடத்திவிட்டு நல்லவனை போல அவனே காப்பாற்றினானே.என் வாழ்வை நாசமாக்கியவனை நான் திருத்தி
நல்வழிபடுத்த பார்த்தேனே.நான் எவ்வளவு பெரிய முட்டாள்.
அவனுடைய நோக்கம் என்னவென்றே தெரியவில்லையே.என்னிடம் நல்லவன் போல நடந்து கொண்டானே.அதல்லாம் நடிப்பா என்று எண்ணி குழம்பிக் கொண்டு இருந்தாள்.கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு எழுந்து உக்கார்ந்தாள் ஆர்த்தி.பாட்டி உள்ளே வந்தார் கையில் பாலோடு.

YOU ARE READING
திருடிவிட்டாய் என்னை
Romanceதிருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜு...